Wednesday, April 22, 2009

ஏன் தந்தி - நியுரோ மன்னன் விளக்கம்.

ஏன் தந்தி - நியுரோ மன்னன் விளக்கம்.

உடன் பிறப்பே,

"எப்ப பார்த்தாலும் இந்த ஆளு ஏன் தந்தி அடிக்கிறாரு ?" னு நீயும் ஆதிமுக தொண்டன் மாதிரி பேச ஆரம்பித்து விட்டாயே. வேதனை படுகிறேன், உடன் பிறப்பே !
நானும் நாமும் தொடர்ச்சியாக இந்த நாட்டை ஆளும் கொடுமையான கடமையை செய்ய இந்த தந்தி தான் சிறந்த தொலை தொடர்பு சாதனம் என்பதை உனக்கு விளக்கி சொல்ல கடமை பட்டுள்ளேன். அது தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பல்ட்டி அடிக்க உதவும்.

இந்திய ராஜாங்கத்தில் மயிர் புடுங்கி மைய அரசு நடத்தும் தந்தி சேவை இரண்டே மொழிகளில் செயல் படுகிறது. ஒன்று ஆங்கிலம், மற்றொன்று இந்தி. "ஒன்றுமே நடக்கவில்லை" என்று எந்த பொடியனாவது தீக்குளித்தால் தலைவரின் இந்தி தந்தி தெளிவாக புரிந்து கொள்ள படவில்லை என்று நீ அவசரப்பட்டு தீ குளித்து விடாதே !

தந்தி சுருக்கமாக அடிக்கப்படுவது தான் மரபு. அதுவும் நமக்கு சாதகமாக அமையலாம்! . சோனியா விற்கு "help tamil speeking people" என்று நான் அடித்த தந்தி சோனியாவால் "ஹெல்ப் ராஜபக்சே" என்று புரிந்து கொள்ளப்படலாம், அவனும் தமிழ் பேசும் மற்றொரு நண்பர் தானே !

சோனியா ஜி ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால்," தந்தி அக்பர் சாலையில் உள்ள அவரது அலுவலக முகவரிக்கு அடிக்கப்பட்டது. தமிழனின் கேட்ட நேரம் அவர் வீட்டை விட்டே வெளியே போகவில்லை என்று உனது கலைஞர் டி வி செய்தி ஆசிரியரிடம் சொல்லிவிடு தோழா !!

தமிழ் நாட்டில் உள்ள புறா க்கள் எல்லாம் அதி மு க மாநாடுகளுக்கு ரோஸ்ட் ஆக்க பட்டதால், தி மு க தொண்டர்களால் புறாக்களை புடித்து வர இயலவில்லை. அதன் காரணத்தால் தந்தி அடிக்கும் கொடுமையை இந்த வயதான காலத்தில் நான் செய்யவேண்டிய நிலைக்கு வந்து விட்டது. இந்த பாவம் அந்த அம்மையாரை சும்மா விடுமா என்பதை உன் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் !

இப்படியான காரணங்களில் ஒன்றோ இரண்டோ நம்மையும் நமது கழக ஆட்சியையும் பாதுகாக்கும் என்பது நீ அறியாதது அல்ல .

பின் குறிப்பு:

தொலை பேசியில் கற்புக்கரசி - படிதாண்டா பத்தினி - தூய்மையின் மொத்த உருவம் - அன்னை சோனியா விடம் பேச நேர்ந்தால் தலைவர் ஒன்னுக்கு போகிவிடும் அபாயம் இருப்பதால், தந்தி அடிப்பதே அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வசதி.

தலைவருக்கு ஆங்கிலம் வராது என்பதும் அவர் சார்ப்பாக சோனியா வுடன் ஆங்கிலத்தில் பேச தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களில் யாவருக்கும் அருகதை இல்லை என்பதும், நமது வருங்கால தகவல் தொடர்பு துறை அமைச்சருக்கு ஆங்கிலத்தில் எண்களை மட்டுமே உட்சரிக்க தெரியும் என்பதும் கொசுறு செய்தி.

1 comments:

said...

உடன்பிறப்பே... 'நீ'யூரோ மன்னனா?? முன்னேற்றம் என்பது படிப்படியாக இருக்கவேண்டும் என்பதில் உருதிப்பாடு கொண்டவனடா நான்... இப்போது தான் நாங்கள் கடிதத்திலிருந்து தந்திக்கு வந்திருக்கிறோம், இன்னும் சில ஆண்டுகள் பொருத்துக்கொள்ளடா நாங்கள் மின்-அஞ்சலுக்கு வருவோம், சில நூற்றாண்டுக்கு பின் யாகூ சேட்டுக்கு வருவோம்... பின் தரைவழி தொலைபேசிக்கு வருவோம்... அதற்குபின் வான்வழி தொலைபேசிக்கு வருவோம்... பொருத்திருந்து பாரடா என் கண்மணியே....

உயர்திரு கலைஞர் சார்பாக,
கழக அடிப்பொடி.