Wednesday, May 20, 2009

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

திருத்த முடியாத தமிழனே, "இது யாராலயும் கண்டுபிடிக்க முடியாத பொய்" என்று நினைத்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் தலைவர் உடல் என்று ஏதோ சோளக்காட்டு பொம்மை போன்ற ஒன்றை காட்டிக் கொண்டிருக்கிறது? அந்த இரண்டு நிமிட செய்தி காணொளியை பார்த்தபின் நமக்கு பத்து வினாடிகளில் தோன்றிய நாப்பது சந்தேகங்களும் சிங்கள ஆட்சியாளனுக்கு வராமலா போயிருக்கும் ??

அவர்களுக்க தேவை நம் சிந்தனையை - போராட்ட திசையை மற்ற வேண்டிய - வலுவிழக்க செய்யவேண்டிய செய்திகள். பரபரப்பு செய்திகள். அதற்காக அவர்கள் எந்த செய்தியையும் பரப்புவார்கள். அவர்கள் என்ன உண்மை செய்தியை மட்டுமே வெளியிடுவோம் என்று நம்மிடம் சத்தியம் செய்து கொடுத்தார்கள ?

சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள் என்று புரளி கிளப்பி, நமது உலக போராட்த்திற்கு ஒரு தடைக்கல் வைத்தான்.

கடைசி நாள் தாக்குதல்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியையும், நடேசன் போன்ற அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியையும் வலுவிழக்க செய்யவேண்டுமானால் அவர்கள் தனி ஈழம் தயார் என்று கூட செய்தி சொல்லுவார்கள். சின்ன கோடு, பெரிய கோடு தத்துவமும் தெரியாதா ?

இப்பொழுது நாம் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இன்றி அவர்களின் நிவாரணத்துக்காக போராட்ட சிந்தனை இன்றி, படுகொலை செய்யப்பட்ட மற்ற தலைவர்களை பற்றிய செய்திகளை எளிமைப்படுத்தி இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ பரிசோதனை சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கிறோம். அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.

13 comments:

said...

நச்சுன்னு சொன்னீங்க.

said...

சிங்கள மந்தைகள் எதைச் சொன்னாலும் நம்பத் தயாராக இருக்கிறார்கள் என்பதை விட... இவ்வாறான செய்தியை மிகவும் ஆசையுடன் எதிர் பார்க்கிறார்கள்.. கொண்டாட்டத்தின் முடிவில் எவ்வாறு உணர்வார்களோ தெரியவில்லை.. ஆனாலும் இவ்வளவு தமிழர்களையும் கொன்றது அவர்களின் வெற்றிதான்..

தமிழன் மனசு ரொம்ப மென்மையாக இருப்பதால்தான் மனிதமற்ற மாசுக்கள் இவ்வாறெல்லாம் ஆட முடிகிறது... சரிதான்.. இடமளிப்பது நாம்தான்!

said...

//அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.//

ம்ம்ம்ம்ம்.. உண்மை.. ஆயினும் மாவீரர்களுக்கு மரணமில்லை என்னும் உண்மையை, உணர்ச்சிவயப்படும் சமயத்தின் கண்ணீர்த்திரை மறைக்கின்றது.

:(

said...

...Eruthiyel Dharmam vellum,
Ethu tharkaliga vettri thann..
Enna ulgam?, arajagam thaan vazhukinrathu.

Anonymous said...

See the last picture.,

http://www.army.lk/detailed.php?NewsId=494

http://olaichuvadi.blogspot.com/2009/05/blog-post_9895.html

said...

சரியா சொன்னீங்க பாஸ்..

Anonymous said...

கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.

பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.

Anonymous said...

கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.

பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.

Anonymous said...

பல்லாயிரக்கணக்கான மக்களையும் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்று சிறுவர்களுக்கெல்லாம் ஸயனைடு குப்பிகளைக் கொடுத்து தற்கொலை செய்துகொள்ளச் சொன்ன கோழை ரவுடி தன் உயிரை பாதுகாப்பதற்காக கடைசிவரை வீண் முயற்சி செய்து ஓடி ஒழிந்து செத்துவிட்டான்

oru eelaththamilan said...

எல்லா அனைத்துலக ஊடகங்களுக்கும் போர் முனைக்கு செல்லத் தடை ,ஆனால் ஹிந்து முரளி ரெட்டி மட்டும் ராணுவத்துடன் இருக்கிறாராம்.
அப்போ இவர் போன்றோருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று தெரியும்.
தமிழ் மக்களும் போராளிக்களும் கொல்லப் படுவதை ரசிக்கப் போனார்களாக்கும்
தூ ,இவர்களெல்லாம் பெரிய பத்திரிகையாளர்கள் !
ஹிந்துவுக்கும் சிங்கள அரசு,ராணுவம் எல்லாவற்றுக்கும் இப்படி கேவலமான உறவு இருப்பது எங்களுக்கு தெரிந்ததுதான்.

said...

இங்கு பின்னூட்டமிட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி !!!

said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Anonymous said...

//சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள்என்று புரளி கிளப்பி,...//

அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை புலிகள் அழித்து விட்டார்கள் என்று கூறி கொண்டாட்டம் நடத்தியது புலி ஆதரவாளர்கள் தான்.
கிளி நொச்சியை பறிகொடுத்த போதும் திட்டமிட்ட பின் வாங்கல் தலைவர் உள்ளேவிட்டு வர விட்டு ராணுவத்தினரை அழிக்க போகிறார் என்று சொன்னதும் புலி ஆதரவாளர்கள் தான். இப்போ தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதும் புலி ஆதரவாளர்கள் தான்.