Thursday, May 22, 2008

புதிய சித்திர புத்திரனின் விவாதங்கள் - பகுதி 1

 

முன் குறிப்பு: சித்திர புத்திரனின் விவாதங்கள் என்ற தலைப்பில் பெரியார் சிலருக்கு இடையில்  ( எடுத்து காட்டாக  : ஒரு சிறுவனுக்கும்  அவனது தந்தைக்கும் இடையே  நடக்கும்   - கையில் டாலர் கட்டினால் பரிட்சையில் தேர்வாகி விடலாம், மயில் இறகு குட்டி போடும் போன்ற ) நடக்கும்  விவாதங்கள் மூலம் தனது கருத்துகளை நகைச்சுவை உடன் சொல்லி இருப்பார். அது போல நம்மளும் எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவு இது. பெரியார் விவாதங்களில் மகனின் / மகளின்  மூட பழக்கங்களுக்கு அம்மா / அப்பா விளக்கம் அளிப்பார். இங்கு சமயத்தில்  தலைகீல்.

இளைஞன்: அப்பா, நம்மாளால் நாட்டு மக்களை வறுமையில் இருந்து காக்க முடியுமா ?
அப்பா: தெரியலையேடா.. முடியாதுன்னு தான் நினைக்கிறேன்.

இளைஞன்: அப்பா, நம்மாளால் நாட்டு மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாத்த முடியுமா ??
அப்பா: அரசு மருத்துவ மனைகள் இருக்குற லட்சனத பத்தி நீ கேள்வியே பட்டது இல்லையா ? பேப்பர் படிடா... போது அறிவ வளைத்துக் கோடானு எம்புட்டு தடவ சொல்லியும், நீ கேக்கலைல ?

இளைஞன்: ஜாதி அடக்கு முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை காப்பாத்த முடியுமா, அப்பா ?
அப்பா: ஏழு செங்கள நகட்டினதுக்கு யாரு யாரெல்லாம் சப்போர்ட்டுக்கு வரானு நீ செய்தியே பாக்கலையா மவனே ?

இளைஞன்: எம்.பில், எம்.எஸ்ஸி னு படிச்சுட்டு கபாடி விளையாடுரவனுங்கள வேலை இல்லா திண்டாட்டம் பிச்சகாரனா  ஆக்க போறதுல இருந்து காப்பாத்த முடியுமா ?
அப்பா: முடியாதுதான்....

இளைஞன்: இப்படி மக்களை எதுல இருந்தும் காப்பாத்த முடியாத நாம், 'கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஜாதியையும்' காப்பாத்த இம்புட்டு கஷ்ட படுரமே , ஏனப்பா ?
அப்பா: ????

இளைஞன்: ஏன்னா அது ரெம்ப ஈஸி. 'எந்த பய்யண்டயாவது பேசுறத பார்த்தேன்' வெளாசி புடுவேன்னு சொல்லுறது ஈஸி. வெக்கம் மானம் சோத்துல உப்பு தான போட்டு சாப்ப்புடுறனு' பேசுறது ஈஸி. பொண்ணுக்கு கற்பு தான் பெருசுன்னு சொல்லுறது ஈஸி. பொண்ணுக்கு மட்டும் தான் கற்ப்பா-னு கேட்டாலோ - அந்த கற்பு போனா என்னனு கேட்டாலோ -அடி, உதை, நாட்டுல இருக்க நுகர்வோர் கோர்ட்டுல இருந்து சுப்புரீம் கோர்ட்டு  வரை கேசு ????
அப்பா: என்ன பேச்சுடா பேசுற..

இளைஞன்:
உருப்படியா எதையும் - யாரையும் காப்பாத்த முடியாத நாம: - கப்பாத்துறேன்னு ஒத்த காலுல நின்னு அடம் பிடிக்கிறது -அருவா எடுக்கிறது - எல்லாம் கலாச்சாரத்தை காப்பாத்த தானே!! அத இம்புட்டு கஷ்டப்பட்டு காப்பாத்துனதுக்கு   சாட்சியா  HIV நோயாளிகளோட எண்ணிக்கையும், பெண்கள் காவல் நிலையமும், குடும்ப கோர்ட்டும், ஸ்டவ் வெடிப்பும், நடமாடும் நகை கடைகளும், திருமண முறிவு ஆனவர்கள் - தனியாக மேட்ரிமோனியல் சைட் போட்டு துணை தேடும் அவலங்களும், மகளை கொளுத்தும் அப்பன்காரங்களும், அப்பனை ஏறெடுத்து பார்க்காத மகன்களும், தேனிலவு கொலைகளும் சாட்சியாக இருக்குன்னு சொல்லுறேன்.
அப்பா: உன்னைய படிக்க வச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும் ... இன்னும் வேணும் ....நல்லா நிப்பாட்டாம பேசுற... பாட புக்க தவற எல்லா எழவையும் படிக்கிற ..எல்லாம் அதனால வந்த வினைடா...

