1.சுதந்திர தமிழ் ஈழத்தில் கோலிவுட்டின் கிளை ஒன்று நிறுவப்படும் என்றும் முதல் படமாக 'ஒரு புலியின் ஓசை' என்று ஒன்று எடுக்கப்படும் என்றும் அதற்கான வசனம் எழுதும் பொன்னான வாய்ப்பு இன தலைவருக்கு வழங்கப்படும் என்றும் பிரபாவிடம் இருந்து உறுதிமொழி வாங்கி கொடுப்பது.
2. ஈழத்தில் அவ்வளவு குடும்பங்களுக்கும் தொலைக் காட்சி பெட்டி ஒன்றும் அதற்க்கு கலைஞர் டிவி இணைப்பும் கொடுக்கப்படும் என்றும் உறுதியளிப்பது.
3. இலங்கை தூதர் அம்சாவின் வங்கி கணக்குவழக்குகளை தெரிந்துகொண்டு அவர் காங்கிரசாருக்கு தரும் பணத்தை விட ஒரு ரூவாய் அதிகமாக நாமே காங்கிரசாருக்கு கொடுப்பது.
4. தமிழ் ஈழம் மலர்ந்தால் மட்டுமே அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் வாய்ப்புக்கள் இருப்பதாக கேரளா ஜோதிடர்களை விட்டு அம்மாவிடம் சொல்ல சொல்வது.
5.தமிழ் ஈழம் மலர்ந்த பின்பு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும், புலிகளின் கட்சி பாமாக விற்கு திமுக வை விட அதிக இடங்களை ஒதுக்கும் என்றும் உறுதிமொழி தருவது.
6. மதிமுக உலகில் எந்த மூலையில் எந்த தேர்தலில் போட்டி போட்டாலும் தேர்தல் செலவுகளை எத்தனை கோடி ஆனாலும் ஈழ அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி மொழி அளிப்பது
7. பாரதியும் ஜீவாவும் தமிழீழத்தை ஆதரித்தே வந்துள்ளார்கள் என்று சான்று கண்டுபுடித்து கம்யுனிஸ்ட்களிடம் சொல்லிவிடுவது
8. ஈழத்தில் ஒவ்வொரு ஊரிலும் தாங்கள் விரும்பிய இடத்தில் கல்யாண மண்டபம் கட்டிக்கொள்ளலாம் என்றும் அதை இடிக்கும் அதிகாரம் யாருக்கும் எப்பவும் கிடையாது என்று கட்சி நடத்தும் நடிகர்களிடம் உறுதி மொழி அளிப்பது.