Tuesday, February 10, 2009

விளிம்பு நிலை - களிம்பு நிலை மனிதர்களாம் !!!

நானும் இதோட ஏழு எட்டு 'நான் கடவுள்' விமர்சனம் படிச்சிட்டேன் - வலையில !! எல்லோரும் ஒரே மாதிரி விளிம்பு நிலை மனிதர்கள்-னு வாக்கியத்துக்கு வாக்கியம் எழுதுறானுங்க !! அது என்ன விளிம்பு நிலைனு யாராச்சும் சொல்லுங்கப்பா ??

இது என்ன புது ஜாதியா ?? கோடி கோடியா செலவழிச்சு நிலாவுல பலூன் விடுற அரசாங்கம், சுடுகாட்டு கூரைல இருந்து சவபெட்டி வரை கொள்ளை அடிக்கும் அரசாங்கம் உருவாக்கி வச்சிருக்கும் 'தாரள மயமாக்கல்' மற்றும் 'மூட நம்பிக்கைகளின்'
வாரிசான இந்த ஏழை எளியோருக்கு - பிட்சைகாரர்களுக்கு இப்ப புதுசா ஒரு பட்டம் "விளிம்பு நிலை" மனிதர்கள் !!

ஒரு சக மனிதனை மனிதனாக கூட மதிக்காமல் - அவனது உடல் ஊனத்தை கிண்டளைடிப்பதும், உதாசீன படுத்துவதும், சமூகத்தில் இருந்தே புறக்கணிப்பதையும் செய்துவரும் நம்மால் உருவாக்கப்படும் அவர்களுக்கு - நாம் அவர்களை விளக்கமாராக மாற்றிவிட்டு பின் அணிவிக்கும் பட்டு குஞ்சம் 'விளிம்பு நிலை மனிதர்கள்'.

"கோயில் உள்ள விடலாட்டி என்ன, அவங்களுக்குன்னு தனி கோயில் கட்டிட்ட போச்சு" னு விளக்கமளித்த காந்தி எப்படி சூத்திரர்களை ஹரிஜனம் சொன்னாரோ அதே மாதிரி தான் இந்த விளிம்பு நிலை மனிதர்கள் வார்த்தையும்.

இப்ப இருக்குற பொருளாதார சூழ் நிலைல - ஒபாமா அடுச்சு தள்ளுற பணத்துல - அண்ணன் மன்மோகன் சிங் புண்ணியத்துல சீக்கிரம் நம்மளும் அந்த விளிம்பு நிலைக்கு நம்மளும் வந்துடுவோம்றது எம்புட்டு தூரம் உண்மையோ ...!!! பயமா இருக்கப்பா !!!

வாழ்க வார்த்தை விளையாட்டுகள் !!!

0 comments: