Tuesday, June 10, 2008

உலக மயமாகும் உளறல்கள் ...

ச்சே.. தொலை காட்சி பெட்டி எப்பொழுதோ குப்பைகளை நடுவீட்டில் கொட்டும் தொல்லை காட்சியாக மாறிவிட்டது .. அது பத்தாதுன்னு இப்ப இணையமும் !! இந்த இன்டர்நெட் இணைப்பும், கணினி கீபோர்ட் விலையும் தாருமார இறங்குனாலும் இறங்குச்சு.. ஆளாளுக்கு பதிவு போடுறானுங்க... அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல - படிக்கிரவனுக்கு சொந்த அறிவு இருந்து பகுத்து அறிவும் இருந்து படித்து புரிந்து கொண்டால். ஆனா பாவம் நம்ம பசங்களுக்கு இந்த பொது அறிவு பகுத்து அறிவு எல்லாம் இருந்தா நம்ம நாடு இந்த நிலமைல இருக்குமா ??

எங்கெங்கு காணினும் அபத்தமாகவே இருக்கிறது...எங்கோ வெளி இடப்படும் அபத்தங்கள் எல்லா இடங்களுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பறக்கிறது ...
சாம்ப்ளுக்கு ஒன்னு ரெண்டு பாருங்க....

நண்பர் ஒருவர் அவரது பதிவில் குறிப்பிடுகிறார் ...

// XXXXXXX அவர்கள் அற்புதமான மேடைப்பேச்சாளர். அவர் ஒரு முறை
சொன்னார் நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. அது ஆங்கிலேயர்
களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது. பண்டைய தமிழ் மரபில் அவ்வழக்கம்
இல்லை!

அவர்கள் (ஆங்கிலேயர்கள்) ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் அடுத்த
வருடம் அவன் யாரோடு வாழப்போகிறானோ அல்லது அவள் யாரோடு வாழப்
போகிறாளே - ஒரு நிச்சயமற்ற தன்மை. ஆகவே ஒன்றாக இருக்கும்வரை
அதைக் கொண்டாடுவார்கள்//

ஆகா என்ன அற்புதம் !!! நம்ம ஆளுங்க அத கொண்டாடுகிறது இல்லைன்ற ஒரே காரணத்துக்காக, அதுக்கு ஒரு 'reverse இன்ஜினியரிங்' காரணம் வேற !!! நம்ம ஆளுங்கல நம்மாலே உயர்த்தி பேசிக்கிரதுக்கு இருக்குற ஒரே வழி - அடுத்தவன மட்டம் தட்டி பேசு. ஏதோ வெளிநாட்டில் இருக்குறவன் எல்லாம் வருஷம் வருஷம் வேற வேற துணை தேடிக்கிறது மாதிரி பேசு... இந்த லாஜிக்க அப்படியே வெள்ளை கார துரை நம்மல பார்த்து சொன்னா எப்படி இருக்கும் "தமிழர்கள் பொங்கல் என்று அறுவடை திருநாள் ஒன்றை கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பொங்கல் வைத்து உண்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அடுத்த அறுவடைக்கு நெல் விளைகிறதோ இல்லையோ என்ற கவலையும், பொங்கல் சாப்பிட அவர்களே உயிரோடு இருப்பார்களோ இல்லை எலி கரி தான் கிடைக்குமோ என்ற அச்சமுமே உள்ளது "

நான் லொள்ளு சபா ஒன்றை தளவிறக்கம் செய்து பார்த்து கொண்டிருந்தேன். அதன் விளம்பர இடைவெளியில் மற்றொரு நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒருவர் சொன்னது "பெண்கள் ஏன் நடு உச்சி எடுத்து தலை சீவுகிறார்கள் என்பது தெரியுமா ?? ஏன்னா உச்சிக்கு ஒரு பக்கம் இருக்குறது புகுந்த வீட்டையும், மற்றொரு புறம் வளர்ந்த வீட்டையும் நினைத்து பார்க்க "
இந்த மாதிரி அபத்த பேச்ச கேக்கவே சலிக்குது. இத ஒருத்தன் கேட்டு, அத ஒருத்தன் டயரக்டு வேற பண்ணி, அரை மணிக்கு ஒரு தடவை காது கூசும் அளவிற்கு ஒளிபரப்புகிறார்கள் ..

