Thursday, July 24, 2008

போலி-க்கு கிடைத்த தண்டனை ....

நண்பர்களே டோண்டு ஐயா அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது !! அதனை பற்றிய எனது கருத்துக்களை இங்கு வைக்கிறேன்.

அதற்குமுன், நான் பதிவுலகிற்கு புதியவன் என்பதையும், இந்த போலி பிரச்சனை பற்றிய அறிவு எனக்கு வெகு சமீபத்தில் தான் -அதுவும் வெகு சிறிய அளவிலே தான் கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

டோண்டு அவ்ர்களை பற்றியும் மற்ற சிலரை பற்றியும் போலி தவறாகவும் அவதூறாகவும் பல வழிகளில் எழுதி இருந்திருக்கிறார். அது கொஞ்சமும் சந்தேகமின்றி அருவருக்கத்தக்க செயலே. அவர் நேர்மையாக, கருத்து மோதல்களை எதிர் கருத்துகளால் மட்டுமே எதிர்த்திருக்க வேண்டும். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

//மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. //

இதை படித்த பொழுது, மிகவும் வருத்தபட்டேன். ஒரு மேல்நாட்டு பழமொழி நினைவிற்கு வருகிறது. தமிழில் சொன்னால் "எதை எந்த அளவிற்கு விமர்சிப்பது என்பது முக்கியம். உன் நண்பனின் தோள் மீது இருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதே"

கொலை கேசில் சிக்கியவர் அவரது 'மடாதிபதி' வேலையே தொடர முடிகிறது; ஊறுகாய் வியாபாரியை ஏமாற்றியவர் சாவுக்கு அப்புறமே தீர்ப்பு வரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது; ஆனால் பாவம் ஒரு சில தனி மனிதர்களை தாக்கி எழுதிய மூர்த்தி போன்றவர்களுக்கு, அவை தகாதமுறையில் எழுதப்பட்டவை என்ற காரணத்திற்காக வேலை பறிக்க படுகிறது, கடவு சீட்டு பறிக்க படுகிறது !!!

பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் மினஞ்சல் அனுப்பினால், அந்த மிரட்டலுக்கான உளவியல் காரணங்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல், அந்த மாணவனை தண்டித்தால் அது சரியான செயலா ?

பெரியாரை பற்றி, கொளத்தூர் மணி பற்றி விக்கி பீடியாவில் தேடி பாருங்கள். விஷமமான செய்திகள் மட்டுமே இருக்கும். ஏனெனில் அதை எழுதியவர்களின் சமூக பின்னணி அப்படி!! தாங்கள் பெற்றிருக்கும் முன்னேற்ற நிலையையும் அதன் மூலம் அடைந்த கணினி வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு சமுதாயத்தை கீழ்த்தரமாகவும், அதன் இழிவை நீக்க பாடுபட்ட தலைவர்களையும், அவர்களை பின்பற்றி பல ஆக்க செயல்களில் ஈடுபட்டு வரும் இந்நாள் தலைவர்களையும் தொடர்ச்சியாக நய்யாண்டி செய்து எழுதிவருபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா ? அவர்கள் எல்லோரும் போலி அவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒருவகையில் கூட காரணம் இல்லையா ?

இரு அணியினரும் போலி அவர்களின் பக்கங்களுக்கு சென்று அவற்றை படித்து - அவரின் ஹிட் கவுண்ட்-ஐ ஏற்றியதன் மூலம் மறைமுகமாக செய்தவை 'இந்த செய்கையை ஊக்கபடுத்தியதாகாதா ? ஏதோ ஒரு வகையில் நாம் எல்லாருக்குமே அவரது குற்றத்தில் பங்கு இருக்கிறது . ஆனால் பாவம் தண்டனை மட்டும் அவருக்கு.

20 comments:

Anonymous said...

வாதும் வேதனையும் தனக்கு வந்தாதான் தெரியும். நீங்களே சொல்லிட்டிங்க பதிவுலகத்துக்கு புதியவர் னு. அதனால உங்களுக்கு அது சம்பந்தமா முழுமையாக தெரியாது னு நெனைக்கிறேன். அவன் என்னனென்ன செஞ்சானு மத்த பதிவர்களிடம் கேட்டு தெரிஞ்சுகிட்டு அதுக்கப்பறம் இரக்கப்படுங்க.

Anonymous said...

நச் நச் நச்

பொளேர் பொளேர் பொளேர்

said...
This comment has been removed by a blog administrator.
said...

விக்கீபிடியாவில் பெரியார் என்றால் பெரியாறு ஓடும் ஊர் என்று இருக்கிறது.