இளைஞன்: அப்பா நான் ஒரு பொண்ணை காதலிச்சா என்னப்பா பண்ணுவீங்க ?
அப்பா: டேய், என்ன அப்பன்ட்ட பேசுற பேச்சா.... எல்லாம் உங்க அம்மா கொடுக்குற செல்லம். அவ வரட்டும், வச்சுக்கிறேன்.  படிக்குற வயசுல காதல் கீதல்னு கெட்டு போகாத ... எல்லாம் வயசு கோளாறு சொல்லிபுட்டேன் ... எல்லாம் சேர கூடாத பய புல்லைகட்ட சேந்ததால வந்த வினை... இனிமே இத மாதிரி பேசினா - கை கால உடச்சு புடுவேன் ...

இளைஞன்: சரிங்கப்பா, இனிமே இதமாதிரி பேசமாட்டேன். கடைசியா ஒன்னே ஒன்னே சொல்லிக்கிறேன்.
அப்பா:என்ன ?

இளைஞன்:
மொதள்ள படிப்பு, அப்புறம், வேலை, அப்புறம் வீடு, அப்புறம் காரு, அப்புறமா காதல் -னு ஒன்னொன்னா வருசயா ஆர்டர் பண்ணறதுக்கு வாழ்க்கை ஒண்ணும் முனியாண்டி வில்லாஸ் பரோட்டா ஸ்டால் கிடையாதுப்பா!!

------------------------------------------------------------------------

இளைஞன் 1: ஏண்டா மாமு, ஒருவனுக்கு ஒருத்தின்னு பக்கம் பக்கமா கட்டுரை எழுதுரானுங்க. ஆனா அதே புக்குல இந்த நடிகர் இந்த நடிகை ஓட சுத்துராறு, அந்த நடிகர் அவாளோட சுத்துராறுனு எழுதுரனுங்க. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு அவரு இப்ப இவளோட சுத்துராறுனு எழுதுரனுங்க ....இந்த ஒருவனுக்கு ஒருத்தி - நம்மள மாதிரி இழிச்சவாயனுக்கு மட்டும் தானா ?
இளைஞன் 2: நீ சொல்லுற ஒருவனுக்கு ஒருத்தி பத்தி எனக்கு தெரியாது.  அந்த புக்குல எல்லாம் நடுப்பக்கம் படம் பாக்குரதோட  நிப்பாட்டிக்க. படம் பாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா என்ட்ட சொல்லு  - நல்லா புக்கா நான் வாங்கி அனுப்புறேன். சரி அத விடு.. ஆனா ஒருவனுக்கு ஒருத்தின்றது - ஒருவனுக்கு ஒரு சமயத்தில் ஒருத்தி - அதே மாதிரி ஒருத்திக்கு ஒரு சமயத்தில் ஒருத்தின்னு தான் உலகம் ஓடிட்டு இருக்கு. அதனால தான் உலகத்துல இருக்குற கிட்ட தட்ட அம்புட்டு நாடும் திருமண ரத்து - மறுமணம் எல்லாம் ஏத்துகிட்டு இருக்கு. நீ சொல்லுறது ஏதோ விஜய் பட டயலாக் மாதிரி இல்ல இருக்கு: காதல்ன்றது ஒரு தபா தான் வரும் - ரோஜாப்பூ தும்பைப்பூ மாதிரி. அதே மாதிரி  இல்ல இருக்கு நீ சொல்லுற ஒருத்தனுக்கு ஒருத்தி.  ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்க பொண்ண ஆசிட் காமிச்சு அவசர பட்டு கண்ணாலம் பண்ணினாலும் சரி, அருவா முனையில் அல்லது  மண்ணெண்ணெய் கேன் பயமுருத்தலில் கல்யாணம்  பண்ணி வைக்க பட்டாலும் சரி -  அவனோடவோ அல்லது அவளோடவோ  வாழ்ந்தே தீரனும்னு சொல்லுறது மாதிரி இல்ல இருக்கு .  சொல்ல போனா,  ஒருவனுக்கு ஒரு சமயத்தில் ஒருத்தின்னு சொல்லுறது கூட செயற்கையானது தான். நமக்கு அது தான் நல்லது - உன் குடும்பம் - உன் குழந்தைனா தான் உனக்கு பொறுப்பு வரும் ... அப்பா தான் நீ உன் துணையையும் உன் வாரிசையும் காப்பாத்துவைனு  ஏற்படுத்தப்பட்டது தான்.

