Sunday, May 25, 2008

சபரி மலையும் ஜட்டியும்

 

சபரி மலையும் ஜட்டியும் ....

நேத்து நண்பன் ஒருவன் ஒரு செய்தி சொன்னான்.. அதை கேட்டபின்னாடி நம்ம நாட்ல நடக்குற காமடிக்கு அளவே இல்லாம போச்சூனு தோனுது. செய்தி இது தான் : இனிமேல் சபரி மலைல வேலபாக்குற பசங்க இனிமே ஜட்டி போட்டுட்டு வேலைக்கு போலாம்னு கோர்ட்டே தீர்ப்பு சொல்லிடுசாம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் - தாங்களாக மனம் உருகி காணிக்கை ஆக்கி உண்டியலில் போடும் பணம் மற்றும் நகைகளை அங்கே வேலை பார்க்கும் நபர்கள் திருடி விடக்கூடாது என்பதற்க்காக, அவர்களுக்கு  அங்கு இருக்கும் 'சட்டம்' - ஜட்டி போட்டுட்டு வேலைக்கு வரக்கூடாது. வெறும் மெல்லிய வெட்டி தான்! நம்ம ஊரு காரனுங்க ரெம்ப புத்தி சாலி. இதற்க்காக கோர்ட் வரை போய் - இப்ப கோர்ட்டே ஜட்டி போடலாம், இனிமே புதிய  தொழிநுட்ப கருவிகளை உபயோக படுத்தி திருட்டை தவிர்க்கவும் னு தீர்ப்பு சொல்லி இருக்கு.

எளிமையாக, உலோக கண்டுபுடிப்பன் (metal detector) பயன்படுத்தி இதை தடுக்கலாம் என்ற அறிவு அந்த 'ஜட்டி கூடாது' என்று சட்டம் போட்டவனிடம் இல்லையா, இல்லை  நாம் போடும் சட்டங்களை மதித்து வேலைக்கு வந்தா வா - இல்லாட்டி நாங்க வேற ஆள பார்துக்குறோம் என்ற திமிரா, இல்லை வருடா வருடம் எட்டு கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வரும் கடவுளை 'சில லட்சங்கள் செலவு செய்து  உலோக கண்டுபுடிப்பான் போன்ற வற்றை வாங்கி' ஏழை ஆக்கிவிட கூடாது என்ற நல்லெண்ணமா ??

தனது  கோவிலில் நடக்க கூடும் திருட்டுகளை கூட தடுக்க இயலாத கடவுள்,  உங்க பீரோவில்  இருக்கும் நகைகளையா  காப்பத்தபோறாறு ??  அப்படியே திருடு போனாலும் காவல் துறை "ஜட்டி போட்டு வந்து திருடர்கள் திருடினால் நாங்கள் பொறுப்பல்ல" னு சொன்னாலும் சொல்லும். கொடுமைடா சாமி!

----------------------------------

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி...

நீங்கள், "இந்துக்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லைன்னு" கோவில்களில் அறிவிப்பு பார்த்து இருக்கீர்களா? நான் போன ஒரு சில கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. அங்க சமீபத்தில் (1873 அல்ல ) கூட  பார்த்திருக்கிறேன். இந்த அறிவுப்பு எதன் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது என்பது உனக்கு தெரிந்தால் சொல்லப்பா என்று என் நண்பன் கேட்டான். எனக்கு தெரியதால், இங்கு இருக்கும் இந்துகளுக்கு - மற்றும் இன்னும் தாங்கள் இந்துக்கள் என்று நம்பி கொண்டிருக்கும் நபர்களுக்கு - இந்த கேள்வியை சமர்பிக்கிறேன்!

இந்து மதம் என்பது உலகில் தோன்றிய பழமையான மதம் என்பதும், அந்த  மதமும் அதன் வேதங்களும் எழுதப்பட்ட பொழுது மற்ற மதங்கள் தோன்றி இருந்திருக்காது என்பதும்  குறிப்பிடத்தக்கது.  கோவிலுக்கு இந்துக்களுக்கே அனுமதி இல்லையாம், இதுல வெள்ளகாரனுக்கு என்னவாம்னு கேக்காதீங்க...!!

----------------------------------------------

10 comments:

said...

http://bayamairukku.blogspot.com/2008/05/blog-post_18.html

said...

