Saturday, May 17, 2008

இந்தியன் என்பதில் பெருமைப்படு ??

இந்தியன் என்பதில் பெருமை பட சொல்லி எத்தனை எத்தனை  மின் அஞ்சல்கள்... மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன.  ஒரு நாள் விட மாட்டேன்றானுங்க ....  சுதந்தர தினமாம், குடியரசு தினமாம்... இந்த நாட்ல 'குடி அரசு' க்கு அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்??

சபீர் பாட்டியா , வினோத் கோஸ்லா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சாதனைகளை தேசத்தின் சாதனைகளாக மாற்றி நமது அறிவை கேலி செய்யும் கேள்வி பதில்கள்;
செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராகெட் படங்களுடன் செய்தி;
'தாய் மண்ணை போல் ஒரு ஜீவன் இல்லை ...வந்தே மாதிரம்' என்று முழங்கும் லண்டனில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க ஐரோப்பிய பங்குதார்களுக்கு லாபம் ஈட்ட சோனி யால் வெளிஇடப்பட்ட பாடல்கள்;
மைக்ரோ சாப்ட்டில் பில் கேட்சை தவிர, நாசாவில் கேன்டீன் செப்ப் தவிர அனைவரும் இந்தியர் என்று புளுகும் மினஞ்சல்கள் - இப்படி நாளொரு வண்ணமும் தேசபக்தி கெஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இப்ப புதிதாக ( குறைந்தது எனக்கு மட்டுமாவது புதிதாக) ஒரு விடீயோ எனக்கு வந்தது. சாய்ந்து விழுந்து சாலையை மறைத்து கொண்டிருக்கும் மரத்தை, மழையில் நகர்த்த முயலும் சிறுவன்;

இதுமாதிரி 'மயக்க பிஸ்கட்' மினஞ்சல்களை பிறருக்கு அனுப்பி தேச பக்தியை கோலோச்சும்  நண்பர்களுக்கான ஒரு நினைவூட்டல் ...

முப்பது கோடி மக்கள் தினமும் ஒரு அமெரிக்க டாலர் க்கு (வறுமை கோடுங்க) குறைவான தொகையில் வாழ்ந்து சாவதும், ஒரு மனிதர் உலகின் முதல் பில்லியன் டாலர் வீட்டை கட்டுவதும், வருடம் தோறும் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதும், உலகிலேயே அதிக குழந்தைகள் இறப்பு , உலகிலேயே அதிக HIV யால் பதிக்க பட்டோர் ( இருபத்தி ஐந்து லட்சம்) இருப்பதும், இரண்டரை கோடி குழந்தை தொழிலார்கள் இருப்பதும், ஏழரை கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும், இன்னும் பல கோடி குழந்தைகள் மதிய உணவிற்காக பள்ளிக்கு வருவதும் இந்த நாட்டில் தான்.

முதல் உலக போரிலும், இரண்டாம் உலகபோரிலும் எதிரிகளாய்  இருந்த அத்தனை தேசங்களும் இன்று ஒற்றுமை யாய் இருக்கின்றன. அவைகள் வீட்டில் வளர்க்கப்படும் மீன்-க்கு தொட்டி குறைந்தது  என்ன அளவில் இருக்க  வேண்டும், வாரத்திற்கு குறைந்தது நாயை எத்தனை முறை  வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டு கொண்டு  இருக்கின்றன. ஆனால் பாலாய் போன இந்தியர்களின் தேச பக்தி இந்த வருடம் மட்டும் ராணுவத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சத்து ஐந்து ஆய்ரம் கோடி. வருடா வருடமும் இதே மாதிரி தான். இந்த அரசு மக்களுக்கு - மக்களின் நலனிற்கு செலவிடும் தொகையோ இதில் சொற்ப பங்கு.  பட்டினியால் கடனால் உலகமயமாக்கலால் சாகும் விவசாயி களின் கடன் ரத்தை பாண்ட் சைஸ் எண்பத்தி ஆறில் வெளியிடும் எல்லா பத்திரிக்கையும் இதை  வானிலை அறிவிப்பு அளவிற்கு கூட கண்டு கொள்வது இல்லை.  இப்படி டன் கணக்கில் தேசபக்தியால் நாட்டு  மக்களுக்கு அநீதி இளைக்கப்படுவதும் இந்த நாட்டில் தான்.


