Thursday, May 28, 2009

அழகிரி அண்ணன் Vs மன்மோகன் சிங்

அழகிரிக்கு அமைச்சர் பதவி என்றதும் "பாரத" தேசமெங்கும் கார்டூன்கள் வெளியாகின்றன !! அவர் என்ன அவ்வளவு மோசமானவரா ?

படம் 1: 2009 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள்


படம் 2: இதுவரை கலந்துகொண்ட மக்களவை தேர்தல்களும் அதில் பெற்ற வெற்றியும்




படம்
3: குடியிருப்பும் உறுப்பினராக இருப்பதும்


பின் குறிப்பு:
இது
வாரிசு அரசியலுக்கோ அல்லது தி. மு .க விற்கோ ஜால்ரா அடிக்கும் உடன் பருப்புகளின் பதிவு அல்ல. பாராளுமன்ற மேலவை போன்ற கொள்ளை புறத்து மக்கள் விரோதிக்காக வரையப்பட்டதே.

Wednesday, May 20, 2009

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

திருத்த முடியாத தமிழனே, "இது யாராலயும் கண்டுபிடிக்க முடியாத பொய்" என்று நினைத்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் தலைவர் உடல் என்று ஏதோ சோளக்காட்டு பொம்மை போன்ற ஒன்றை காட்டிக் கொண்டிருக்கிறது? அந்த இரண்டு நிமிட செய்தி காணொளியை பார்த்தபின் நமக்கு பத்து வினாடிகளில் தோன்றிய நாப்பது சந்தேகங்களும் சிங்கள ஆட்சியாளனுக்கு வராமலா போயிருக்கும் ??

அவர்களுக்க தேவை நம் சிந்தனையை - போராட்ட திசையை மற்ற வேண்டிய - வலுவிழக்க செய்யவேண்டிய செய்திகள். பரபரப்பு செய்திகள். அதற்காக அவர்கள் எந்த செய்தியையும் பரப்புவார்கள். அவர்கள் என்ன உண்மை செய்தியை மட்டுமே வெளியிடுவோம் என்று நம்மிடம் சத்தியம் செய்து கொடுத்தார்கள ?

சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள் என்று புரளி கிளப்பி, நமது உலக போராட்த்திற்கு ஒரு தடைக்கல் வைத்தான்.

கடைசி நாள் தாக்குதல்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியையும், நடேசன் போன்ற அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியையும் வலுவிழக்க செய்யவேண்டுமானால் அவர்கள் தனி ஈழம் தயார் என்று கூட செய்தி சொல்லுவார்கள். சின்ன கோடு, பெரிய கோடு தத்துவமும் தெரியாதா ?

இப்பொழுது நாம் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இன்றி அவர்களின் நிவாரணத்துக்காக போராட்ட சிந்தனை இன்றி, படுகொலை செய்யப்பட்ட மற்ற தலைவர்களை பற்றிய செய்திகளை எளிமைப்படுத்தி இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ பரிசோதனை சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கிறோம். அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.