ஐ! எங்க ஆபீஸ்லயும் இப்படி ஒரு சட்டம் போட்டா எவ்வளவு ஜாலியா இருக்கும்!!

said...

மனித நேயத்தை
வற்புறுத்தாத
எந்த மதமும்
ஏற்ப்புடையதல்ல..

said...

கருப்பு உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்

said...

கருப்பு,

நீ கஸ்டமர் கேர்ல வேலபக்குற போல ??

எங்க ஆபீஸ்ல ஒரு பொண்ணு கூட இல்ல.....

:(

said...

நண்பரே,
உங்கள் நட்சத்திரவாரம் மூலமாக அறிமுகமாகி எல்லாப்பதிவுகளும் படித்தேன். அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் கூடிய சமூகநலம் விரும்பும் பதிவுகள். தாமதமான வாழ்த்துகள் நண்பரே. இங்கு ப்லாக்கர் தடையினால் அப்போதே பின்னூட்ட முடியவில்லை.

//நீங்கள் கலாச்சார காவலரா ? உங்கள் மனம், மதம், கடவுள் எல்லாம் பிரிக்க முடியாத கலவையா ? தேச பக்த்தரா? டீ, காபி, ஜூஸ் தவிர வேறு பானங்களை அறிந்திராதவரா ??//

பின்னூட்ட வந்த இடத்தில் இதுவே ரொம்ப புதுமையாக இருந்தது. ரொம்பவும் வித்தியாசமான ஆள்தான் நீங்கள் ;-)

சினேகபூர்வம், முபாரக்

said...

நட்சத்திர வாரத்தில் நகைச்சுவை மிளிர சமூக அவலங்களை தோலுரித்து கட்டுரைகள் போட்டீர்கள். பிறகு சிறிது அமைதியாகிவிட்டீர்கள்.... என்னவென்று விசாரிக்கலாம் என்று இருந்தேன். அதற்க்குள் நீஙக்ளே பின்னூட்டமிட்டுவிட்டீர்கள் :-)

ஜட்டி கட்டுரை சூப்பர் அண்ட் நக்கல்.... அதுவும் ஐய்யப்பனை எவனெல்லாம் தொட்டான் என்று கண்டுபிடிக்க முடிஞ்ச ஐய்யப்பனால் எந்த ஜட்டிக்குள் எனன் ஒழித்து வைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க முடியாதாய்யா என்று எழுப்பியிருந்த கேள்வி வெகு அருமை....

பலித்தவரை பார்ப்ப்னியம் என்று சொல்வார் பெரியார். இதை நடைமுறையுடன் இணைத்து புரிந்து கொள்ள வே. மதிமாறனுடைய கட்டுரைகளை படிக்கலாம்.

'இந்துக்களுக்கு மட்டும் அனுமதி' என்று போட்டுவிட்டு வெள்ளைக்காரனுக்கு கடவுளை கா(கூ)ட்டிக் கொடுப்பதும், இந்துக்கள் எனப்படும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை இழிவுபடுத்துவதும் என்று பார்ப்ப்னியத்தை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்ளும் உத்திதான் அது.

அசுரன்

said...

மகர விளக்கு மனிதன் ஏற்றுவதுதான் கடவுள் சக்தி ஒன்றும் கிடையாது:”-சபரிமலை தந்திரி ஒப்புதல்.

பொன்னம்பலமேடு பித்தலாட்டம் அம்பலம்!
கேரள மந்திரியும் கூறுகிறார்.

மோசடியை அரசு தடை செய்யுமா?

திருவனந்தபுரம், மே 29- ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த அய்யப்பன் பொம்மையை வைத்துக் கோயில் கட்டிக் கும்பிடும் சபரிமலைக்கு சற்றுத் தூரத்தில் பொன்னம்பலமேடு எனும் காட்டுப் பகுதியில் பொங்கல் நாளன்று மூன்று முறை தீ எரிந்து அணையும்.

இதை மகரவிளக்கு என்று கூறி, தெய்வாதீனமாக இது நடப்பதாகப் புளுகி, மக்களை ஏமாற்றி, அவர்களின் கடவுள் நம்பிக் கையை மலிவான முறையில் முதலீடாக்கி சபரிமலை கோயிலும், குருக்களும், கேரள அரசுகளும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

புத்தியை இழந்து பக்தியில் ஆழ்ந்த, மூட பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்குச் சென்று வருவதன்மூலம் கேரள தேவஸ்வம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் கோடிக் கணக்கில் வருமானம் ஆண்டு தோறும் குவிந்து வருகிறது.