Patriotism is the last refuge of the scoundrel.”  அப்படின்னு சாமுவேல் ஜான்சன் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

23 comments:

Anonymous said...

களப்பிரர் சார் நிங்க சொல்வது 100க்கு 100 உண்மை.உங்கள் வாதத்துக்கு ஒரு சிறு சான்று.
********************************
தேசிய முறை சாரா தொழிலாளர் கமிஷன் இந்த மாதம் ஒரு அறிக்கையை அரசிடம்
சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தியாவில் முறை சாரா தொழிலாளர்கள் 45.7 கோடி பேர்
உள்ளனர் என்றும் இவர்கள் கட்டிடம் கட்டுதல், விவசாயகூலிகள், உள்கட்டமைப்பு
துறையில் பணிபுரிதல் மற்றும் ஒப்பந்த தொழில், மீன்பிடித்தல், நெசவு என்று
பல்வேறுபட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 39.4 கோடிபேர்(80%)
தினக்கூலியாக வெறும் ரூ.20 மட்டுமே(அரை டாலருக்கும் கீழ்) பெறுகின்றனர்.
தேசத்தின் வளர்ச்சி எல்லா தரப்பினரையும் சென்றடையவில்லை என்று தேசிய முறைசாரா
தொழிலாளர் கமிஷன் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அறிக்கை பற்றிய செய்திகள்
கிடைக்கும் இடங்கள்

****************************
http://economictimes.indiatimes.com/8_out_of_10_working_Indians_earn_...
http://www.hinduonnet.com/thehindu/holnus/002200708100324.htm

*********************************
புதிய பொருளாதார
கொள்கைகள் 1991 இல் அறிவிக்கப்பட்டது. தேசத்தில் 1990 ல் மாத சம்பளம்
ரூ.500கீழ் வருமானம் பெறுவோர் வறுமைக்கோடின் கீழ் வாழ்வதாக அரசு அன்று
அறிவித்தது. அது இன்றளவும் அதே அளவுதான் உள்ளது. அதனால் இன்று வெறும்
24%(தோராயமாக 24 கோடி பேர்) மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக அரசு
பெருமையுடன் சொல்லிவருகிறது. இதை தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால்
சரியான அளவுகோளாக இருக்கும். 1990 இல் ஒரு கிராம் தங்கம் ரூ.250 மட்டுமே. எனவே
அன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்கள் 2கிராம் தங்கம் வாங்க முடியும்.
அப்படியென்றால் இன்று இரண்டு கிராம் தங்கம் ரூ1650 க்கு விற்கப்படுகின்றது.
எனவே விலைவாசிப்புள்ளியுடன் ஒப்பிடும்போது இன்று ரூ1600 க்கு கீழ் சம்பளம்
பெறுவோர் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள்தானே? ஏன் இந்திய அரசு
இதை உயர்த்த மறுக்கின்றது? ஏழ்மையை ஒழித்துவிட்டோம் என்று பசப்பவா?

மேலே
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 40% பேர் மாத
ஊதியமாக வெறும் ரூ600(விடுமுறை சம்பளம் எதுவும் கிடையாது எனவே விடுமுறைநாட்களை
கழித்தால் இது இன்னும் குறையும்)க்கு கீழ் பெறுகின்றனர். அப்படியானால் அரசு
கூறிய 24% பேர் புள்ளிவிவரம் ஒரு ஏமாற்றுவேலை என்றுதானே பொருள். ஆக மாத ஊதியம்
1600 ரூபாயை வறுமைக்கோடு என்று அறிவித்தால் நாட்டில் ஏழ்மையானவர்கள் ஏறத்தாழ
60% என்கிற நிலையை எட்டும். அதே வேளையில் 10லட்சம் டாலர் சொத்து மதிப்பு கொண்ட
பணக்காரகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதையும் அந்த கமிஷன்
சுட்டிக்காட்டியுள்ளது. இருக்கின்றவனிடம் இருந்து எடுத்து இல்லாதவருக்கு
கொடுப்பது தருமம். ஆனால் இங்கே இல்லாதவனிடம் இருந்து பிடுங்கி இருப்பவனுக்கு
கொடுத்து அவனை செல்வச்செழிப்பில் மிதக்க வைக்கும் மாபெரும் கொடுமையை அரசு
செய்து வருகின்றது என்பதை இது காட்டுகிறது. ஆகக்கூடி இந்திய அரசு புதிய
பொருளாதார கொள்கையை ஏற்ற பின்னர் ஏழ்மை அதிகரித்துள்ளதுடன் ஏழை பணக்கார
இடைவெளியும் அதிகரித்துள்ளது. சோஷலிச பொருளாதார காலத்தில் இந்த இடைவெளி
தொழில்களின் தேசியமயமாதல் காரணமாக குறைந்து வந்துள்ளது. ஏழ்மையும், வறட்சியும்
1947 ஆம் ஆண்டு நிலவ்ரத்துடன் ஒப்பிடும்போது 1990 பாதியாக
குறைக்கப்பட்டிருந்தது. ஏழைகள் பலர் கல்வி காரணமாக முன்னேற்றம்
பெறத்தொடங்கினர். ஆனால் புதிய பொருளாதார கொள்கையில் ஏழைகள் புதியதாக
உருவாகியுள்ளனர். இதுதான் இந்திய தேசம் வளர்கிறது(ஏழ்மையில்) என்று
சொல்லப்படுகிறதோ?
*******************************
மேலும் அதிச்சியான தகவல்:-

