1. நல்ல source ( matrix, pulp fiction, god father, good fellas, tomb rider அப்புறம் முக்கியமா need for speed, vice city )
2. அழகிய கவர்ச்சியான பெண்கள்
3. கண்களை கவரும் locations
4. எல்லோருக்கும் நேர்த்தியான costume. (குளிக்கும் போது கூட தலைவர் தலைவி எல்லாம் sun glass போட்டு தான் குளிப்பாங்களா?)
5. நல்ல பிளாஷ் programming
6. சிறந்த ஒளிப்பதிவு
7. DTS, dolby etc..
எல்லாம் குரங்கு கையில் கொடுத்த மாலை !!!
ஹைதர் அலி காலத்து (இல்லாத) கதை. புளிச்சு போன டபுள் ஆக்ட்.
முன் குறிப்பு :
Theater க்கு சென்று டிக்கட் counter-ல் ticket விலை 80 ரூபாய் என்று சொன்னதால் , முதலில் அதிர்ச்சி அடைந்து, பின் அது அங்கு விற்கும் முட்டை போன்டா வை விட இரு மடங்கு விலை தான் என்று மனசை திடப்படுத்தி டிக்கெட் counter நோக்கி சென்ற பொழுது டிக்கெட் வாங்காமல் திரும்பிய புண்ணியவான் சொன்னது " quarter-re 60 ரூவாக்கு வித்துட்டு இருக்கான். இதுல எந்த கேனப்பயலவது 80 ரூவாக்கு டிக்கெட் வாங்குவானா ?"
பின் குறிப்பு :
இண்டேர்மிச்சின் என்று படத்தில் எழுத்து போட்ட பொழுது அஜித் தின் தலைக்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் பறந்தது. நாங்களும் பறந்துவிட்டோம் .
வெளியே வந்த பொழுது என் நண்பர் சொன்ன கமெண்ட் " இத ஒரு பவர் பாயிண்ட் presentation-ஆவே பண்ணி இருக்கலாமே. இத ஏன் படமா எடுத்து நம்ம உயிரை எடுக்குரானுங்க ?"
Friday, December 21, 2007
பில்(லா) - மற்றுமொரு விமர்ச்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கடுமையாகக் கடுப்பாகியிருப்பதாகத் தெரிகின்றதே! :)
அடாது மழையில், காடு - மலை எல்லாம் கடந்து , 1/4 காசை தியாகம் செய்து, வியர்வை - பீடி - சிறுநீர் நாற்றத்தில் வரிசையில் நின்று, மயக்கம் போட்டு விடக்கூடாது என்பதால் கழிப்பிடம் போகாமல் சிறுநீர் அடக்கி, கண்ட 'ரசிக' கஸ்மாலம் என்று அவப்பெயர் வாங்கி, 20 க்கும் மேலான censor செய்யப்பட்ட விளம்பரம்களை பார்த்து தொலைத்து, சாராய நாற்றத்தில் அருகில் இருந்த குடிமகானை சகித்து கொண்டு படம் பார்க்க போனால் .......
அவ்ளே மோசமா படம்? download கூட செய்து பார்க்க வேண்டாம் போலிருக்கிறது?
இதெல்லாம் என்ன பிரமாதம், நான் இதைவிட அல்லோல கல்லோலப்பட்டு பீமா படத்தை பார்த்தேன்...
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய ரவுடிக்கதை... மூண்றரை மணி நேரம்... முதல் நாள் காட்சி... வெளியேரவும் வழியில்லை...
//இதெல்லாம் என்ன பிரமாதம், நான் இதைவிட அல்லோல கல்லோலப்பட்டு பீமா படத்தை பார்த்தேன்...//
உனக்கு என்னப்பா நீ ஆயுள் காப்பீடு எல்லாம் வச்சிருக்க... risk எடுக்கலாம்.
ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி... இருந்தாலும் பீமா பாக்குற அளவுக்கு ரிஸ்க் எடுத்தது எனக்கே கொஞ்சம் ஒவராத்தான் தெரிஞ்சது!
நம்மூர்ல அயுள் காப்பீடு கொடுக்கும் மக்கள் அடிக்கும் கூத்து பயங்கர காமடியா இருக்கும்... செத்தவனோட ஆவியே வந்து "யோ நான் தான்யா செத்தது"னு சொன்னால் கூட நம்ம பயபுள்ளைக இல்லைனு நிரூபிச்சுறுவாய்ங்கல்ல!!
பில்லா படம் நல்ல படம் 2 மணி நேரத்துல முடிஞ்சிருதாம்ல??
Post a Comment