Friday, February 20, 2009

தமிழ் டுவிட்டர் ஓடைகள் - மறு பதிப்பு


நமது அரசியல் வியாதிகளின் தமிழ் டுவிட்டர் ஓடைகள்.

கருணாநிதி: உடன்பிறப்பே "அர்த்தமுள்ள இந்து மதம்" கழக ஆட்சில் நாட்டுடமை. மறவாதே !!

ஜெயா: பப்புவா நியு கினியா நாட்டில் நடந்த இரட்டை கொலைக்கு எனது கண்டனம்

ராமதாஸ்: சோனியா ஜி சமாதான படுத்தப்பட்டார். நிரந்தர சுகாதார அமைச்சர் பதவி எப்பொழுதும் ஒரு தமிழனுக்கே !

வைக்கோ: ஹல்லோ ஹல்லோ மைக் டெஸ்டிங்.

பிரணாப்: தமிழர்களின் எண்ணிக்கை உலகில் இரண்டு கோடிக்கும் குறையாமல் இந்தியா உறுதியாக பார்த்துகொள்ளும்.

அன்பழகன்: பிரணாப்பின் உறுதிமொழி மகிழ்ச்சி

சூப்புறமணிசாமி: தீட்சிதர்கள் ஒபாமாவுக்கு டியுசன் எடுத்ததற்கு ஆதாரம் கிட்டியது

மஹிந்த: ஜீ.. ஜீ ... பார்லிமேன்ட்டையும் கொழும்புக்கே மூவ் பண்ணிட்ட இந்த பசங்க ரகளை பண்ண மாட்டானுங்க.

தொங்கபாலு: அம்மாவை வணங்காத உயிரில்லையே! அம்சாவை போற்றாத நாள் இல்லையே


அழகிரி: எங்க அப்பு சர்வாதிகாரினு சொன்னதும் யாரும் என்னை பத்தி சொல்லிடுவாங்களோன்னு நெனெச்சேன். நல்ல வேளை :).

ஸ்டாலின்: திண்ணயில இப்பவே துண்ட போட்டு ரிசர்வ் பண்ணிட்டேன் !!

மண்மோகன்: டமில்... டமில் நாடு ..க்யா ஹை.. ???

சோனியா: வாட்ச் மென், நம்ம வீட்ல நாய்கள் ஜாக்கிரதை னு போர்டு மட்டப்பா !!காலங்காத்தால A4 பேப்பரோட வந்துடுரனுங்க

Tuesday, February 10, 2009

விளிம்பு நிலை - களிம்பு நிலை மனிதர்களாம் !!!

நானும் இதோட ஏழு எட்டு 'நான் கடவுள்' விமர்சனம் படிச்சிட்டேன் - வலையில !! எல்லோரும் ஒரே மாதிரி விளிம்பு நிலை மனிதர்கள்-னு வாக்கியத்துக்கு வாக்கியம் எழுதுறானுங்க !! அது என்ன விளிம்பு நிலைனு யாராச்சும் சொல்லுங்கப்பா ??

இது என்ன புது ஜாதியா ?? கோடி கோடியா செலவழிச்சு நிலாவுல பலூன் விடுற அரசாங்கம், சுடுகாட்டு கூரைல இருந்து சவபெட்டி வரை கொள்ளை அடிக்கும் அரசாங்கம் உருவாக்கி வச்சிருக்கும் 'தாரள மயமாக்கல்' மற்றும் 'மூட நம்பிக்கைகளின்'
வாரிசான இந்த ஏழை எளியோருக்கு - பிட்சைகாரர்களுக்கு இப்ப புதுசா ஒரு பட்டம் "விளிம்பு நிலை" மனிதர்கள் !!

ஒரு சக மனிதனை மனிதனாக கூட மதிக்காமல் - அவனது உடல் ஊனத்தை கிண்டளைடிப்பதும், உதாசீன படுத்துவதும், சமூகத்தில் இருந்தே புறக்கணிப்பதையும் செய்துவரும் நம்மால் உருவாக்கப்படும் அவர்களுக்கு - நாம் அவர்களை விளக்கமாராக மாற்றிவிட்டு பின் அணிவிக்கும் பட்டு குஞ்சம் 'விளிம்பு நிலை மனிதர்கள்'.

"கோயில் உள்ள விடலாட்டி என்ன, அவங்களுக்குன்னு தனி கோயில் கட்டிட்ட போச்சு" னு விளக்கமளித்த காந்தி எப்படி சூத்திரர்களை ஹரிஜனம் சொன்னாரோ அதே மாதிரி தான் இந்த விளிம்பு நிலை மனிதர்கள் வார்த்தையும்.

இப்ப இருக்குற பொருளாதார சூழ் நிலைல - ஒபாமா அடுச்சு தள்ளுற பணத்துல - அண்ணன் மன்மோகன் சிங் புண்ணியத்துல சீக்கிரம் நம்மளும் அந்த விளிம்பு நிலைக்கு நம்மளும் வந்துடுவோம்றது எம்புட்டு தூரம் உண்மையோ ...!!! பயமா இருக்கப்பா !!!

வாழ்க வார்த்தை விளையாட்டுகள் !!!