இலங்கை இன பிரச்சனையைப் பற்றி சில தலைவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அது இலங்கை விமான படை ஈழம் மீது குண்டு மழை பொழிந்து தமிழ் ரத்தம் குடித்து கொண்டு இருந்த நேரம். ஒரு தலைவர் மிக ஆக்ரோசமாக அதை கண்டித்து பேசும் போது அவர் சொன்ன வாக்கியம் " இப்படியாக குண்டு மழை பொழிந்து, தமிழர் இனத்தை அழிக்க இலங்கை இராணுவம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் உலக நாடுகள் பார்த்து கொண்டே இருக்கிறது". 'பார்த்து கொண்டிருக்கும் உலக நாடுகள் ஒரு நாள் நமக்கு உதவ வரும்' என்ற தொனியில் அவர் பேசியதாக எனக்கு பட்டதால், அவைகள் மீதான பார்வையே இந்த பதிவு.
இன்றைக்கு உலக நாடுகள் என்று யார் கூறினாலும் அவை அரசியல் அதிகாரமிக்க , ராணுவ பலமிக்க, கிட்ட தட்ட தன்னிறைவான சொற்ப நாடுகளையே - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற சில நாடுகளை மட்டுமே குறிக்கும். மாற்ற நாடுகள் நமக்கு அதிக பட்சம் தார்மீக ஆதரவை மட்டுமே தர இயலும். இந்த தார்மீக ஆதரவு - இதயத்தில் இடம் - எல்லாம் கவிதை எழுத மட்டுமே உதவும் .
இந்த சொற்ப நாடுகள் அனைத்தும் ராணுவ வழியில் இணைந்து கொண்டு NATO என்னும் அமைப்பை ஏற்படுத்தி கொண்டன - அமெரிக்கா தான் அதன் வித்தகர் என்பதை சொல்ல தேவை இல்லை. அமெரிக்கா வின் ராணுவ வரவு செலவு திட்ட செலவு என்பது - அதற்கு அடுத்த நிலையில் உள்ள பதினைந்து நாட்டு ராணுவ செலவுகளின் கூட்டு தொகையை விட அதிகம் அல்லது வேறொரு முறையில் சொல்ல வேண்டும் என்றால் 'அமெரிக்க ராணு தொழில் துறை என்பதை தானியாக ஒப்பிட்டால், அது மட்டுமே உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதார மண்டலம். இந்த ராணுவ பலம் என்பது அவர்களுக்கு மிக அவசியம் - வல்லரசாக தொடர்வதற்கு, மாற்ற நாடுகளை நேரடியாகவும் மறைமுகவகவும் ஆள்வதற்கு, அவர்களது பொருளாதார கொள்கைகளை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள செய்வதற்கு.
இவர்களின் இவ்வளவு செலவிற்கு காசு கொடுப்பதும் நாமே. நாம் பதினஞ்சு ரூவாவுக்கு வாங்கும் சோப்பில் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூவாய்க்கு வாங்கும் ஆயுதம் வரை - அமெரிக்க முதலையின் வாயிக்கு செல்கிறது.
இலங்கை - ஈழ பிரச்சனை ஆனாலும் சரி, இந்திய பாகிஸ்தான் பிரச்சனை ஆனாலும் சரி, பாலஸ்தீன பிரச்சனை ஆனாலும் சரி எல்லாவற்றிலும் பயனடைவது அமெரிக்க (மற்றும் அதன் கூட்டாளிகளின்) ராணுவ தொழிற்சாலை வளாகமே. எனவே அவர்களுக்கு உலகமெங்கும் போர் தேவை. அதன் மூலம் ஆயுதம் விற்ப்பனை தேவை.ஏதேனும் காரணத்தால் எந்த பிரச்சனையாவது முடிவுக்கு வந்து விட்டால் - இப்பொழுதும் லாபமே. அவர்களின் கோக், பெப்சி விற்ப்பதற்கு நல்ல சந்தை கிடைத்து விட்டது. முன்னதை போல பின்னதில் வருமானம் அந்த அளவிற்கு இல்லை என்ற வருத்தத்துடன், அதையும் வரவேற்கும்.
