Monday, August 06, 2007

ராமன் பாலமும் நம்ம கேள்வியும்

திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கனு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோனு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/


ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசஙக. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவபட்டு என் 'டவுட்' அ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிரேன்.

ராமன் கட்டின பாலத்த சேதபடுத்த கூடாதுன்டு சொல்லுரது சரிதானுங்க. அதே மாதிர் கங்கை ஆத்துல இருக்குர அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லனுமுங்க. கங்கை சிவ பெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாஙக ? அத எப்படி அனை கட்டி தடுக்கலாமுங்க ?
நீங்க அதுக்கு ஒரு வெப் சைட் பொடனுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்னிய ஆத்துல பொனத்த போடகோடாதுனாவது நீங்க சொல்லனுமுஙக.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."
எங்க அனுமாரு பசங்ககளை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விபட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலாம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாங்காலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குரமதிரி கட்டமுடியல! ஒரு பாலத்த கூட ஒழுங்காகட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISI ட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க ?
பொன்டட்டிய பத்திரமா பார்த்துக்கதெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மயா எதிர்க்கமுடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேர....

"environmental impact"
சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியபோதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுர ப்ரோஜக்ட் பாதிர் ப்ரோஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளம்பனும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டனும்... இன்னும் எம்புட்டோ பெரிய ப்ரட்சனை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் யேனுங்க நீங்க அடக்கி வாசிக்கிரீங்க. ?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"
இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க.
உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்னியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்' நு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குராங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்....காச குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க ?

4 comments:

said...

// ஒரு பாலத்த கூட ஒழுங்காகட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு //

நெத்தி அடி.. சூப்பர்..

(if possible pls remove word verification.. it is really difficult to post comment.. thanks)

said...

//அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org///

நல்லா படம் காட்டுறாங்க.

வாயுபகவான் பூமியில் இருக்கார், 'வருண' பகவான் ஆகயத்தில் இருக்கார். அதனால் ராக்கெட் விடப்படாது, கப்பல் விடப்படாது, பளைட்டு விடப்படாது.

:)

said...

நாசாவுல கூலிக்கு மாரடிக்கிற சில பன்னாடைங்க போட்டு கொடுத்தத வெச்சிக்கினு லூட்டி அடிக்கிற பைசா புரோசனம் இல்லாத இந்த பசங்க இப்பொ கும்ப கூடினு அழுவுறத உட்டா வேற கெதியே இல்ல சாமி.

அழுவுட்டும், அழுவுட்டும், நல்லா அழுவுட்டும். சோமாறிங்க மூச்சி போவற வரைக்கும் அழுவுட்டும். இனிமே இவனுங்கள யாருன்னு என்னான்னு கேக்க நாதி இல்லாம வெம்பியே சாவப்போறானுங்க.

said...

//இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க.
உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்னியதலமே தெரியுதாங்க?//

ராமர வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே ;-)