திருமணத் திட்டம் என்ற பேரில் மங்கையர்களை குறைந்த தினக் கூலிக்கு ஆலைகளில் 3 வருடங்களுக்கு ஒப்பந்தக் கூலியாக நடத்தி பின் ரூபாய் 30,000 கொடுத்து வெளியேற்றிவிடுவதாகவும்,அதை தமிழக அரசு சட்டம் போட்டு கண்டித்துள்ளதகா பத்திரிக்கைகளில் தகவல் சொல்லப்படுகின்றதே? படித்தீர்களா?
புதிய பொருளாதாரக் கொள்கையின் கையில் பட்டு அல்லறும் ஏழை எளியோரை காக்க இன்னும் யார் வருவாரோ? எப்போ வருவாரோ?
பாரதத் தாய் கலங்கி நிற்பதாக கண்ணில் தெரிகிறதே!

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

பெரும்பான்மையோர் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே இப்பதிவை காண்கிறேன்.

நட்சத்திர வாழ்த்துக்கள்.

கந்தசாமி

said...

சவுக்கடி நண்பா!!

இந்த வாரம் நட்சத்திரம் வேறயா... பட்டைய கிளப்பு!!!

said...

Best wishes

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

said...

//இந்தியர்களின் தேச பக்தி இந்த வருடம் மட்டும் ராணுவத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சத்து ஐந்து ஆய்ரம் கோடி//

இதற்கான சூட்சுமக் கயிறு வாஷிங்டன்ல இருக்கு நண்பா! ஒருபுறம் பாகிஸ்தான் எனும் ஆபத்தை வளர்த்துவிட்டுக் கொண்டு மறுபுறம் இந்தியாவிற்கு ஆயுத விற்பனை செய்யும் சாம் மாமாவின் வியாபார நேக்கு. இதுபோல பல உதாரணங்கள் உண்டு. சொன்னா நம்மள தேசிய முன்னேற்றத்திற்கு தடைக் கல்லுன்னு கட்டம் கட்டிடுவாங்க இல்ல.

said...

அய்யய்யோ.. நிங்க எனக்கு இட்டிருந்த பின்னோட்டங்களைப் பார்த்து உங்களை தவறாக எடை போட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்! இவ்ளோ சீரியசா எழுதறீங்க! வெரி நைஸ்!

said...

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும், சிறப்பான விரிவாக சான்றுகளுடன் பின்னோட்டம் இட்ட அனானிக்கும் மிக்க நன்றி .

said...

//முதல் உலக போரிலும், இரண்டாம் உலகபோரிலும் எதிரிகளாய் இருந்த அத்தனை தேசங்களும் இன்று ஒற்றுமை யாய் இருக்கின்றன. அவைகள் வீட்டில் வளர்க்கப்படும் மீன்-க்கு தொட்டி குறைந்தது என்ன அளவில் இருக்க வேண்டும், வாரத்திற்கு குறைந்தது நாயை எத்தனை முறை வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டு கொண்டு இருக்கின்றன. //

இது நிஜமாகவே யோசித்துப் பார்க்கவேண்டிய விஷயம்தான்.

நல்ல கட்டுரை மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்...

சரவணன் said...