அதற்கு காரணம் நானும் நீங்களும் ஒரு கணக்கு துவங்கி அங்கு கவனம் செலுத்தாதது.
~~~
மற்றப்படி போலி என்றால் மூர்த்தி எழுதிய ஆபாச பின்னூட்டங்கலை விட தற்பொழுது இயங்கி வரும் ஆரிய போலி(கள்) எழுதும் பின்னூட்டங்கள் அதிகம்.

அவரும் (அவர்களும்) விரைவில் மாட்டுவார்கள்
~~~
ஆபாச பின்னூட்டம் தவிர, சாரு நிவேதிதாவின் பெயரில் மோசடி, செந்தழல ரவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த துவங்கிய தளங்கள் என்ற வகையில் சட்ட விரோத காரியங்களையும் மூர்த்தி செய்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
~~~
மூர்த்தி மாட்டிக்கொண்டான் என்பதால் மீதி எல்லோரும் புனிதர் அல்ல :( :(
~~~
ஆனால் ஆரிய கும்பல் பொய் பிராச்சாரங்களை செய்கிறது என்பதற்காக மூர்த்தியின் ஆபாசத்தை பொறுக்க வேண்டுமா.

குழலி, ஓசை செல்லா (வாலண்டினா !!) போன்றவர்களும் ஆரியத்திற்கு எதிராக எழுதுகிறார்.

கருத்து எழுதுவது என்பது வேறு. இப்படி குடும்ப உறுப்பினர்களின் பெயரை வைத்து ஆபாச கதை எழுதுவது, மோசடி செய்வது என்பது வேறு.
~~~
மூர்த்திக்கு போதிய அளவு முன்னெச்சரிக்கை அளிக்கப்ப்ட்டது
~~~
ஒரு முறை மன்னிப்பு கேட்டு, பதிவுகளை அழித்து விடுகிறேன் என்று கூறியபின், பதிவுகளை அழிக்காமல் draft என்று மாற்றி, சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வலையேற்றியது நம்பிக்கை துரோகமல்லவா ??
~~~
எதோ சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன்.
~~~
மூர்த்தி காவல் துறையினாரால் விசாரிக்கப்பட்டது அவர் சாருவின் பெயரால் செய்த மோசடிக்காகவும், தொலைபெசிகளின் அழைப்பை பொறுக்க முடியாமல் சாரு கவிஞர் கனிமொழி வரை புலம்பியதாலும் தான்

Anonymous said...

ஒவ்வொரு 'விடாது கருப்பு' அத்தியாயத்திற்கும் ஒரு 'விட்டுது சிகப்பு' அத்தியாயம் இருந்ததை யாரும் மறக்க வேண்டாம்.

said...

//உன் நண்பனின் தோள் மீது இருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதே"//

interesting view! :)

you probably say this, since you don't know enough about the level of discomfort he has created for many.

In my view, the Murthy guy, deserves some punishment.
but, i do agree that the punishment should only affect him.

It should not impact his dependants, in any physical/monetary way.

It is a good progress and will server as a deterant for future aspiring-to-be-psychos.

said...

////குழலி, ஓசை செல்லா (வாலண்டினா !!) போன்றவர்களும் ஆரியத்திற்கு எதிராக எழுதுகிறார். ////
என்னாது! வாலண்டினா ஆரியத்திற்கு எதிராக எழுதுகிறாரா? என்ன கொடும சார் இது?

Anonymous said...

அண்ணன் போலியின் சேவையினால் மறைமுகமாக பாதிக்கபட்டோர் ஏராளம்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் செந்தழலாருக்கு சந்தேகம் வந்து வசந்தம்ரவி என்ற மூத்த பதிவரின் டவுசரை பிடித்து கிழித்துவிட்டார். அப்போது ஓடிய அப்பதிவர் இன்னும் திரும்பவில்லை... கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறாராம்!

said...

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
பதிவுகளில் படிப்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்..!!

said...

இது தொடர்ச்சிக்கு..

said...

இது தொடர்ச்சிக்கு..

said...

நண்பர்களின் பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி ..

//ஒவ்வொரு 'விடாது கருப்பு' அத்தியாயத்திற்கும் ஒரு 'விட்டுது சிகப்பு' அத்தியாயம் இருந்ததை யாரும் மறக்க வேண்டாம்//

அப்படி வேற நடந்துச்சா ? அதெல்லாம் சைபர் கிரைம் போலீசுக்கு புகாற்குடுக்கும்முன்னரே அழிஞ்சு போயிருக்குமே ?

said...

Dear Sir!

A timely post from you.

Every action has an equal reaction. In certain cases, sometimes, it so happens that the reaction is more than necessary. An overeaction!

