Friday, May 23, 2008

துக்ளக் இதழ் படிப்பவர்கள் எனது வேண்டுகோளை கொண்டு போய் செர்ப்பார்களா?

 

இன்று டோண்டு ஐயாவின் ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அவர் தினகரன் மூலம் தெரிந்து கொண்ட பாடத்தை பற்றி பேசி இருந்தார். மிக சரியான ஒன்று. அதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. விமானத்தில் பயணிக்கும் போது ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் முகமூடி அணியும் போது கூட முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின் தான் உங்களது குழந்தைக்கு கூட உதவவேண்டும் என்று சொல்லுவார்கள். நிற்க. இந்த பதிவு அவரது கருத்தை பற்றி இல்லை. அவர் எடுத்து கொடுத்திருந்த துக்ளக்கின் செய்திகளை பற்றி. 

ஒரு மிக மோசமான வன்முறை நிகழ்வு நடந்து விட்டது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக பொது மக்களை பழி வாங்கிய வன்முறை நிகழ்வு. மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு சிலரின் உயிர் ரவுடிகளால் அநியாயமாக பறிக்கபட்டது. கொடூரமான செய்தி. மிருகத்தனமான வெறி செயல்.  நாம் இன்னும் நாகரீகத்தில்  காட்டு  மிராண்டிகள் என்று எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை தெரிவித்த தருணம்.

காந்தி சுட்டு கொள்ள பட்ட போதும்,  இந்திரா காந்தி காந்தி சுட்டு கொள்ள பட்டபோதும், விவசாய கல்லூரி மாணவிகள் கொளுத்தப்பட்ட போதும் , மாஞ்சோலை தொழிலாளர்கள் கொள்ள பட்ட  போதும், இதே போல் நூற்று கணக்கனமுறை பல்வேறு நேரங்களில்  பல அப்பாவி மக்கள் குண்டர்களாலும், காவல் துறை துப்பாக்கி சூடு - அடக்குமுறை களாலும் உயிர் இழந்துள்ளனர். இவைகளில் இருந்து எந்த அடிப்படையிலும் தினகரன் உயிர் பழி வேறுபட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பலியாகும் கூட்டம் மட்டுமே மாறும். பலனடையும் கூட்டம் ஒன்றே.

இப்படி பட்ட சம்பவத்தை - அது நடந்து ஒரு வருடம் ஆனதை ஒட்டி வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டதாக ஒரு இடுகை. சமூக பொறுப்பான இதழ் - அதன் நினைவு தினத்தை ஒட்டி எத்தனை பற்றி எல்லாம் பேசி இருக்கலாம் ??

இத்தகைய படுகொலைகளுக்கு எல்லாம்  அடிப்படை  காரணமாகிய   - அரசியல் ஆதாயம். பதிவி வெறி. 'வெள்ள நிவாரண சீலை பெறுதல்' போன்ற கொடூரங்களில் மக்களின் ஏழ்மை. தனது பிறந்த நாளை முன்னிட்டு சீலையை தூக்கி எரிவதில் இருக்கும் திமிர் மற்றும் சக மனிதனை கேவலபடுத்தும் எண்ணம் ,  ஐந்து ரூபாய்க்காகவும் பிரியாணி பொட்டலதிர்க்ககவும் கூடும் - சோடா புட்டி எடுத்து எரியும் வேலை இல்லாத, அறிவு இல்லாத மூடர்கள் கூட்டம். இவைகளை பற்றியும் அவைகளை   களைவது பற்றியும் பேசி இருக்கலாம்.

அதனால் பாதிக்க பட்ட குடும்பங்கள் - அதன் பாதிப்பில் இருந்து எவ்வளவு தூரம் மீண்டுள்ளன, நிவாரணம் கிடைத்ததா, அந்த கொடிய  செயலை செய்தவர்களை காவல் துறை கண்டுபித்ததா, விசாரணை நிலை என்ன ? இப்படியான ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கலாம்.

அல்லது, இந்த நாளை 'அரசியல் வன்முறையில் இருந்து விடிவு' நாளாக முன்மொழிந்து, எல்லா அரசியல் வாதிகளையும் 'இனி எந்த ஒரு காரணத்திற்காகவும் வன்முறையில் ஈடுபட மாட்டோம்' என்று தங்களு தொண்டர்களையும் தலைவர்களையும் ஊர்வலமாக போக சொல்லுமாறு கேட்டு கொண்டிருக்கலாம்.