ஒரு சாதாரண நாடு சில மனிதர்களால் பெருமைபடும் போது உங்கள் போல வெளிநாட்டுக்கு வீழுந்து அடித்து ஓடிய ஆசாமிகளால் ஏற்று கொள்ள முடியவில்லையே

காரணம்
வெளிநாட்டில் அடிமையாக இருப்பது

வெளிநாட்டு வாழ்க்கையே சொர்கம் என்று நினைத்து அங்கு படும் அவலங்களை பார்த்து பின்னர் தான் தமிழர் தமிழ் இந்தியா என்ற எண்ணங்கள் வரும். இது எணக்கு புதிது இல்லை.. என் பல பயணங்களில் உங்களை போன்ற பல ஆசாமிகளை பார்த்து இருக்கிறேன்

நானும் பேசி பார்ப்பேன்.. சரிங்க நீங்க சொல்றது எல்லாம் சரிதான் வாங்க திரும்ப வந்து நம்ம மக்களுக்கு சேவை செய்யலாம் தானே என்று

உடனே எஸ்கேப்பு ..

அல்லது சால்சாஜ்ப்பு

சரி உங்களயே கேக்குறேன் நீங்க புறந்த நாட்டுக்கு என்ன செய்து இருக்கிங்க

சும்மா இணையத்துல சாதி சண்டை போடுறது விட்டு என்ன பெரிசா எழுதி கிழுச்சி இருக்கீங்க
சொல்லுங்க

நான் இங்கனயே பொறந்து வளர்ந்து இன்னிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு என் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்

நீங்க என்ன செஞ்சு கிழிதீங்க??

அதை முதல்ல சொல்லுங்க அப்புறம் தாய் நாட்டை பத்தி சொல்லாம்

தாய் நாட்டில் புழைக்க வழி தெரியாமல் ஓடி ஒளிந்த ஒரு கோழை பொல உங்களை நான் பார்க்கிறேன்.

இந்த பின்னோட்டதை வெளியிட மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்

பொய் உங்க தாழ்வு மனப்பான்மையை தீர்த்துக்க வழியை பாருங்க

என் பேரு
சரவண பாண்டியன்
mail id saravana.pan2006@gmail.com

said...

சரவணன் அவர்களே,

//ஒரு சாதாரண நாடு சில மனிதர்களால் பெருமைபடும் போது உங்கள் போல வெளிநாட்டுக்கு வீழுந்து அடித்து ஓடிய ஆசாமிகளால் ஏற்று கொள்ள முடியவில்லையே //

ஹாட் மெயில் லை வடிவமைச்ச சபீர் பாட்டியா பிறந்த நாட்டுல ( பிறந்த ன்றது ரெம்ப முக்கியம். அவுங்க எல்லாம் எந்த நட்டு குடி மக்கள்னு யாருக்கும் தெரியாது ) இருந்துனு பெருமைய சொல்லுங்க. நாங்க 'எங்க நாட்ல 100 கோடி பேருல பிச்சகாரனே கிடையாது, ஆத்துல எல்லாம் தண்ணி மட்டும் தான் ஓடும், எல்லா பேருக்கும் இலவசமாவே மருத்துவம் கிடைக்கும்' இப்படி சொல்லி பெருமை படணும்னு பாக்குறோம்.


//காரணம்
வெளிநாட்டில் அடிமையாக இருப்பது//

நாங்க அடிமைய இருக்குறது சரி. நீங்க யாருக்கு அடிமைன்னு மொதல்ல தெரிஞ்சுகொங்க ...பல்லு விளக்குற பெஸ்ட்டு ல இருந்து - குண்டு போடுற ரககட் வரைக்கும் இருக்குமதிஇல்லாட்டி வெளிநாட்டு கம்பனி ஓட உள்நாட்டு தயாரிப்பு .
வருசத்துக்கு முப்பது பில்லியன் டலோர்-க்கு அமெரிக்கா வுல இருந்து ஆயுத இருக்கு மதி.
பில் கிளின்டன் ( அவர் அதிபர இருந்தப்ப ), ஜார்ஜ் புஷ் வரப்ப அவருக்கும் அவரோட விமானத்துல வர எல்லோருக்கும் எப்படி பாதுகாப்பு சோதனை நடக்குது பாரு, அப்புறம் ஜஸ்வந்த் சிங் க்கு (அவர் பாதுகாப்பு அமைச்சர இருந்தப்ப ) அமெரிக்கா வுல எப்படி சோதனை பண்ணுங்கன்னு தெரிஞ்சுக்க.
ஒரு தடவ ரசியா மேல கொரியவோட பயணிகள் விமானம் ஒன்னு அனுமதி இல்லாம பறந்துச்சு . அனுமதி எல்லைன்ற ஒரே காரனுத்துக்காக ரசியா அத சுட்டு வீழ்த்தியது. அதே மாதிரி சவூதி பயணிகள் விமானம் ஒன்னு சென்னைல அனுமதிக்க படாத இடத்தின் மேலே பறந்தது. ஜம்முன்னு ராணுவ ஓடு தளத்துல இறக்க அனுமதிக்க பட்டது .