இதை இழக்க விரும்பாத இவர்கள், இந்த மோசடியை நீடிக்க அனுமதித்து வந்தார்கள். கேரளப் பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் இந்த மோசடியை அம்பலப்படுத்திய போதெல்லாம் அவர்கள்மீது காவல்துறை அடக்குமுறையும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.

கேரள மின்வாரிய ஊழியர்களின் கூட்டு மோசடியால் பொன்னம்பலமேடு காட்டுப் பகுதியில் நெருப்பைக் கொளுத்தி, மகரவிளக்குப் பித்தலாட்டம் நடந்துவந்த நிலையில், பகுத்தறிவாளர்கள் அதற்கு எதிர்த்திசையில் நெருப்பைக் கொளுத்தி எதிர்நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் மட்டுமல்லாது, கேரள மின்வாரிய ஊழியர்கள் நெருப்பைக் கொளுத்துவது, அவர்களின் ஜீப் வண்டி அருகில் நிறுத்தப்பட்டிருப்பது ஆகிய ஒளிப்படங்களையும் வெளியிட்டு உண்மையை நிலை நிறுத்தினர்.

காங்கிரசுக் கட்சி கேரளாவை ஆண்ட காலத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, சட்ட மன்றத்தில் இதுபற்றிக் கேள்வி வந்தபோது, முதலமைச்சர் கருணாகரன் இதை ஒப்புக் கொண்டார்; மக்களின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்பதால், அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்று பூசி மொழுகி விட்டார்.

ஈ.கே. நாயனார் கேரள மாநில முதலமைச்சராக இருந்த போது, கேரள பகுத்தறிவாளர்கள் அவரை நேரில் சந்தித்து விவாதித்தபோது, நீங்கள் சொல்வது உண்மைதான்; மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தான் செயற்கையாக தீபம் காட்டுகிறார்கள் ஆனாலும், தடை செய்ய முடியாது என்று கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகர விளக்கு தெய்வீகச் செயலல்ல; மனிதனின் செயல் தான் என்று சபரிமலை குருக்களான கண்டரேறு மகேஸ் வரரு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கேரள அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரள அற நிலையக் குழுமத் தலைவர் சி.கே. குப்தன் என்பவரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசு இதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது; ஏனென்றால், இது கலவரத்திற்கு ஏதுவாகி விடும் என்று மந்திரி கூறுகிறார். மகரவிளக்கைக் கொளுத்திக் காட்டுவதைத் தடை செய்ய முடியாது என்று தேவஸ்வம் போர்டு தலைவரும் கூறுகிறார்.

இவர்கள் இரு வருமே இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.சபரிமலை தந்திரி கண்ட ரேறு மகேஸ்வரரு தன் பெயரன் ராகுல் ஈஸ்வர் மூலம் அளித்த அறிக்கையில் மகர விளக்கு கொளுத்துவது காட்டு மக்களின் பழக்கம் என்பதாகவும், மகரஜோதி என்பது வானில் உள்ள நட்சத்திரம் எனவும் கூறியிருக்கிறார்.

மகர விளக்கு என்பதே பித்தலாட்டம் எனப் பகுத்தறிவாளர்கள் கூறி, அதனைக் கையும், களவுமாகப் பிடிப்போம் என்று அறிவித்து, காட்டுக்குள் நுழையப் போன போது கேரளக் காவல் துறையும், வனத் துறையும் சேர்ந்து கொண்டு அவர்களைத் தடுத்துவிட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இதன் மூலம் பித்தாலட்டத்திற்குத் துணைபோன குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.தற்போது சபரிமலை தந்திரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள நிலையில், பக்தர்களுக்கு அறிவுத் தெளிவைத் தரவேண்டியது மதச் சார்பற்ற மாநில அரசின் கடமை அல்லவா?

ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டியதும் அரசின் கடமையல்லவா? அதைச் செய்வதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எதிர் பார்ப்பு.

said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!

அசுரன் அவர்களே , அமைதியாக இருந்ததற்கு மன்னிக்கவும். கொஞ்சம் அலுவலக வேலைகளால் முடியாமல் போனது. இப்பொழுது பதிவு ஒன்று போட்டுவிட்டேன் !!

said...

நச்!