இவை ஒரு புறம் இருக்க, இனி அமெரிக்க கூட்டாளிகளின் சொந்த இனப் பிரச்சானைகளை பார்ப்போம். அமெரிக்காவின் தோழன் - அமெரிக்காவின் 51 ஆம் மாநிலம் என்று சொன்னால் தப்பாகத கூட்டாளி - பிரிட்டன். இதன் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து ( ச்காடிஸ் மொழி பேசுபவர்கள் மற்றும் பேசியவர்கள் ) குறிப்பிட்ட வரைமுரைக்குட்பட்ட சுய ஆட்சி கொண்டது. எனினும் பிரிடிஷ் நாடாளுமன்றமே வரி விதிப்பு, பாதுகாப்பு, வெளி உறவு கொள்கைகள் மாற்று பல அதிகாரங்களை வைத்துள்ளது. ச்காட்டிஸ் தேசிய கட்சி முழு அதிகரங்களுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்து போராடிக்கொண்டு இருக்கிறது.
மற்றொரு கூட்டாளியான ஸ்பேயின் பல தன்னாட்சி மண்டலங்களையும், இரு தன்னாட்சி நகரங்களையும் கொண்டது. இருந்தாலும் அனைத்தும் ஒரே நாட்டின் கீழ் வருகிறது. கேடலன் பேசும் மக்கள் வசிக்கும் கேடலோனியா - ஸ்பேயின் னிலிருந்து முற்றிலுமாக தன்னாட்சி பெற பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது. காட்டலோநியாவில் ஸ்பானிஷ் கட்டாயம். காடலன் துணை அலுவலக மொழி மட்டுமே. ஒவ்வொரு காடலன் மனிதரும் கட்டாயமாக ஸ்பானிஷ் கற்றே ஆகா வேண்டும். காடலோநியவின் உற்பத்தி திறனோ மாற்ற மாகாணங்களை விட அதிகம். ஆனால் அதற்கு கிடைக்கும் பலன்களோ மிகவும் குறைவு; ஏனெனில் மற்ற மாகாணங்களின் உற்பத்தி திறன் குறைவு. (இதே காரணம் நமக்கும் உள்ளது - ஆனால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டில் இதை பற்றி பேசுவது குற்றம். )
இதேபோல் ஸ்பெயினின் மற்றொரு மகானமான பாஸக் மொழி மேசும் பாஸக். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே பொய் ETA என்னும் ஆயுதம் தாங்கிய போராட்ட குழுவாகவும் செயல்படுகிறார்கள்.
அமெரிக்காவின் பக்கத்து நாடான கனடாவிலும் அதே தான். குபெக் என்னும் மாகாணத்தில் தொண்ணூறு சதவிதிதற்கு மேல் பிரஞ்ச் பேசும் மக்கள். குபெக் கிட்ட தட்ட தனி ஆளுமை கொண்டதாக இருந்தாலும் அங்கும் கனடிய கான்ச்டிடுசன் தான். அவர்கள் நீண்ட நாளாக - தனி நாடு கேட்டு போரடுதிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கனடிய பார்லிமென்ட் ஒரு தீர்மானம் போட்டது - கியபுக் என்பது கனடவுக்குள் இருக்கும் ஒரு தனி நாடு என்று. அதாவது - உங்களை நாங்கள் விடமாட்டோம். ஆனா நீங்க தனி நாடுன்னு சொன்னா சொல்லிக்கங்க. இன்னும் குழப்பம் தீர்ந்ததாக இல்லை. இதே போன்றதொரு நிலை தான் அமெரிக்காவின் போர்டோ ரிகோ விற்கும்.
இப்படி வல்லரசுகள் அனைத்தும் இன பிரச்சனை களை நரசிம்ம ராவ் பாணியில் சமாளிக்கும் பொழுது, அவர்களே அவர்களின் நட்டு நலனிர்க்காக உழைக்கும் மக்களுக்கு முழு விடுதலை அளிகக மனம் வராத பொழுது, நம்மை பற்றியா சிந்திக்க போகிறார்கள்.
எந்த ஒரு நாடும் - தனது அதிகார எல்லையை சுருக்கி கொள்ள சம்மதிக்காது - ஏனெனில் அதிகாரம் என்பது மகிழ்ச்சி - அல்லது போதை.