//வெளிநாட்டு வாழ்க்கையே சொர்கம் என்று நினைத்து அங்கு படும் அவலங்களை பார்த்து பின்னர் தான் தமிழர் தமிழ் இந்தியா என்ற எண்ணங்கள் வரும். இது எணக்கு புதிது இல்லை.. என் பல பயணங்களில் உங்களை போன்ற பல ஆசாமிகளை பார்த்து இருக்கிறேன்நானும் பேசி பார்ப்பேன். //

நீங்க சொல்லுரதுல கொஞ்சம் திருத்தம். வெளிநாட்டுக்கு வந்து அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை பார்த்து பொறாமை பட்டு - இதில் கோடியில் ஒரு பங்கு கூட நமது அரசாங்கத்தால் நமது மக்களுக்கு தரமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் - அதற்கான காரணங்களை நான் கருதுவதை எழுதுகிறேன். நானும் உங்கள மாதிரி கண்மூடி தனமாக நான் பிறந்த ஒரே காரணத்துக்காக 'என் தேசமே' என்று பேசுபவர்களை பார்த்து இருக்கிறேன்.

//
. சரிங்க நீங்க சொல்றது எல்லாம் சரிதான் வாங்க திரும்ப வந்து நம்ம மக்களுக்கு சேவை செய்யலாம் தானே என்று உடனே எஸ்கேப்பு ..அல்லது சால்சாஜ்ப்புசரி உங்களயே கேக்குறேன் நீங்க புறந்த நாட்டுக்கு என்ன செய்து இருக்கிங்கசும்மா இணையத்துல சாதி சண்டை போடுறது விட்டு என்ன பெரிசா எழுதி கிழுச்சி இருக்கீங்க
சொல்லுங்கநான் இங்கனயே பொறந்து வளர்ந்து இன்னிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு என் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்நீங்க என்ன செஞ்சு கிழிதீங்க??//

நீங்க கேக்குற கேள்வி எல்லாம் நல்லா இருக்குங்க. உங்களுக்கு நேரடியா பதில் சொல்லுறதுக்கு முன்னடி என்னோட இந்த பதிவோட நோக்கங்களை சொல்லுறேன்.

நாட்டுல அரசு னு ஒன்னு எத்துக்கு இருக்கு ? மக்கள்ட்ட இருந்து வரி போட்டு வருமானம் ஈட்டி அதன் மூலம் மக்கள் நல பணிகளை செய்வது. அதுதான் ஒரு அரசின் கடமை. அது தனக்கு முன் பல தலை யான பிரச்சனைகள் இருக்கும் பொழுது, அதனை எல்லாம் கவனிக்காமல் எந்த ஒரு சாமானியனின் வாழ்க்கை-க்கும் உதவாத செயல்களை - தேவை எ இல்லாத செயல்களுக்கு முக்கியத்தவம் கொடுக்கிறது. இதற்க்கு தேசபக்தி போர்வை போர்த்த படுகிறது. அதை தான் இங்கு சொல்ல முற்பட்டுள்ளேன்.
நட்டுக்கக்காக நேரடியாக உழைப்பவர்கள் மட்டும் அன்றி மக்களுக்காக சிந்திக்கும் யாவரும் இதை பற்றி பேச உரிமை உள்ளவர்கள்.

//தாய் நாட்டில் புழைக்க வழி தெரியாமல் ஓடி ஒளிந்த ஒரு கோழை பொல உங்களை நான் பார்க்கிறேன்.//

உலகம் தெரியாத அப்பாவியாய் நான் உங்களை பார்க்கிறேன்

//இந்த பின்னோட்டதை வெளியிட மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்//

:)

//பொய் உங்க தாழ்வு மனப்பான்மையை தீர்த்துக்க வழியை பாருங்க//

தங்களது அறிவுரைக்கு நன்றி

//என் பேரு
சரவண பாண்டியன்
mail id saravana.pan2006@gmail.com //

தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

said...

