Saturday, March 01, 2008

ஓரின சேர்க்கை அவ்வளவு மோசமானதா ?

ஓரின சேர்க்கை அவ்வளவு மோசமானதா ?

ஒரு பதிவர் கேட்கிறார்:
"டா‍வின்சியின் படைப்புகளை ரசிப்பவர்கள் அனைவரும் அவரின் ஓரினப்புண்ர்ச்சியையும் ஆதரிப்பவர்களா?"

மற்றொரு பதிவரின் பதில் :
"ஆனால் அவரது படைப்புகளில் ஓரின சேர்க்கையை ஆதரித்து ஒரு சிறிய புள்ளியாவது இருந்தால் காட்டுங்களேன் பார்க்கலாம்."

இவைகளில் இருந்து 'ஓரின சேர்க்கை என்பது இயற்கைக்கு புறம்பானது என்பது போன்றும், அது கேவலமானது என்பது போன்றும்' சித்தரிக்க படுவது தெரிகிறது.

அடுத்தவர் மனைவயுடன் முழு விருப்பத்துடன் கொள்ளும் உடலுறவு கடுமையாக தண்டிக்க படக்கூடிய குற்றம் (IPC 497) ( அப்புறம் என்னவாம்னு கொதித்து எழும் கலாசார பதிவர்களுக்கு - தயவு செய்து எனது பதிப்புகளை படித்து உங்கள் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டாம் ) ) என்பது போன்ற ஹார்மோன் களுக்கு கட்டளை இடும் நவீன மனு நீதி உள்ள நாட்டில், ஹோமோ செக்சுவல் க்கு பத்து வருட தண்டனையோ - ஆயுள் தண்டனையோ வழங்கப்படும் என்பது போன்ற சட்டங்கள் இருப்பது ஆச்சர்யப்பட வைக்கவில்லை.

ஹார்மோன் குளருபடியாளும், குறோமசொம்களின் குழப்பதலும் பிற்ந்தவர்களை அரவாணிகள் என்று ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி பாலியல் தொழிலாளர் களாக மாற்றி கொண்டிருக்கும் சமுதாயம், அதை அவர்களுக்கு உணர்த்தவேண்டிய கொடிப்பினை பெற்றவர்கள் நாட்டுக்கு மிக முக்கியமான விவாதமான 'hair style அவசியமா அவசியம் இல்லையா" என விவாதித்து கொண்டுக்கிருக்கின்றனர்.

மாறாக, அடுத்த window-வில் விக்கிபீடியா விலோ அல்லது வேறு எந்த தளத்திர்க்கோ சென்று ஓரின சேர்க்கை என்பது எவ்வளவு இயற்க்கயானது, மரபணு சார்ந்த, ஹார்மோன்கள் சாந்த பொருள் என்பதை வெகு எளிதாக தெரிந்து கொள்ள கூடிய நிலையில் உள்ள - இணையத்தில் உள்ள பதிவர்களின் அறியாமை அல்லது அறிந்து கொள்ள தேவை இல்லை என்னும் நிலையினை அடைந்தது ஆச்சர்யப்பட வைக்கவில்லை. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

5 comments:

said...

என்னப்பா தம்பி, ரெம்ப சூடா இருக்குறாப்புல தெரியுது?? நல்லா ஜில்லுனு ஒரு மோர் குடி, எல்லாம் சரியா போகும்!!!!

said...

நடுவூர்கரரே , நலமா ? என்னப்பா செய்றது, தமிழ்மணத்துல 99% ஸ்டீரியோ டைப் பசங்களா இருக்கனுங்க .... இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்...ஆதலால் தாமதமான பதில் .....

said...

//டா‍வின்சியின் படைப்புகளை ரசிப்பவர்கள் அனைவரும் அவரின் ஓரினப்புண்ர்ச்சியையும் ஆதரிப்பவர்களா?//

ஒரு எடுத்துக்காட்டிற்காகவும் ஒரு வேகத்திலும் சொல்லப்பட்டது தான் அந்த விஷயம். அது இயற்கை மற்றும் ஜீன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது எனக்கும் தெரியும். தவறுக்கு வருந்துகிறேன். ;-(

said...

இந்தியால ஒருத்தனுக்கு கல்யாணம் ஆச்சுன்னா பொண்டாட்டியே இப்படி அழகா இருக்காளே இவ தங்கச்சி எவ்வளவு அழகா இருப்பான்னு கணக்கு போடுவாங்க ஆனா பாகிஸ்தான்ல படான் என்று சொல்லக்கூடிய ஆளுங்க என்ன சொல்வாங்க தெரியுமா?

இவளே இவ்ளோ அழகா இருக்காளே இவ தம்பி எவ்வளவு அழகா இருப்பான்னு கணக்கு போடுவாங்க.

ஓரினச்சேர்க்கைன்னு சொல்றது காலம் காலமா நடந்துட்டு வர்ற விஷயம் அங்க. இங்க ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லிட்டு சைடுல பலத்தியோட இருக்கற ஆளுங்க.

எங்கயும் எல்லாமும் இருக்கத்தான செய்யும். பிடிக்கலன்னா விட்டுடணும் அத தப்புன்னு சொல்ல என்ன உரிமை இருக்கு

said...

நண்பரே தமிழக வரலாற்றில் களபிறர், களபிறர் என்கிறார்களே அவர்களை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் எழுதுங்களே ப்ளீஸ்...