குறிப்பு:
இந்த நாடுகள் அனைத்தும் எந்த ஒரு இன விடுதலையையும் கண்மூடி ஆதரிக்கும், வரவேற்கும் - அந்த இனம் கமியுநிச ஆட்சியில் இருக்கும் போது மட்டும்!
Tuesday, May 20, 2008
உள்ளூர் ஆதரவும் உலக ஆதரவும் ...!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பஞ்சோ...பஞ்சு...கலக்கல் பஞ்சு
//இந்த நாடுகள் அனைத்தும் எந்த ஒரு இன விடுதலையையும் கண்மூடி ஆதரிக்கும், வரவேற்கும் - அந்த இனம் கமியுநிச ஆட்சியில் இருக்கும் போது மட்டும்//
//
அமெரிக்கா வின் ராணுவ வரவு செலவு திட்ட செலவு என்பது - அதற்கு அடுத்த நிலையில் உள்ள பதினைந்து நாட்டு ராணுவ செலவுகளின் கூட்டு தொகையை விட அதிகம் அல்லது வேறொரு முறையில் சொல்ல வேண்டும் என்றால் 'அமெரிக்க ராணு தொழில் துறை என்பதை தானியாக ஒப்பிட்டால், அது மட்டுமே உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதார மண்டலம்.
//
இந்த பலம்தான் அமேரிக்கா ராணுவத்தை அவுட் சோர்ஸிங் பண்ண உதவுகிறது. ரணுவ அவுட் சோர்ஸிங் அமேரிக்காவுக்கு பணம் காய்க்கும்/எண்ணை காய்க்கும் மரம்!!
//
சில வருடங்களுக்கு முன்பு கனடிய பார்லிமென்ட் ஒரு தீர்மானம் போட்டது - கியபுக் என்பது கனடவுக்குள் இருக்கும் ஒரு தனி நாடு என்று. அதாவது - உங்களை நாங்கள் விடமாட்டோம். ஆனா நீங்க தனி நாடுன்னு சொன்னா சொல்லிக்கங்க.
//
:-))))))))))))
//
இப்படி வல்லரசுகள் அனைத்தும் இன பிரச்சனை களை நரசிம்ம ராவ் பாணியில் சமாளிக்கும் பொழுது, அவர்களே அவர்களின் நட்டு நலனிர்க்காக உழைக்கும் மக்களுக்கு முழு விடுதலை அளிகக மனம் வராத பொழுது, நம்மை பற்றியா சிந்திக்க போகிறார்கள்.
//
பத்துப்பேர அடிக்கிறவன், பலமுள்ளவனை, எல்லாம் ஹீரோவாக பார்க்கும் மக்களுக்கு நிச்சயம் அமேரிக்கா ஒரு ஹீரோதான். அவன் உமிழும் காரி பன்னீர் தான்!!!
நல்ல பதிவு நண்பா, போட்டுத்தாக்கு!!
TBCD மற்றும் கருப்பனின் வருகைக்கும் பின்னூட்டதிர்க்கும் நன்றி.
//இந்த பலம்தான் அமேரிக்கா ராணுவத்தை அவுட் சோர்ஸிங் பண்ண உதவுகிறது. ரணுவ அவுட் சோர்ஸிங் அமேரிக்காவுக்கு பணம் காய்க்கும்/எண்ணை காய்க்கும் மரம்!!//
அது என்னப்பா ராணுவ அவுட் சோர்சிங் ??
அமெரிக்கா சவூதி அரேபியா, ஜப்பான் போன்றவற்றிக்கு தங்களது படையை அனுப்பி பாதுகாப்பு அளித்து சம்பாரிப்பதை சொல்லுகிரயா ?
//பத்துப்பேர அடிக்கிறவன், பலமுள்ளவனை, எல்லாம் ஹீரோவாக பார்க்கும் மக்களுக்கு நிச்சயம் அமேரிக்கா ஒரு ஹீரோதான்.//
டென்ஷன் ஆகாதப்பா.. எனக்கு உன்னோனு நினைவிற்கு வருது .. அவன் அவன் கஷ்டப்பட்டு ராணுவத்துல சேந்து, டெய்லி ஓடி, உடம்பை வளைத்து கஷ்டப்பட்டு கேப்டன், மேஜர் னு பட்டம் வாங்குரனுங்க .... நம்ம ஊர்ல ??
Post a Comment