Tuesday, January 13, 2009

சில யோசனைகள் - தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் மேல் உண்மையான அக்கறை வர

 

      1.சுதந்திர தமிழ் ஈழத்தில் கோலிவுட்டின் கிளை ஒன்று நிறுவப்படும் என்றும்  முதல் படமாக 'ஒரு புலியின் ஓசை' என்று ஒன்று எடுக்கப்படும் என்றும் அதற்கான வசனம் எழுதும் பொன்னான வாய்ப்பு இன தலைவருக்கு வழங்கப்படும் என்றும் பிரபாவிடம் இருந்து உறுதிமொழி வாங்கி கொடுப்பது.


      2. ஈழத்தில் அவ்வளவு குடும்பங்களுக்கும் தொலைக் காட்சி பெட்டி ஒன்றும் அதற்க்கு  கலைஞர் டிவி இணைப்பும் கொடுக்கப்படும் என்றும் உறுதியளிப்பது.


     3. இலங்கை தூதர் அம்சாவின் வங்கி கணக்குவழக்குகளை தெரிந்துகொண்டு அவர் காங்கிரசாருக்கு தரும் பணத்தை விட ஒரு ரூவாய் அதிகமாக நாமே காங்கிரசாருக்கு கொடுப்பது.


     4. தமிழ் ஈழம் மலர்ந்தால் மட்டுமே அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் வாய்ப்புக்கள் இருப்பதாக கேரளா ஜோதிடர்களை விட்டு அம்மாவிடம் சொல்ல சொல்வது.


    5.தமிழ் ஈழம் மலர்ந்த பின்பு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும்,  புலிகளின் கட்சி பாமாக விற்கு திமுக வை விட அதிக இடங்களை ஒதுக்கும் என்றும் உறுதிமொழி தருவது.


    6. மதிமுக உலகில் எந்த மூலையில் எந்த தேர்தலில் போட்டி போட்டாலும்  தேர்தல் செலவுகளை எத்தனை கோடி ஆனாலும்  ஈழ அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி மொழி அளிப்பது


    7. பாரதியும் ஜீவாவும் தமிழீழத்தை ஆதரித்தே வந்துள்ளார்கள் என்று சான்று கண்டுபுடித்து கம்யுனிஸ்ட்களிடம் சொல்லிவிடுவது

    8. ஈழத்தில் ஒவ்வொரு ஊரிலும் தாங்கள் விரும்பிய இடத்தில் கல்யாண மண்டபம் கட்டிக்கொள்ளலாம் என்றும் அதை இடிக்கும் அதிகாரம் யாருக்கும் எப்பவும் கிடையாது என்று கட்சி நடத்தும் நடிகர்களிடம் உறுதி மொழி அளிப்பது.

Monday, January 12, 2009

பிரதமருக்கு கடிதம் எழுதும் பரிதாபம் ...

மீனவர்கள்  சுடப்பட்டாலும், சேது சமுத்திரம் உள் வாங்கினாலும், ஈழம் அழுதாலும்  நமது மாநில முதல்வர் எப்பொழுதும்  பிரதமருக்கு கடிதமே  எழுதுகிறார். மினஞ்சல், தொலை பேசி, பாக்ஸ் எல்லாம் வேலை செய்யாதா என்று அப்பாவியாய் கேள்வி கேட்கும் பொது மக்களுக்காக இந்த பதிவு !!!

 

பண்புகள் கடிதம் மினஞ்சல்

புதிய தொழில்நுட்பங்களால் நாளுக்கு நாள்  சேவை சிறப்பாக மாற்றப்படுமா ?

X

முற்றிலும் நம்பக தன்மை மற்றும் பாதுகாப்பு  உறுதியானதா  ?

X

டெல்லிக்கு உடனடியாக சென்றடையுமா ??

X

மின்சாரம் இல்லாமல் வேலை செய்யுமா ?

X

Thursday, January 08, 2009

Rajapaksa email hacked

கடின முயற்சிக்கு பின் ராஜபக்ச வின் மின்னசலை ஹேக் செய்து உங்களுக்கு தந்துள்ளேன் .


குறிப்பு :
பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லை. கெட்ட வார்த்தை - தரக்குறைவு வார்த்தைகள் இல்லாமல் புகுந்து விளையாடவும்.

Wednesday, January 07, 2009

கலைஞர் அவர்களின் - 'To do list'

எண்

நிலைமை

செயல்

1

முடிக்கப்பட்டது

நெடுமாறன், கொளத்தூர் மணி, திருமா மற்றும் பல தலைவகள் கடின முயற்சிக்கு பின் உருவாகிய ஈழ ஆதவரை அனைத்து கட்சி கூட்டம் - எம்பி ராஜிநாமா தீர்மானம் மூலம் ஈழ ஆதரவை தி மு காவிற்கு உபயோகி.

