Friday, December 21, 2007

பில்(லா) - மற்றுமொரு விமர்ச்சனம்

1. நல்ல source ( matrix, pulp fiction, god father, good fellas, tomb rider அப்புறம் முக்கியமா need for speed, vice city )
2. அழகிய கவர்ச்சியான பெண்கள்
3. கண்களை கவரும் locations
4. எல்லோருக்கும் நேர்த்தியான costume. (குளிக்கும் போது கூட தலைவர் தலைவி எல்லாம் sun glass போட்டு தான் குளிப்பாங்களா?)
5. நல்ல பிளாஷ் programming
6. சிறந்த ஒளிப்பதிவு
7. DTS, dolby etc..

எல்லாம் குரங்கு கையில் கொடுத்த மாலை !!!
ஹைதர் அலி காலத்து (இல்லாத) கதை. புளிச்சு போன டபுள் ஆக்ட்.

முன் குறிப்பு :

Theater க்கு சென்று டிக்கட் counter-ல் ticket விலை 80 ரூபாய் என்று சொன்னதால் , முதலில் அதிர்ச்சி அடைந்து, பின் அது அங்கு விற்கும் முட்டை போன்டா வை விட இரு மடங்கு விலை தான் என்று மனசை திடப்படுத்தி டிக்கெட் counter நோக்கி சென்ற பொழுது டிக்கெட் வாங்காமல் திரும்பிய புண்ணியவான் சொன்னது " quarter-re 60 ரூவாக்கு வித்துட்டு இருக்கான். இதுல எந்த கேனப்பயலவது 80 ரூவாக்கு டிக்கெட் வாங்குவானா ?"

பின் குறிப்பு :

இண்டேர்மிச்சின் என்று படத்தில் எழுத்து போட்ட பொழுது அஜித் தின் தலைக்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. நாங்களும் பறந்துவிட்டோம் .
வெளியே வந்த பொழுது என் நண்பர் சொன்ன கமெண்ட் " இத ஒரு பவர் பாயிண்ட் presentation-ஆவே பண்ணி இருக்கலாமே. இத ஏன் படமா எடுத்து நம்ம உயிரை எடுக்குரானுங்க ?"

Tuesday, December 04, 2007

செல்போன் சார்ஜர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடும் அபாயம்


நீங்கள் Electronics Engineer என்றால் இதை படிக்க வேண்டாம் .
நீங்கள் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி படித்தவர் என்றால் இதை படிக்க வேண்டாம் .
நீங்கள் எழுத படிக்க தெரியாதவர் என்றாலும் இதை படிக்க வேண்டாம்.



பின் குறிப்பு :

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஸ்டாம்ப் சைசில் கருப்பு வெள்ளை படம் போட்ட தினகரன் நமது புதிய விஞ்ஞானிக்கு போடப்பட்ட படம் இங்கே




செய்தி : தினகரன் , பக்கம் 5 , 14/12/2007( நீங்கள் மறந்தும் கூட படிச்சு தொலைச்சுட கூடதுன்ற எண்ண்த்துல )

Monday, August 06, 2007

ராமன் பாலமும் நம்ம கேள்வியும்

திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கனு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோனு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/


ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசஙக. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவபட்டு என் 'டவுட்' அ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிரேன்.

ராமன் கட்டின பாலத்த சேதபடுத்த கூடாதுன்டு சொல்லுரது சரிதானுங்க. அதே மாதிர் கங்கை ஆத்துல இருக்குர அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லனுமுங்க. கங்கை சிவ பெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாஙக ? அத எப்படி அனை கட்டி தடுக்கலாமுங்க ?
நீங்க அதுக்கு ஒரு வெப் சைட் பொடனுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்னிய ஆத்துல பொனத்த போடகோடாதுனாவது நீங்க சொல்லனுமுஙக.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."
எங்க அனுமாரு பசங்ககளை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விபட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலாம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாங்காலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குரமதிரி கட்டமுடியல! ஒரு பாலத்த கூட ஒழுங்காகட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISI ட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க ?
பொன்டட்டிய பத்திரமா பார்த்துக்கதெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மயா எதிர்க்கமுடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேர....

"environmental impact"
சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியபோதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுர ப்ரோஜக்ட் பாதிர் ப்ரோஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளம்பனும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டனும்... இன்னும் எம்புட்டோ பெரிய ப்ரட்சனை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் யேனுங்க நீங்க அடக்கி வாசிக்கிரீங்க. ?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"
இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க.
உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்னியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்' நு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குராங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்....காச குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க ?

Wednesday, May 09, 2007

வடிவேல் கமென்ட்.....

வாரிசு....




அட ங்கொக்கா மக்கா.... இம்புட்டு சர்வே எடுத்த் பய புள்ளைஙக, " வாரிசு அரிசியல் நமக்கு வேனுமா வேனாமானு" ஒரு சர்வே எடுக்க கூடாது ??

Wednesday, April 25, 2007

அவாளின் வரலாறு...!

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்

அவாள் என்னமும் எழுதட்டும் ஓய்!

இவர்களை போன்றவர்களை அடையாளப்படுத்துவதற்க்குத் தான் பெரியார் தமிழன் என்பதற்க்கு பதிலாக 'திராவிடன்' என்னும் சொல்லை உபயோகப் படுத்த சொன்னார். தமிழ் - தமிழன் எனும் போர்வையில்,
தமிழனின் வரலாறு, கலாச்சார, இன, மொழி அடயாளங்களை அழிப்பதும் மறுப்பதுமே இவர்களின் முழு நேர வேலை.

ஆ.வி, சுஜாதா, தினமல(ம்)ர், இந்து போன்றவைகள் இதற்க்காகவே ப்ரம்மனின் தோளிள் இருந்து படைக்கப்பட்டவை. அவைகளை தொடுவது தீட்டு என்பதை திராவிடர்கள் உணர வேண்டும்.