ஏன்டா டேய், ஏங்க சார், அப்ப உச்சி எடுத்து சீவாத எந்த பொண்ணும் பிறந்த வீட்டையோ புகுந்த வீட்டையோ மதிக்குறது இல்லையா ??? தமிழ் பெண்கள் ஒரு முப்பத்தஞ்சு கோடி தவற குறைந்தது இரநூற்றி அம்பது கோடி பேரு இந்த உலகத்துல இருப்பாங்களே சார்... அவுங்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு கிடையாதா ?? இதெல்லாம் எங்க சார் படிக்கிறீங்க ?? சரி, எங்கயோ பழைய 'எட்டு தொகை , பத்து பாட்டுல கூட சொன்னதாக வே இருக்கட்டும் ... அப்படி சொல்லிட்டன்றதுக்காக அத மறு பரிசீலனையே செய்ய மாட்டீங்களா ??

மற்றொரு இடத்தில் ஒருவர் இந்தியாவில் அமெரிக்காவை போன்று நேர் கோடுகள் கிழித்து மாநில எல்லைகளை உருவாக்கி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லுபவரோ அமெரிக்காவில் வெட்ட வெளிகள் அதிகம். ஆதலால் நேர்கோடுகள் போட்டுக்கொள்ள முடியும் ... இங்கு முடியாது என்று கூறுகிறார்.

ஆமாம், அமெரிக்கா இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடு. அதனால் இந்தியாவை விட வெட்ட வெளிகள் அதிகமே. ஆனா அங்கேயும் பல மாநிலங்களிலில் பறந்து ஆக்கிரமிக்கும் சில ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள பல மலை தொடர்களும், சில நூறு சதுர கிலோ மீட்டர் உள்ள ஏரிகளும், பாலை வனங்களும் உள்ளன...நிற்க..அமெரிக்கா முதலில் காலனி ஆதிக்க வாசிகளால் - அவர் அவர்கள் குடியேற்ற பகுதிகளை (பிரஞ்ச், ஆங்கிலேய, ஸ்பானிஷ் மற்றும் டச் காரர்கள் ) அவர் அவர் வசதிக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எல்லை பிரித்து கொண்டார்கள். பின்னர் ஆங்கில குடி வாசிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சுதந்திரம் வாங்கி, அதன் பின் மாற்ற மாநிலத்தவர்களை இணைத்து கொண்டார்கள். இவர்கள் யாரும் அமெரிக்கா பூர்வ குடி மக்கள் இல்லை. ஆனால் இந்திய அப்படி இல்லாமல், பல இன பூர்வ குடி மக்களை கொண்டிருந்ததால் மொழி வாரியான மாநிலம் தேவை பட்டது. ஒரு மொழி பேசுபவர் மற்றொரு மாநிலத்தில் சிறு பான்மையாக இருந்தால் அவர்களுது மொழி உரிமை நசுக்கப்படும் சூழல் ஏற்ப்படலாம் என்பதால். எனவே மாநில எல்லைகள் அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்டது ...

மற்றொரு இடத்தில் 'பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?' என்று ஒருவர் கேட்க, அதற்கான பதிலில் 'ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது' என்று கூறப்பட்டுள்ளது !!

தமிழ் ஈழ அரசியல் அவ்வளவாக தெரியாத அல்லது நகைச்சுவைக்கவே பதிவுகளை படிக்கும் நபர் ஒருவர் இதை படித்தால் என்ன நினைப்பார். ஏதோ இந்திய ஈழ போராட்டத்திற்கு ஆதராவாக ராணுவத்தை அனுப்பியது போலவும், அதை பிரபாகரன் மறுத்து விட்டதை போலவுமே எண்ண சந்தர்ப்பங்கள் அதிகம் ..