2

முடிக்கப்பட்டது

கனிமொழியிடம் ராஜினாமா கடிதம் வாங்கி மகளுக்கு பெருமை சேர்

3

முடிக்கப்பட்டது

பிரணாப் முகர்ஜியிடம் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தி மு க எம்பி மூலம்; ஈழத்துக்கு ஆதரவு மனித சங்கிலியில் கட்டப்படும் என்று உறுதி அளித்து தி மு க அமைச்சர்களை குசிபடுத்து; அதிகாரத்தை தக்கவை

4

முடிக்கப்பட்டது

ஈழ ஆதரவுக்காக உரையாற்றுபவர்கள் எல்லாம் சிறையில் அடை.

5

முடிக்கப்பட்டது

சாக பிழைக்க எஞ்சி இருக்கும் மக்களுக்கு உதவி பொருள் அனுப்பு

6

முடிக்கப்பட்டது

கிளிநொச்சியை கைப்பற்றும் வரை காத்திரு.

7

நடந்து கொண்டிருக்கிறது

இந்திய கப்பல் படையை இலங்கை ராணுவத்துக்கு அனுப்பி முல்லை தீவையும் பிடிக்க உதவி செய்.

8

நடந்து கொண்டிருக்கிறது

கிளிநொச்சி வீழ்ந்ததும் ரா விமானத்தை அனுப்பி புலி தலைவர் இருக்குமிடத்தை புகைப்படம் எடுக்க சொல்.

9

திட்டமிடல்

பிரபாகரன் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் இரங்கல் கவிதை எழுது.

10

திட்டமிடல்

பிரபாகரன் புடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி போராட்டம் நடத்து

11

திட்டமிடல்

தமிழ் ஈழம் இலங்கை வசமாகும் வரை காத்திரு

12

திட்டமிடல்

மொழி உரிமை, தண்ணீர் உரிமை மற்றும் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் பார்ப்பன பணியா கும்பலால் ஆளப்படும் தமிழக தமிழனை போல இலங்கை தமிழனையும் உருவாக்கு.

13

திட்டமிடல்

தமிழக தமிழன் பாடட்டும் ஜன கன மன கதை நாயக ஜெஎகே;

இலங்கை தமிழன் பாடட்டிம் சிறி லங்கா மாதா அப சிறி லங்கா .....

Monday, January 05, 2009

சில அரசியல் கவுஜைகள் - டமிளர்களுக்காக - 1

மத்திய அரசு அமையும் போது
டெல்லியில் முகாம்;
மீனவன் செத்தாலும் ஈழவன் செத்தாலும்
நடப்பது கடித முகாம் !!

******************************

கம்பன் வீட்டு கட்டு தறியும்
கவி பாடும்.
கலைஞர் வீட்டு கட்டிலுக்கும்
பதவி வேண்டும்.

***********************
போயஸ் தோட்டத்துக்கும்
கோபால புரத்துக்கும்
சில நூறு மீட்டர் இடைவெளி.
அது இல்லாமல் போய் நாட்கள் பல !!

********************
சன் டி வி போனதும்
கலைஞர் டி வி.

முரசொலி மாறன் போனதும்
தயா நிதி.

கேபிள் டிவி அரசுடைமை என்றதும்
கவர்னரிடம் மனு.

வயதானதாலே ஒதுங்கல் என்றதும்
செருப்பு மாலையாய் பதில்.

அதிகார பீடம் அசையும் பொழுதெல்லாம் வேகம்.
மக்கள் கூட்டம் சாகும் பொழுதுதெல்லாம் மிதம்.
ஆப்டர் ஆல் இலவச பொறுக்கி!!!

************************************

தண்ணீர் தராவிட்டால்
எலிக்கறி
நஞ்சை பொய்த்தால்
கஞ்சி தொட்டி
மின்சாரம் இல்லாவிட்டால்
யு பி எஸ்
சாத்திய கதவுகளுக்கு போராடாமல்
த்றந்த ஜன்னல்களுக்கு விசிலடிப்போம்

**************************************

சுதந்திரம் வாங்கி அறுவது ஆண்டு
காங்கிரஸ் ஆண்டது அம்பதாண்டு
வறுமை கோட்டுக்கு கீழே முப்பது கோடி
பிழைக்க வழி இல்லாமல் பல கோடி
தீர்க்க வக்கில்லாதவன் விடிய விடிய பேசுவது ராசீவ் மரணம்.

****************************************

புலிகளை மன்னிக்க மாட்டோம்
காங்கிரஸ் கத்திய காட்டு கத்தில்
மறந்தே போனது போபர்ஸ்

*********************************************

வெளியுரவ அமைச்சர் முகர்ஜியாம் ;
அதிர்ச்சி தகவல்.
அப்ப ஹிந்து ராமின் பதிவி பறிப்பா ??

**********************************************
-இப்படிக்கு,
மளிகை கடையில் உப்பு வாங்க மறந்த
கையாலாகத தமிழன்.

குறிப்பு :
பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லை. கெட்ட வார்த்தை - தரக்குறைவு வார்த்தைகள் இல்லாமல் புகுந்து விளையாடவும்.