வாழ்த்துக்கள் நண்பரே,

அதென்ன களப்பிரர்? ஏதேனும் குறிப்பான அரசியல் பின்னணி?

எனக்கும் களப்பிரர்களை பிடிக்கும். :-)

தங்களது அறிமுகத்தை படித்தேன். தொடர்ந்து அந்த அம்சங்களில் பொருள் பொதிந்த கட்டுரைகளை எழுதுங்கள்...

அசுரன்

said...

வாழ்த்துக்கள் நண்பரே,

அதென்ன களப்பிரர்? ஏதேனும் குறிப்பான அரசியல் பின்னணி?

எனக்கும் களப்பிரர்களை பிடிக்கும். :-)

தங்களது அறிமுகத்தை படித்தேன். தொடர்ந்து அந்த அம்சங்களில் பொருள் பொதிந்த கட்டுரைகளை எழுதுங்கள்...

அசுரன்

//
கட்டாயமாக தலைவரே... தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . சொல்லப்போனால் எனக்கு எழுத தூண்டியதே உங்களை போன்றவர்கள் தான் ....

களப்பிரர் இந்து மதத்திற்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் (எனக்கு எல்லா மதமும் ஒரே மயிருதான் !) செயல்பட்டதால் தொன்றுதொட்டு வந்த பல சமயக் சடங்குகள் பதிக்கப்பட்டான என்று எங்கோ படித்த நினைவு


...//

said...

அடடே...விண்மீன் பதிவரா...!!

வாழ்த்துக்கள் களபிரர்...

( மருதை தானா...நல்லது..)

பட்டையயைக் கிளப்புங்க..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

எவனுக்காச்சும், ஹிந்திய இரத்தமோ, ஆரிய இரத்தமோ இருந்தால் தான் பெருமைப்படச் சொல்லுவாங்க. (கலாம் விதிவிலக்கு)

எங்கே, இந்திய சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்படுகிறார்ர்கள் (ஈழம்), அமுக்கப்படுகிறார்கள் (நம் நாட்டுக்குள்ளேயே,இலங்கையில் ,மலேசியாவில்) என்று வருத்தப்படச் சொல்லுங்க. ஒரு பய வர மாட்டான்.

கணிணி முன் அமர்ந்து பீல் குட் மின்னஞ்சல்கள் தயார் செய்வது ஒரு சிலரின் பொழுது போக்கு. அந்த பேக்குகளை பின் தள்ளிவிட்டு அடுத்த வேலைப் பார்ப்பது தான் என் வழக்கம்.

said...

//இந்தியன் என்பதில் பெருமை பட சொல்லி எத்தனை எத்தனை மின் அஞ்சல்கள்... மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன. ஒரு நாள் விட மாட்டேன்றானுங்க .... சுதந்தர தினமாம், குடியரசு தினமாம்... //

களப்பிரர் எனக்கு தெரிந்து இது எல்லாம் தேச பற்றி என்பதால் வரவில்லை, நமக்கு வருகிற மின்னஞ்சலை யாருக்காவது அனுப்பனுமேன்னு போகிற மின்னஞ்சல்கள் தான் (ஒரு சில உண்மையான பற்று இருக்கலாம்). நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 2 ருபாய் !!! வசூலிக்க போறாங்கன்னு சொன்ன போதும் அப்புறம் ஒரு பய, என்னையும் சேர்த்து :-) அனுப்ப மாட்டான்.

said...

நண்பர்களின் அனைவர்ளின் வருகைக்கும் பின்நூட்டதிர்க்கும் நன்றி

// இதற்கான சூட்சுமக் கயிறு வாஷிங்டன்ல இருக்கு நண்பா! ஒருபுறம் பாகிஸ்தான் எனும் ஆபத்தை வளர்த்துவிட்டுக் கொண்டு மறுபுறம் இந்தியாவிற்கு ஆயுத விற்பனை செய்யும் சாம் மாமாவின் வியாபார நேக்கு. இதுபோல பல உதாரணங்கள் உண்டு. சொன்னா நம்மள தேசிய முன்னேற்றத்திற்கு தடைக் கல்லுன்னு கட்டம் கட்டிடுவாங்க இல்ல. //

உரைஊரரே, தங்களுது பின்னூட்டத்தை மறந்து விட்டேன். பாகிஸ்தான் மட்டும் அல்ல. அமெரிக்கா பாகிஸ்தானிற்கும் ஆயுதம் விற்கும், இந்தியாவிற்கும் ஆயுதம் விற்கும். சவூதி அரேபியாவிற்கு - இஸ்ரேலிற்கு. சிறி லங்கவிர்க்கு. இப்படி எல்லா இடத்திலும் அவர்களுக்கு எப்பொழுதும் முடிவுக்கு வராத பிரச்சனைகள் வேண்டும். அதில்தான் அவர்களது நாட்டின் முன்னேற்றமே அடங்கி இருக்கிறது.