பிரபாகரனின் அந்த நிலைக்கு பின் இருக்கும் எண்ணற்ற எவரும் மறுக்க முடியாத காரணகளை ( ஈழ பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை அதிபருடன் ராஜீவ் அவர்கள் - 'தமிழ் ஈழ போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமலே அவர்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, அதன் முடிவை ஏற்க சொல்லி மிரட்டியது, அஹிம்ச்சை வழியில் போராடி சுதந்திரம் வாங்கியதாக மார்தட்டி கொள்ளும் ஒரு நாட்டின் அரசு அஹிம்ச்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை சாக விட்டது , மிரட்டலில் பயப்படாத காரணத்தலால் யாரின் சார்பாக இதுவரை நடந்து வந்ததோ - அவர்களின் மீதே படை ஏவியது - தமிழர்களை கொன்று குவித்தது.. இப்படி இருக்கும் அவ்வளவு வரலாறையும் )மறைக்கும் விதமாக எழுதப்படும் ஒரு விச பருக்கை தான் "ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது.

இவைகளை எல்லாம் இங்கு எழுதுவதன் நோக்கம், சிலர் பழைய - மூத்த பதிவர்களாய் இருப்பதால், அவர்களின் பதிவு பல தரப்பு மக்களால், மிகவும் அதிகமான மக்களால் படிக்க படுகிறது. அந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வரலாற்றை மறைக்கவும், திசை திருப்பவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கவும் பல சமங்களில் உபயோக படுகிறது. எனவே அவ்வாறான பதிவுகள் வரும் பொழுது அவற்றிக்கான எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வதும் தவிர்க்க இயலாதவையே.

21 comments:

said...

ரொம்ப ரொம்ப ரொம்ப சரி. அவ்வளவும் சரியான வாதம். நான் நினைக்கிறதை அப்படியே எழுதினதுக்கு ரொம்ப நன்றி, களப்பிரர்!

Anonymous said...

wow excellent..

Anonymous said...

இந்த தொ.கா. குப்பைகளை கேள்வி கேட்காமல் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும் நம் பொதுசனத்தின் பாடு மிக்க் கொடுமைதான்.

அப்புறம் 'அந்த'வலைப்பதிவில் வருவது 'திட்டமிடப்பட்ட' விசமத்தனம்.

தேவையான நேரத்தில் இப்படி சாட்டையை சொடுக்குங்கள் ;)

said...

ரொம்ப நன்றி களப்பிரர்.

said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

said...

நண்பர்கள் அணைவரின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி !!

said...

//'பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?' என்று ஒருவர் கேட்க, அதற்கான பதிலில் 'ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது' ///


You have rightly exposed the above lie on Indian Stand on Srilanka..

Anonymous said...

உன்னுடைய பதிவின் மாஸ்டர் பீஸ் இதுதான்....
தனித்துவம் தெரிகிறது...

said...

//தமிழ் பெண்கள் ஒரு முப்பத்தஞ்சு கோடி தவற குறைந்தது இரநூற்றி அம்பது கோடி பேரு இந்த உலகத்துல இருப்பாங்களே சார்//

தமிழ் பெண்கள் ஒரு முப்பத்தஞ்சு கோடியா களம். எண்ணிக்கை தவறாச்சே

said...

வாங்க தலை...தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி. மன்னிக்கவும்.

மூணரை கோடி என்பதே சரி. நமக்கு இந்த லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் எல்லாம் ஆகுரதில்லை தலை.

said...

பிரபாகரனை பற்றி நீங்கள் எழுதியது முற்றிலும் சரியானது. அவர் வேறு எந்த முடிவை எடுத்திருக்க முடுயும். இந்திய ராணுவத்தை எதிர்ப்பதை தவிர

said...

அண்ணே,
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

Anonymous said...

vinavu.wordpress.com

Anonymous said...

https://vinavu.wordpress.com

said...

kalappiraar, sariyaana adi!

said...

களப்பிரர் ஆழ்ந்த சிந்தனை வரவேற்கிறேன்.நம் உள்நாட்டு அபத்தங்களை விடுங்க.அவற்றை இந்த மாதிரி பதிவுகளாலும் எழுத்துக்கள் எண்ணங்களாலும் மாற்றி விட முடியும்.ஆனால் முக்கியமாக மாற்றவேண்டிய ஆனால் எதிர்மறையாய் மறைந்து கிடப்பது இந்த ஈழத்துப் பிரச்சினை.ஈழத்துப் பிரச்சினையை எழுதும் பதிவர்களின் பின்னூட்ட நிலைகளைப் பாருங்க.எல்லாமே காலியாக இருக்கும்.பேசும் உரிமையும் விவாதக்களத்திற்குப் போகும் நிலைக்குத் தள்ளப்படுவது மாத்திரமே நாம் ஈழத்துக்கு அளிக்கும் தார்மீகக் கடமையாக இருக்க முடியும்.பதிவிற்கு நன்றி.

said...