இப்படி ஏதேனும் ஒன்றை செய்யும் இதழாக நமது துக்ளக் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் !!! ஆனால் அவர்களுக்கு தெரிந்ததோ தினகரன் என்னும் வியாபார நிறுவனம் வெளி இடா நினைவு அஞ்சலி.

எந்த வார இதழில் அரசியல் வாதிகள் தங்களது படமோ அல்லது கருத்து படமோ  வந்தால் தங்களின் அரசியல் வாழ்க்கையின் பிறவி பயனை அடைந்து விட்டதாக  கருதுவார்களோ, எந்த வார இதழ்  பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள்  எழுதியவற்றிக்கு பின் இருக்கும் ஒரே அரசியல் பைபிலாக கருதபடுகிறதோ,
எந்த வார இதழ் நேற்று, இன்று, நாளை என்று எப்பொழுதும் ஐநா சபை முதல் வார்டு மெம்பர் வரை உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக தெரிகிறதோ, அந்த வார இதழாகிய துக்ளகிற்கு  இந்த  சாமானியனின் இந்த சின்ன எதிர்பார்ப்பை வேண்டுகோளை  கொண்டு போய் சேர்ப்பீர்களா, நண்பர்களே ?


பின் குறிப்பு: தலைப்பில் 'படிப்பவர்கள்' என்று பன்மையில் இருப்பது சொல் குற்றமா பொருட் குற்றமா என்று ஆராய வேண்டாம்.

21 comments:

Anonymous said...

good one

said...

இதற்கெல்லாம் மெனக்கெடவே வேண்டாம். நேராக நீங்களே துக்ளக்குக்கு கடிதமாகவோ கேள்வி பதில்களில் வருமாறோ எழுதி அனுப்பலாம்.

ஒரு வாரப்பத்திரிகை சந்திக்கும் லே அவுட் பிரச்சினைகள் எதுவும் இல்லாத தமிழ் வலைப்பதிவர்கள் எவ்வளவு பேர் இந்த விஷயத்தை பற்றி எழுதினார்கள் என்பதை இவ்வார நட்சத்திரம் தொகுத்து ஒரு பதிவாக வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

have you seen muthu's "cho enna sokka thangama". erkanave chovin davusarai palamuRai kalattiyachu. ivaraiyellam loosula vudunga

said...

//
ஆனால் அவர்களுக்கு தெரிந்ததோ தினகரன் என்னும் வியாபார நிறுவனம் வெளி இடா நினைவு அஞ்சலி.
//

துக்ளக் இலவசமாக கிடைப்பது பற்றி யாரும் எனக்கு சொல்லவே இல்லையே :-(

அதுவும் ஒரு வியாபார நிறுவனம் தானே அதிலிருந்து மேட்டர் எதிர் பார்க்கலாமா???

said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

அந்த இருவரின்(சோ, டோண்டு) நீலிக்கண்ணீருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள். நன்றி!

இதுபோன்ற வலைப்பதிவுகள் படித்து தான் துக்ளக் என்று ஒரு பத்திரிகை வருவதையே தெரிந்து கொண்டேன்.

said...

வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் - பின்னோட்டமிட்டவர்களுக்கும் நன்றி .

//துக்ளக் இலவசமாக கிடைப்பது பற்றி யாரும் எனக்கு சொல்லவே இல்லையே :-(

அதுவும் ஒரு வியாபார நிறுவனம் தானே அதிலிருந்து மேட்டர் எதிர் பார்க்கலாமா???//

கருப்பா, கரைக்டான கேள்விப்பா. அண்ணா "நாட்டில் ஏன் இந்த உலகில் உள்ள எல்லா சிறந்த அரசியல் வாதிகளையும் அடையாளபடுத்தியது நாங்கள் தான்" என்று தினகரனோ அல்லது அதன் நண்பர்களோ சொன்னார்களா ? இல்ல சினிமா நடிகனுக்கு மேக்கப் மேனா... சாரி சாரி ... வருங்கால முதலமைச்சர்களுக்கும் நேற்றைய முதலமைச்சர்களுக்கும் அரசியல் ஆலோசகராக இருப்பவரை தினகரன் ஆசிரியராக கொண்டு இருக்கிறதா ???
ஆனா, இம்புட்டு சிறப்பையும் பெற்று இருக்கிறதாக சொல்லப்படும் துக்க்லகிடம் இருந்து தானே நம்ம கொஞ்சம் மேட்டர எதிர்பார்க்குறோம் ....