Dondu Raagavan runs a blog whose principles and orientations are all of us to see. Few people would say he is a noble old man, with the goodness of society as a whole in his heart. I am referring to his casteism,his brahminism, his hindutavaism, religious bigotry etc. and to uphold and propogate all these, he is running his blog.

People will be hurt; and reactions will set in. Here, such a reaction has become an over-reaction; and the person, who reacted, was so unwise that he adopted quite unethical methods, for which a punishment, as Sarvesan said, is needed, but THAT SHOULD BE CONDIGN.

Punishment itself should not be an overraction.

In this case, the punishment, as you said, is overeaction. Disproportionate.

The case for Dondu Ragahavan would be overwhelming sympathy, if only he is worthy of such sympathy. He lacks it for reasons enmerated above.

I have a single episode to relate here, to show his dissimulation.

In a certain post, long ago, I made a comment, in polite English, about certain of his style of writing, not of the contents.

He replied, in two ways:

One, as Dondu Ragahavan, using equally politie words. Other, as Dondu Ragavan Fan Club, using intemperate and obsence words.

I understood what and who this Ragahave is and can be! Dissimulation seems to be his natural company. Thenceforward, I stopped visiting his blog!

Murthy deserves some deterrent punishment. But that should be condign. Depriving him of his livelihood is not a condign punishment. It is inhuman.

Ippadikku

Karikkulam

Anonymous said...

//
//ஒவ்வொரு 'விடாது கருப்பு' அத்தியாயத்திற்கும் ஒரு 'விட்டுது சிகப்பு' அத்தியாயம் இருந்ததை யாரும் மறக்க வேண்டாம்//

அப்படி வேற நடந்துச்சா ? அதெல்லாம் சைபர் கிரைம் போலீசுக்கு புகாற்குடுக்கும்முன்னரே அழிஞ்சு போயிருக்குமே ?

//

YES. EXACTLY.

said...

யட்சன் என்பவரது பதிவில் மீண்டும் எழும் இந்த பிரச்சினைக்காக அங்கே எழுதிய பின்னூட்டத்தை இங்கே மீண்டும் அளிக்கிறேன்...

என்னுடைய விளக்கம் இந்த இரண்டு விடயத்துக்கு தான்...

டோண்டுவோ மற்றவர்களோ என்னை "போலி டோண்டு" வை கண்டறியும்படி ஆரம்பத்தில் சொல்லவில்லை....நான் எடுத்த முயற்சிகளை சொல்லியபோது ஆதரவு தெரிவித்தார்கள்...

போலி டோண்டு பதிவோ அல்லது எந்த ஆபாசப்பதிவோ என்னால் துவக்கப்படவில்லை, இதுவரை எந்தவிடத்திலும் ஆபாசமாக எழுதியதில்லை...

மேலும் இந்த பின்னூட்டத்தில் இன்னும் ஒரு விடயத்தையும் சேர்த்திருக்கிறேன்...

////அப்படி டோண்டு ரவியை ஊக்குவித்ததாக தான் செந்தழல் ரவி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.

டோண்டுவின் மனைவி, பெண்ணை பற்றி ஆபாசமாக எழுதி போலியின் நம்பிக்கையை பெற முயற்சித்தாராம் செந்தழல் ரவி.
////

இந்த பின்னூட்டத்தை மூர்த்தியை தவிர வேறு யாராலும் போட முடியாது :)))

டோண்டு அவர்களின் மனைவி மகள் புகைப்படம் டூண்டு தளத்தில் வெளியானது...

அந்த தளத்தின் ஆக்ஸஸ் மூர்த்தியை தவிர யாருக்கும் கிடையாது...

ஸ்பெஷல் ஆப்பு என்பதும் மூர்த்தியின் தளம்...

இதை மூர்த்தியே காவல் துறையினரிடம் எழுதி கொடுத்துள்ளான்.

அதிலும், டூண்டு தளம் உலகின் எந்த எந்த ஐ.பி முகவரியில் இருந்து ஆக்ஸஸ் செய்யப்பட்டது / எங்கே இருந்து திறக்கப்பட்டது / எந்த எந்த தேதியில் போஸ்ட் போடப்பட்டது என்று கூகிள் நிறுவனம் பி.டி.எப் கோப்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி உள்ளது....

அதில் எந்த இடத்திலும் என்னுடைய ஐ.பி கிடையாது.

இதில் இருந்தே, டோண்டு, நான் மிகவும் மதிக்கும் துளசி டீச்சர் போன்றவர்கள் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை (இதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க, அவ்ளோ கேவலமா எழுத - என்னால சத்தியமா முடியாது)

அப்படி நினைப்பவர்கள் போலீசில் புகார் தரட்டும், நான் அதனை எழுதி இருந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்...