பரிசல் காரரே, நாம அப்பைக்கு அப்பா கமெடியும் எழுதுவோம். ஆனா அது அரசியல் - சமூக பிரச்சனைகள் குறித்த காமடியாக இருக்க முயற்சி செய்வோம் .

//எவனுக்காச்சும், ஹிந்திய இரத்தமோ, ஆரிய இரத்தமோ இருந்தால் தான் பெருமைப்படச் சொல்லுவாங்க. (கலாம் விதிவிலக்கு)

எங்கே, இந்திய சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்படுகிறார்ர்கள் (ஈழம்), அமுக்கப்படுகிறார்கள் (நம் நாட்டுக்குள்ளேயே,இலங்கையில் ,மலேசியாவில்) என்று வருத்தப்படச் சொல்லுங்க. ஒரு பய வர மாட்டான்.//

தலை, கலாம் விதி விலக்கு என்பதில் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தயவு செய்து விளக்கவும் . :)
கலாம் நெறையா சின்ன பசங்களுக்கு (வயச சொல்லல) ஒரு தேச பக்தி சின்னம். ரொக்கட் விட்டு இந்திய மக்களை சட்டை காலர தொக்கி விட செய்தவர். தனது வாழ்க்கையே ஆராய்ச்சிக்காக செலவிட்டவர். இந்த மாதிரியான பின்னணி யில் அவர் மிகவும் மதிக்க பட்டார். இவரை குடியரசு தலைவர் ஆக்கினால், தங்களுது இந்துத்துவ முகமூடியை மறைப்பது எளிது என்ற முக்கிய கரனுத்திர்க்காக பா ஜா கா இவரை குடியரசு தலைவராக முன் மொழிந்தது. எனவே அவரின் ஹிந்திய - ஆரிய ரத்தமின்மை சகித்து கொள்ள பட்டிருக்கலாம். ( நினைவூட்டல் : தேவ கவுடா ஏன் தூக்கி எரிய பட்டார். ஐ கே குஜ்ரால் ஏன் பிரதமர் ஆக்கப்பட்டார் - அதற்கு எந்த ஒத்துக்கொள்ள கூடிய விளக்கம் உள்ளதா - முன்னவருக்கு ஹிந்திய ரத்தம் இல்லை என்பதை தவிர. !!! இருவருமே ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். ஒரே கட்சியால் ஆதரவு அளித்து பதவியில் அமர்த்தப் பட்டவர்கள் !!)

இவ்வளவு நற்பண்புகளை கொண்ட அவர், பேசிய சில பேச்சுகளும் செய்கைகளும் அவரன் மீது இருந்த எண்ணங்களை மற்ற செய்து விட்டன. டெல்லியில் பள்ளி ஒன்றில் குடியரசு தலைவராக இருந்தபோது பேசியது (எனது வார்த்தைகளில் ) " இந்த பள்ளி ஆசிரியர்கள் தங்களுது மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறு செய்தி அனுப்புவதாக (SMS) அனுப்புவதாக கேள்விபட்டேன். மகிழ்ச்சி. இதே போல் ஒவ்வொரு பள்ளியும் செய்ய வேண்டும் " இதுக்கு ஒரு தனி பதிவே போடலாம் ...

//எங்கே, இந்திய சகோதரர்கள் பலர் படுகொலை செய்யப்படுகிறார்ர்கள் (ஈழம்), //

மன்னிக்கவும். மீனவனாக இருந்தாலும், சாமணினாக இருந்தாலும் கொல்லப்படுவது தமிழனே. குஜராத் மீனவன் பாகிஸ்தான் ராணுவத்தால் சுடபட்டல் "இந்திய மீனவர் படு கொலை." தமிழக மீனவன் இலங்கை படையினரால் கொல்லப்பட்டால் "தமிழக மீனவர் சாவு " என்று தான் டெல்லி செய்தி தாள் கூட சொல்லும். ( ஒருவகையில் தமிழனை இந்தியனாக அடையாள படுததற்கு நன்றி சொல்லியே ஆகா வேண்டும் ).

said...