இளைஞன் 1: அதனால ?
இளைஞன் 2: அதனால... சொரக்காயிக்கு உப்பு இல்லையாம்!!!  இதுக்கு மேல பேசினா - நான் இதுவரை எழுதுனத விட பெரிசா அனாநிகளோட பின்னூட்டம் இருக்கும். அவுங்கள கஷ்டப்படுத்த வேணாம்னு நிப்பாட்டுறேன்.

7 comments:

said...

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நல்ல விடையம் தான். ஆனால் ஒருத்திக்கு ஒருவன் தான் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கிறது.

இயற்க்கையின் படைப்பில் காதலும் காமமும் வேறு வேறுல்ல.

காதல் கலைந்து போகும்
காமம் நிலைத்திருக்கும்
காமம் நிலைத்திருக்க
வேறு காதல் வரும்
நீரும் ஆவியும் போல்
காதலும் காமமும்
ஒன்றுக்குள் ஒன்று.

said...

அவ்வ்வ்.......

said...

சூப்பர்ப் .....நல்ல எழுதிறீங்க.

>>மொதள்ள படிப்பு, அப்புறம், வேலை, அப்புறம் வீடு, அப்புறம் காரு, அப்புறமா காதல்

மொதள்ள காதல் படிப்பு, அப்புறம், படிப்பு, காதல் வேலை, வேலை, காதல், அப்புறம் வீடு, அப்புறம் காரு, அப்புறமா .......

நினைத்து பார்க்கவே சுகமாக இருக்கிறது.......

Anonymous said...

//இப்படி மக்களை எதுல இருந்தும் காப்பாத்த முடியாத நாம், 'கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஜாதியையும்' காப்பாத்த இம்புட்டு கஷ்ட படுரமே//

நெத்தியடி களப்பிரரே. விடுதலையாகி 60 வருஷமாச்சு, இன்னும் எல்லா மக்களுக்கும் உணவு, உறைவிடம் மற்றும் அடிப்படைக்கல்வியைக்கூட கொடுக்க முடியாத நிலைமையில இருக்கோம். சுதந்திரம் அடைஞ்சதுல இருந்து வந்த எல்லா கவர்மென்ட்டும் ஏழைகளுக்குக்காக பாடுபடறோம்னு சொல்லிக்கிட்டு இருக்கு. ஆனா இன்னும் நாட்டுல பாதிப்பேரு ஏழையாத்தான் இருக்கான்.

60 வருஷமா பாடுபட்டு இன்னும் ஏழ்மைய ஒழிக்க முடியலன்னாலும் கலாச்சாரம் பன்பாடுன்னு சொல்லிக்கிட்டு வக்கிரம் பிடித்த மனசுக்குள்ள பாக்கற அத்தனை பெண்களையும் துகிலுரிச்சுக்கிட்டு திரியற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சூடு சொரனை இருந்தா மொதல்ல மக்களுக்கு நிசமாவே நல்லது பன்னட்டும். அதுக்கப்புறம் கலாச்சாரத்த பாக்கலாம்.

said...

நண்பர்களின் வருகைக்கும், பின்நூட்டதிர்க்கும் மிக்க நன்றி.

//இயற்க்கையின் படைப்பில் காதலும் காமமும் வேறு வேறுல்ல.

காதல் கலைந்து போகும்
காமம் நிலைத்திருக்கும்
காமம் நிலைத்திருக்க
வேறு காதல் வரும்
நீரும் ஆவியும் போல்
காதலும் காமமும்
ஒன்றுக்குள் ஒன்று. //

அட்டகாசம். ரத்தின சுருக்கம் !! இந்த பாடலின் மூலம் சொன்னால் நன்றாக இருக்கும் ( மேலும் அதனை படிக்க !!)

மேலும் விரிவாக பின்னோட்டம் இட்ட அனானிக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி

said...

பாராட்டுக்கு நன்றி,
அந்தப் பாடலை (???) இயற்றியது யாம் தான் (வெக்க வெக்கமா வருதுங்க) அய்யா.

said...

சிபி அப்பான உடனே, நீங்க சிபின்ற இருவது வயசு பய்யனுக்கு அப்பா ( சத்யராஜ் மாதிரி ) அதனால உங்களால இப்படி எல்லாம் யோசிக்க முடியாதுன்னு தப்ப நினச்சுட்டேன் ... உங்க பாடல் நல்ல இருக்கு. புதிய சித்தர்கள் பாடல்கள் னு ஒரு பதிவு போடுங்க ....மீண்டும் தங்களது கருத்துக்களுக்கும் பின்நூட்டதிர்க்கும் நன்றி .