மூர்த்தி தனக்கு வேலை போய்விட்டதாகவும், நான்கு மாதமாக தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் போலீஸில் சொல்வது பொய். இரண்டு வாரங்களுக்கு முன்புவரை மூர்த்தியின் ஐபியில் இருந்து எனக்கு ஹிட் வந்துகொண்டுள்ளது...

மேலும் சிம்பத்திக்காக மூர்த்தி சொல்லும் விஷயங்களையும் நம்ப முடியாது. அதெல்லாம் மலேசிய மானேஜர்கள் லீவு தருவதற்கு வேண்டுமானால் நம்பட்டும். நான் நம்ப முடியாது.

மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்த டேப் ஆதாரங்கள் உள்ளது. நான் இதன் மூலம் கிரிமினல் வழக்கு தொடரமுடியும். இன்றுவரை செய்யும் எண்ணம் இல்லை, இனி வரலாம்...

ஆகஸ்ட் இரண்டாம் தேதி மீண்டும் காவல் துறையினர் வரச்சொல்லியுள்ளார்கள் ( என்னுடைய தந்தையாரும் மூர்த்தியை சந்திக்க ஆவலாக உள்ளார். என்னுடைய பிறப்பை சந்தேகித்து மூர்த்தி எழுதிய விடயங்கள் குறித்து மூர்த்தியிடம் நேரடியாக விளக்கிவிடுவார் என்று நினைக்கிறேன்)

மேலும் மூர்த்தியால் பாதிக்கப்பட்ட பதிவர்கள் பலர் வர காத்திருக்கிறார்கள்...

என்னைப்போன்ற ஒரு சிலர் அவனை மன்னித்துவிட்டுவிடும் மன நிலையில் இருந்தாலும், சில பதிவர்கள், மூர்த்தி செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நிலை எடுத்துள்ளனர்.

வழக்கறிஞர் நன்பரிடம் கொடுத்த - மூர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் இருக்கும் சிங்கைப்பதிவரும், மற்றொரு பதிவரும் விரைவில் அங்கே வந்து நிற்கவேண்டும் என்று நினைக்கிறேன்...

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...அது ஆரியப்போலியாக இருந்தாலும் திராவிடப்போலியாக இருந்தாலும்...

ஆகஸ்ட் இரண்டாம் தேதி எழும்பூர் குற்றப்பிரிவு , சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்....

said...

மிக சரியாக சொன்னீர்கள், கரிக்குலம் !

said...

//கொலை கேசில் சிக்கியவர் அவரது 'மடாதிபதி' வேலையே தொடர முடிகிறது; ஊறுகாய் வியாபாரியை ஏமாற்றியவர் சாவுக்கு அப்புறமே தீர்ப்பு வரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது;//

super thaliva super.
repeatuuuu

said...

ஒரு மூர்த்தியை போலீஸில் மாட்ட்டி விடுவதால் ஒரு பயனும் இல்லை. ஒராயிரம் மூர்த்திகளை உருவாக்கும் வேலைகளை செய்யாமல் இருக்கனும், அது முடியுமா, மூர்த்தியை போலீஸில் மாட்ட வைத்தவர்களுக்கு?

said...

மூர்த்தியின் நடவடிக்கையில் ஒரு மனம் பிறலப்பட்டவரின் செயல் தெரிகிறது.
அதனால் அந்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து தூக்கியிருக்கலாம்.

விசாரணை கைதியின் பாஸ்போர்ட் முடுக்கி வைக்க படுவது ஊரறிந்த விடயம்.
இதில் கோடாலி எங்கே?
எனக்கு மூர்த்தி தனக்கு தானே வைத்து கொண்ட ஆப்பு தான் தெரிகிறது.

வால்பையன்

said...

இரு அணியினரும் போலி அவர்களின் பக்கங்களுக்கு சென்று அவற்றை படித்து - அவரின் ஹிட் கவுண்ட்-ஐ ஏற்றியதன் மூலம் மறைமுகமாக செய்தவை 'இந்த செய்கையை ஊக்கபடுத்தியதாகாதா ? ஏதோ ஒரு வகையில் நாம் எல்லாருக்குமே அவரது குற்றத்தில் பங்கு இருக்கிறது . ஆனால் பாவம் தண்டனை மட்டும் அவருக்கு.//

உண்மையின் பக்கம் குரல் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே! போலி பிசாசுகளின் முகத்திரைகளைக் கிழித்தெறிய உங்களைப் போன்றவர்களால் தான் முடியும், எனவே உங்களால் தான் அவர்களுக்கு இக் கருத்தை நன்றாகப் புரிய வைக்க முடியும். தொடர்ந்தும் எழுதுங்கள். தமிழன் எப்போதும் தலை தாழ்ந்தவன் இல்லை. அவன் எப்போதும் தலை நிமிர்ந்தவன்.!