மிக ஆழ்ந்த, ஆரோக்யமான சிந்தனை. உங்கள் கருத்துகளில் உண்மை உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை எழுதுங்கள்.
குறிப்பாக ஈழத்தமிழரின் பிரச்சனை குறித்து, இந்தியத்தமிழர்களில் பெரும்பாலனவர்கள் தெளிவான பார்வையின்றி உள்ளார்கள். நீங்கள் எடுத்துக்கூறியது நன்றாக இருந்தது.

said...

கொடுமை
மன்னிக்கவும்.
எதிர்மறையாய் மறைந்து கிடப்பது இதுதான்....
'திட்டமிடப்பட்ட' விசமத்தனம்.

said...

தசாவதரத்துல George Bஉஷ் ஐ நல்லா ஒட்டிட்டாங்க. இதுக்கு அமெரிக்கால யாரும் எதிர்ப்போ, இல்ல அமெரிக்கன் எம்பசில இருந்து யாரும் கண்டனமோ தெரிவிக்கல.

அப்படியெ, கொஞ்சம் உல்டாவா யோசிச்சி பாருங்க. ஒரு அமெரிக்க படத்துல நம்ம மன்மொகன் சிங்கையோ இல்ல வாஜ்பையனையோ (பாய்க்கு தமிழ்ல பையன் தானுங்க??) நக்கல் அடிச்சிருந்தா எத்தனை கொடும்பாவி எரிஞ்சிருக்கும்? எத்தனை பஸ், ட்ரைனை கொளுத்திருப்பானுங்க?? எத்தனை கலாசார புலி(ளி)கள் இந்திய கலாசாரம் எவ்வளவு ஒசத்தி, அமெரிக்க கலாசாரம் எம்புட்டு கேவலமுன்னு பேசிருப்பாய்ங்க??

அட, 80% கிறிஸ்தவங்க இருக்கிற நாட்ல கூட Da Vinci Codஎ படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்ல, ஆனா தமிழ்னாட்டுல தடை பன்னிட்டாய்ங்க. ஏன்? கலாசாரம் பாதிக்குமாம்.

அடடா, ஒரு படம் வந்தா பாதிக்கிற அளவுக்கு நோயாளியாவாடா தமிழ் கலாசாரம் இருக்கு?

என்னத்த சொல்ல? இவய்ங்க கலாசாரட்தை காப்பாத்துற காப்பாத்துல, அதுக்கு சேல அவுந்துருமாட்ருக்கு!

said...

இந்த பதிவை முன்பே படிக்க தவறி விட்டேன். அத்தனையும் அருமையான கருத்துக்கள்!

முக்கியமாக வெளிநாட்டுக்காரர்கள் கலாச்சாரம், அர்த்தமற்ற பெண்களைப்பற்றிய பேச்சுக்கள், ஈழ விடுதலை விவகாரம் போன்ற கருத்துக்களில் ரொம்ப தெளிவு!

நிச்சயமாக ஒரு சிலராவது நீங்கள் எழுதி இருப்பதைப்பற்றி சிந்திப்பார்கள்.

Anonymous said...

டோண்டு போன்றவர்கள் நாம் என்ன சொன்னாலும் அவர்கள் சொல்வது தான் சரி என்பார்கள். அவரிடம் எதிர்மறையாகக் கேள்விகேட்பவர்களுக்கெல்லாம் திசைதிருப்பும் பதில்கள் தான் வரும். அதனாலேயே அவருடைய பதிவுகளை நான் படிப்பதில்லை. நான் எதற்காக தேவையில்லாமல் என்னுடைய ரத்தக் கொதிப்பை ஏற்றிக் கொள்ள வேண்டும்?