சுஜாதா அவர்கள் இறந்து பல நாட்கள் ஆன பின்னரும், இன்னும் அவரது மறைவுக்கு வருத்தப்பட்டு வரும் புதிய பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் அதிக பேர் தாமதமாக பின்னூட்டமிடுவதால் மீண்டும் மீண்டு முகப்பில் இந்த பதிவுகளே இடம்பிடிக்கின்றன .
இதை தவிப்பதர்க்க்காக அவரது ரசிகர்களுக்கு இந்த பதிவு. இதில் உள்ள வரிகளை உபயோக படுத்தி விரைவாக பதிவோ அல்லது பின்னூட்டமோ போட்டு விடவும். கோடிட்ட இடங்களை உங்களுக்கு தகுந்தவாறு பூர்த்தி செய்யலாம்.
நண்பர் மன்வேட்டியன் பதிவு இன்னும் தமிழ்மணத்தில் வராததால் பொறுமை இழந்து என்னை ரிலீஸ் பண்ண சொல்லுறார்.
திட்ட போகும், பாராட்ட போகும் எல்லாரும் அவரது பதிவுலே திட்டவும். 18-35 வயசுக்குள் இருக்கும் அழகான பெண்கள் என் பதிவிலேயே திட்டலாம் , பாராட்டலாம்.
http://manvettiyan.blogspot.com/2008/03/blog-post_06.html
___________
யப்பா சாமி.... இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா சாமி...
சுஜாதா சார் செத்து ரெம்ப நாள் ஆயபோசுடா... ரெண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியே கிட்டக்க வந்துடுச்சு ... இவனுங்க இன்னும் இரங்கல் கூட்டம் நடத்திட்டு இருக்கனுங்க..
ரெம்ப பேரு திருப்பி திருப்பி எழுதுறீங்க... பின்னோட்டம் போடுறீங்க...அதனால இந்த மேட்டர் தான் திருப்பி திருப்பி தமிழ்மணம் காட்டுது ...
உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் தரேன்.
1. சுஜாதா சாரை நான் _____________ பார்த்து உரையாடிய போது அவர் எளிமையும் அறிவையும் ஒரு சேர தாங்கி பிடித்திருப்பது தெரிய வந்தது
( ஏரோ பிளனில், வாசிங்க்டன் சாப்பிங் சென்டரில், மெரினா பீச்சில், டாய்லெட் டில்)
2. அவர் தமிழ் எழுத்துலகின் _____________________
( சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜேம்ஸ் ஹர்ட்லே செஸ் , போரிஸ் பேக்கர், மைக் டைசன் ..)
3. அவரது எழுத்துக்களை நான் __________________ முதலே படித்து வருகிறேன்
( எட்டாம் வகுப்பு மூன்றாம் முறையாக படித்த காலத்திலேயே, பல்வாடியில் சேர்ந்த பொழுது, கல் தோன்றி முன் தோன்ற காலத்தே )
4. அவர் ஒரு __________________
(சகல கலா வல்லவன், எழுத்தையும் தாண்டி நின்றவர், எழுத்துக்கு முன்னடி நின்றவர் , டென்னிஸ் விளையாட்டு வீரரும் கூட, )
5. எனக்கு ___________ ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம்
( கணினி மீது, கல்குலட்டேர் மீது, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு பிரேமா மேல் , யாஹூ சாட்டில் )
6. அவரது எழுத்துகளை எனக்கு மிகவும் பிடித்தது _________________
( கற்க கசடற, என் இனிய சந்திரா, கொச்சை கயிறு, பிரிப்போம் சந்தி சிரிப்போம், க-நாவில் அவர் புள்ளி வைத்து அதை க்க்-கனாவாக மாற்றும் அழகு )
7. கதை எழுதுவதில் மட்டும் அல்ல, அவர் ___________ மிக திறமையானவர்.
( கவிதை எழுதுவதிலும் , கைவித்தையிலும் , நாடகம் எழுதுவதிலும் , நகம் கடிப்பதிலும், தம்பிராஸ் மாநாட்டில் பேருரை ஆற்றுவதிலும் )
8. சுஜாதா அவர்களின் அருமையான படைப்புக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் ________________ இருந்தன என்பது குறிப்பிட தக்கது .
( அவரது அலுவலகத்துக்கு கீழ் இருந்த பெரிய ஆங்கில புத்தக கடை, BSNL லோ BEL லோ கொடுத்த OC இன்டர்நெட் கனக்சன், அவருக்கு வாசகர்கள் அனுப்பிய கேள்வி கணைகள் )
9. அவரது கதைகளை வார இதழ்களில் படிக்கும் போது நான் ஒவ்வொரு வாரமும் மிகவும் ஆவலுடன் தேடுவது ___________
(வசந்த் பேசும் வரிகள், அரஸ் அவர்கள் வரைந்த கவர்ச்சி படங்கள், 'முற்றும்'.)
10. அவரது ___________ தமிழகத்திற்கு பெரும் துன்பம்
( இறப்பு, பிறப்பு, சினிமா வசனங்கள்...)
சீக்கிரம் பில் அப் பண்ணி எல்லாரும் இன்னிக்கு நைட்டுக்குல பதிவு போட்டுரங்க.
நாளைல இருந்து நம்ம வழக்கமான மொக்கைக்கு போய்டலாம்..
Saturday, March 08, 2008
சுஜாதா சார் ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்லேட்...- சுட்ட பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எல்லா டெம்ப்ளேட்டும் கலக்கல்... :-)
குறிப்பாக,
//எனக்கு ___________ ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம்
( கணினி மீது, கல்குலட்டேர் மீது, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு பிரேமா மேல் , யாஹூ சாட்டில் )//
இது சூப்பர்!!
ஆகா! அருமை.
ஏன்பா, என் பக்கத்து சீட்டில் உள்ள ஒரு 35.5 வயது இளைஞி பின்னூட்டமிட அனுமதி கேட்கிறாள். கிடைக்குமா??
[இந்த word verificationஐ கொஞ்சம் எடுத்துவிட கூடாதா?]
நண்பர்களின் வருகைக்கு நன்றி !!!
கருப்பா, 35.5 னா போட்டோ பாக்காம சொல்லமுடியதுப்பா...
//[இந்த word verificationஐ கொஞ்சம் எடுத்துவிட கூடாதா?]//
எடுதாச்சுப்பா..!!!
//
கருப்பா, 35.5 னா போட்டோ பாக்காம சொல்லமுடியதுப்பா...
//
திரு. களப்பி அவர்களே, இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியவில்லை. அந்த புள்ள நம்ம ஃபோட்டோவை கேட்டா என்ன ஆகும்னு யோசிச்சு பாக்கனும்...
//
எடுதாச்சுப்பா..!!!
//
நன்றிப்பா..!!!
Post a Comment