புரிஞ்சதா ??

said...

Mr. Kalapirar நட்சத்திர வாழ்த்துக்கள்

and our Dondu now days wirte like this useless artice because of his age and also more hot summer so he do like this so any one and anger him.

I know Mr Dondu write many article in the Thukallak and he earn money from comedy and funny man cho Ramasamy.

any way mr Kalapirar wirte well and we except more new things from you.
your
siva
puduvai..

said...

நண்பர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி, வாழ்த்திய சிவா, great, மற்றும் அன்னனிக்கு உள்ளங்களுக்கு நன்றி.

// இதற்கெல்லாம் மெனக்கெடவே வேண்டாம். நேராக நீங்களே துக்ளக்குக்கு கடிதமாகவோ கேள்வி பதில்களில் வருமாறோ எழுதி அனுப்பலாம். //

துக்ளக்கின் மறு உருவமாக தெரியும் உங்கள் மூலம் எடுத்து செல்வதே எமது விருப்பம் !

//ஒரு வாரப்பத்திரிகை சந்திக்கும் லே அவுட் பிரச்சினைகள் எதுவும் இல்லாத தமிழ் வலைப்பதிவர்கள் எவ்வளவு பேர் இந்த விஷயத்தை பற்றி எழுதினார்கள் என்பதை இவ்வார நட்சத்திரம் தொகுத்து ஒரு பதிவாக வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன். //

எத்தனை பேரு எழுதினார்கள் என்பதை விட, என்ன எழுதினார்கள் என்று பார்ப்பதே எனக்கு பிடித்த வேலை.
-------------------------------------

//have you seen muthu's "cho enna sokka thangama". erkanave chovin davusarai palamuRai kalattiyachu. ivaraiyellam loosula வுடுங்க//

இதுவரை படிக்க வில்லை. சுட்டி கொடுக்கவும். தேடி படிக்கிறேன் விரைவில் .

சுப்புரமணி சாமி போல சோ னு என் நண்பர் மன்வெட்டியான் ஒரு பதிவு போட்டாரு

http://manvettiyan.blogspot.com/2008/03/blog-post_07.html

முடிந்தால் படிக்கவும்
-------------------------------------------

said...

//துக்ளக்கின் மறு உருவமாக தெரியும் உங்கள் மூலம் எடுத்து செல்வதே எமது விருப்பம்!//

நீங்கள் ஆயிரம் விருப்பப்படலாம். அதை நிறைவேற்ற வேறு யாராவது ஏமாந்தவன் இருந்தவன் பாருங்கள். எனக்கு எப்போதோ காது குத்தியாகி விட்டது.

எனது கேள்வி பதில் பதிவை நக்கல் செய்து போட்ட உங்கள் பதிவின் சொற்களிலிருந்தே உங்கள் பார்ப்பன வெறுப்பை பார்த்து விட்டேன். ஆளை விடுங்கள். பார்ப்பனன் என்பதாலேயே ஒருவரை வெறுப்பது என்றுள்ள உங்களை நான் மதிப்பதாக இல்லை.

டோண்டு ராகவன்

said...

டோண்டு ஐயாவிற்கு,

நாங்கள் பார்ப்பனீயத்தை தான் எதிர்க்கிரோமே ஒழிய பார்ப்பனரை அல்ல; ஆனால் பார்பான சிந்தனை இலாத பார்ப்பனர்கள் இந்த உலகில் இல்லாததால் இரண்டும் ஒன்றாக தெரிகிறது. இப்படி எல்லோரும் பல முறை சொல்லி ஆகிவிட்டது.

நான் உங்களது கருத்துகளை -என்னில் இருந்து மாறுபட்ட கருத்துகளை மட்டும் தான் நக்கல் செய்து இருப்பேனே ஒழிய, உங்களை அல்ல.