களப்பிரர்,

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்! அசத்துங்கள், இந்த வாரத்தில் நீங்கள் நிறைய கொடுக்க வேண்டும் முடிந்தளவிற்கு.

சர'வெண்ணெய் என்னமோ இப்படியெல்லாம் தனது சட்டிக்குள்ள(பாட்) இருந்து எடுத்து விட்டிருக்கார்..."சும்மா இணையத்துல சாதி சண்டை போடுறது விட்டு என்ன பெரிசா எழுதி கிழுச்சி இருக்கீங்க
சொல்லுங்க

நான் இங்கனயே பொறந்து வளர்ந்து இன்னிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு என் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்

நீங்க என்ன செஞ்சு கிழிதீங்க??...""


இந்தாட்கள் எல்லாம் என்னமோ பக்கத்திலயே இருந்து மேலே எழும்புற ராக்கெட்டின் திரிக்கு நெருப்பு பத்தவத்த கணக்கால்லே வந்து சொல்லி அரிப்பை தீர்த்துக்கிறாங்க... இதன் அடிமட்டத்தில தோண்டிப் பார்த்தா நீ என்னமோ தப்பிச்சி பொயிட்டேன்னு பேசுறேங்கிற மாதிரி இருக்கு :-)).

சரி நீங்க உழைச்சு சம்பாரிக்கிற பணத்தையெல்லாம் எங்கே அனுப்புறீங்க, அத நம்ம சரவணன் சார்கிட்ட சொல்லிடுங்க முதல்ல ;).

Ask Mr. Saravanan to read this piece too..

அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!

said...

நண்பரே..

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள். மிகவும் தாமதாமாகத்தான் வந்தேன். உங்கள் பெயரே உங்களை அடையாளம் காட்டுகிறது. இருண்ட காலம் என்று புலம்பித் திரியும் தமிழ் ஆதிக்க வராற்றுக்கு எதிரான ஒரு பெயரைக் கொண்டுள்ளீர்கள். உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தவிட்டு பின்னொட்டத்துடன் வருகிறேன்.

நன்றி.
அன்புடன்
ஜமாலன்.

SANGU said...

எங்க நாட்ட பத்தி தப்பா பேசுன உன்னைய கீசிடலாம்னு ....ஐடியா பண்ணி ஒரு கோட்டர் அடிக்க்கலாம்ன்னு போனேன் அண்ணாத்தே ....அங்கதான் நீ சொன்னது எம்புட்டு கரெக்ட் அப்டின்னு தெரிஞ்சது. இந்த நாட்ல பட்ஜெட் போட்ரவனுங்களுக்கு எங்க deficit விழுந்தாலும் கோட்டர்ல கைய வச்சுரானுங்க. பணக்கரானுங்க எம்புட்டு வேணும்னாலும் செலவழிப்பனுங்க ஆனா என்ன போல ஏழை பாலைங்க கள்ள சாராயம் குடிச்சு சாவ்ரானுங்க. ....

said...

தெகா, சங்கு மற்றும் ஜமாலன் அவர்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பின்னூட்டதிர்க்கும் நன்றி.

//உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படித்தவிட்டு பின்னொட்டத்துடன் வருகிறேன். //

தலைவா, நான் எழுதிய அஞ்சு பதிவை படிக்க பன்னண்டே முக்கா நிமிடம் போதும்னு தலைவா !!! ஹி ஹி ..!! நேரம் இருக்கும் பொது படிக்கவும் தங்களது கருத்தை அறிய ஆவல்.

//பணக்கரானுங்க எம்புட்டு வேணும்னாலும் செலவழிப்பனுங்க //

ஏம்ப்பா... பணக்காரனா இருந்தாலும் அவனும் இந்தியன் தானப்பா!! பெருமைய எங்க பணக்கார நண்பர்கள் பார்க் ஹோட்டல் ளையும், கிழக்கு கடற்கரை யிலும் அடிப்பாங்க னு சந்தோசமா இல்ல நீ எழுதனும் ..

said...

தங்களின் புதிய வாசகனாகி விட்டேன். விண்மீன் (நன்றி டிபிசிடி) ஆனதற்கு வாழ்த்துகள்

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)