Tuesday, January 13, 2009

சில யோசனைகள் - தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் மேல் உண்மையான அக்கறை வர

 

      1.சுதந்திர தமிழ் ஈழத்தில் கோலிவுட்டின் கிளை ஒன்று நிறுவப்படும் என்றும்  முதல் படமாக 'ஒரு புலியின் ஓசை' என்று ஒன்று எடுக்கப்படும் என்றும் அதற்கான வசனம் எழுதும் பொன்னான வாய்ப்பு இன தலைவருக்கு வழங்கப்படும் என்றும் பிரபாவிடம் இருந்து உறுதிமொழி வாங்கி கொடுப்பது.


      2. ஈழத்தில் அவ்வளவு குடும்பங்களுக்கும் தொலைக் காட்சி பெட்டி ஒன்றும் அதற்க்கு  கலைஞர் டிவி இணைப்பும் கொடுக்கப்படும் என்றும் உறுதியளிப்பது.


     3. இலங்கை தூதர் அம்சாவின் வங்கி கணக்குவழக்குகளை தெரிந்துகொண்டு அவர் காங்கிரசாருக்கு தரும் பணத்தை விட ஒரு ரூவாய் அதிகமாக நாமே காங்கிரசாருக்கு கொடுப்பது.


     4. தமிழ் ஈழம் மலர்ந்தால் மட்டுமே அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் வாய்ப்புக்கள் இருப்பதாக கேரளா ஜோதிடர்களை விட்டு அம்மாவிடம் சொல்ல சொல்வது.


    5.தமிழ் ஈழம் மலர்ந்த பின்பு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும்,  புலிகளின் கட்சி பாமாக விற்கு திமுக வை விட அதிக இடங்களை ஒதுக்கும் என்றும் உறுதிமொழி தருவது.


    6. மதிமுக உலகில் எந்த மூலையில் எந்த தேர்தலில் போட்டி போட்டாலும்  தேர்தல் செலவுகளை எத்தனை கோடி ஆனாலும்  ஈழ அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி மொழி அளிப்பது


    7. பாரதியும் ஜீவாவும் தமிழீழத்தை ஆதரித்தே வந்துள்ளார்கள் என்று சான்று கண்டுபுடித்து கம்யுனிஸ்ட்களிடம் சொல்லிவிடுவது

    8. ஈழத்தில் ஒவ்வொரு ஊரிலும் தாங்கள் விரும்பிய இடத்தில் கல்யாண மண்டபம் கட்டிக்கொள்ளலாம் என்றும் அதை இடிக்கும் அதிகாரம் யாருக்கும் எப்பவும் கிடையாது என்று கட்சி நடத்தும் நடிகர்களிடம் உறுதி மொழி அளிப்பது.

12 comments:

said...

மிக்க நன்றி களப்பிரரே !

உழவன்

said...

good satire...

said...

நமது அரசியல் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் black humour வகை பதிவு

said...

//தமிழ் ஈழம் மலர்ந்தால் மட்டுமே அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும் வாய்ப்புக்கள் இருப்பதாக கேரளா ஜோதிடர்களை விட்டு அம்மாவிடம் சொல்ல சொல்வது.//---ithu interesting..

It is pity that we are forced to write such satirical articles even in Eelam issue bcos of our incapable shameless politicians..
Senthil

said...

nanri tholare, miga arumaiyaagaa orunthathu. Vaalthukkukal. innum naraga eluthungal.

said...

பேசாமல் கலைஞருக்கு நிரந்தர முதல்வர் பதவியும், ஸ்டாலினுக்கு யாழ்ப்பாணம், அழகிரிக்கு கிளிநொச்சி, கனிமொழிக்கு முல்லைத்தீவு கொடுத்தால் ஒருவேளை இன்னும் தீவிரமாக கலைஞர் முயற்சி எடுக்கலாம்.

Anonymous said...

களப்பிரரே,
அழகிரிய ஈழ செயலாளரா அறிவித்தால்தான் okeyனு feel பண்றாராம் கலைஞர்.

ஜெயலலிதா swiss bankக்கு இலங்கைல இருந்து ரூட் இருக்கானு பாக்க சொல்லிருக்காங்க..

சீக்கிரம் பதில் கிடைக்கும். பார்போம் நல்லது நடந்தா சரி .

said...

கருணாநிதி ஐயடா உச்சம் தலையில அடிக்கிறீங்களே

said...

சைத பேட்டை குரோம் பேட்டை அடையார் திநகர் இன்னும் SRM தனலட்சுமி லொயல..நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் மண்ணிவாக்கம் ஓட்டேரி எல்லா இடத்திலும் இரவு விடுதி திறக்கலாம் மானாட மயிலாட பாருங்கோ காலேச்சு சுடண்டுக்கு இலவசம் டேடிங் தமிழ் வளர்க்கும் செம்மல் வள்ளுவர் GST ROAD முழுதும் எழுதிய தமிழ் வள்ளுவர்

said...

தோழா, வெளி நாடுகளும், ஐ. நா வும் தலையிடுவதற்க்கு என்ன செய்யலாம் என்பதையும் சொல்லவும்.- தளபதி, மதுரை.

said...

நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

தளபதி அவர்களே, உலக நாடுகளை இந்த பக்கம் வர செய்ய சில வழிகள்.

1. சவூதியிடமிருந்து சில பில்லியன் பேரல் குரூட் ஆயில் வாங்கி வன்னிக்கடியில் புதைப்பது.

2. தனி ஈழம் மலரும் பொழுது வருடம் 30 பில்லியன் தொகைக்கு ஆயுதம் வாங்குவோம் என்று உறுதி கொடுப்பது

3. அவர்களின் அணு ஆயுத கழிவு, உரம், பூச்சி கொல்லி மருந்து, பிளாஸ்டிக் எல்லாவற்றையும் நான் வங்கி கொள்வோம் என்று எழுதி கொடுப்பது

said...

மிக நன்று.