உதாரணமாக உங்களது 'தினகரன் மூலம் கற்று கொண்ட பாடம்' என்னும் வகையில் நீங்கள் எழுதிய 'பாடத்துடன்' முழுவதுமாக ஒத்து போகிறேன். அதை தெளிவாக காண்பிக்கவும் செய்தேன் .
//இன்று டோண்டு ஐயாவின் ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அவர் தினகரன் மூலம் தெரிந்து கொண்ட பாடத்தை பற்றி பேசி இருந்தார். மிக சரியான ஒன்று. அதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. விமானத்தில் பயணிக்கும் போது ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் முகமூடி அணியும் போது கூட முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின் தான் உங்களது குழந்தைக்கு கூட உதவவேண்டும் என்று சொல்லுவார்கள். நிற்க.//

//அவரால் நல்ல அரசியல்வாதி என அடையாளம் காண்பிக்கப்பட்டவர்கள் அவ்வளவு அதிகமாக இல்லை. என் நினைவில் அவர் அவ்வாறு முதலில் அடையாளம் காட்டியது சுதந்திரா கட்சியில் இருந்த எம்.எல்.ஏ. டாக்டர் ஹண்டேயைத்தான். ஒரு கார்ட்டூனில் தமிழக சட்டசபையையே அவராக உருவகம் காட்டியவர் இவர். ஆனால் அவர் ராஜாஜி அவர்களின் மறைவுக்கு பிறகு அண்ணா திமுகவில் சேர்ந்து விசிலடிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு செயல்பட்டு.. விடுங்கள்.

பிறகு அடையாளம் காட்டியது பா. ராமச்சந்திரன் அவர்களை. காமராஜ் அவர்களின் அணுக்கத் தொண்டராக இருந்து தமிழகத்தில் காமராஜ் காங்கிரசை அவர் காலத்துக்கு பிறகும் இந்திரா அவர்கள் வேட்டையிலிருந்து காப்பாற்றினார். அவரை அட்டைப் படத்திலேயே போட்டு கௌரவித்தார் சோ. ஆனால் அந்தோ, வெகு சீக்கிரம் அவர் கட்சி மாறி, சத்தியமூர்த்தி பவனை இந்திரா காங்கிரசுக்கு தாரை வார்த்து கொடுத்தார். பரிசாக ஒரு மாநிலத்தின் கவர்னர் பதவியை பெற்றார்.

அதிமுகவில் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக தன் சுயமரியாதையைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதற்காக சோவால் அட்டைப்பட கார்ட்டூனில் புகழப்பட்டார். ஆனால் அதே எஸ்.டி.எஸ். ஜெயலலிதாவின் தயவுக்காக அவர் வந்த பிரசார வேனின் ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்.//

இதிலிருந்து தெரிய வருவது என்பது என்ன :

சோ என்பவரோ அல்லது துக்ளக் என்னும் பத்திரிக்கையோ 'தமிழக அரசியல்' என்னும் நிறுவனம் வைத்து - பல்வேறு சோதனைகளை எல்லா அரசியல் வாதிகளின் மீதும் நடத்தி - அவை எல்லாவற்றிலும் நன்றாக தெரிய ஒரு சிலரை அடையாளப்படுத்தின. அவர்களை பெருமை படுத்தும் விதமாக அவர்களின் படத்தை அட்டை படத்திலோ கருத்து படத்திலோ போட்டன. அந்தோ பரிதாபம், சில காரங்களால் அவர்களால் தங்களது திறமைகளை தக்கவைத்து கொள்ள முடிய வில்லை.

அதாவது துக்ளக் என்பது அரசியல் வாதிகளின் தரத்தை காட்டும் உரைகல். நன்றாக படிக்கும் மாணவனை ஆசிரியர் கண்டறிந்து - மேலும் சிறப்பாக அவனுக்கு விளக்கம் அளித்து - அவனை மாவட்டத்தில் முதலாவதாக தேற செய்வது போன்றது. அப்படிப்பட்ட

அதை எல்லாம் விடுங்கள்... தங்களது கேள்வி பதிலில் தற்பொழுது என்ன சொல்லுகிறீர்கள் என்று பார்ப்போம்.

// 2. பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?
பதில்: ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது. இப்போது மிகக் குழப்பமான நிலை நிலவுகிறது. நாட்டை விட்டு வெளியேறிய ஈழமக்களது துயரம் மகத்தானது. ஆனால் பிரபாகரன் போன்றவர்களிடம்தான் அவர்களுக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு சரியானதாகப் படவில்லை.//

பிரபாகரனின் அந்த நிலைக்கு பின் இருக்கும் எண்ணற்ற எவரும் மறுக்க முடியாத காரணகளை ( ஈழ பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை அதிபருடன் ராஜீவ் அவர்கள் - 'ஈழ தலைவர்கள் எவரும் இல்லாமல் - அவர்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, அதன் முடிவை ஏற்க சொல்லி மிரட்டியது, மிரட்டலில் பயப்படாத காரணத்தலால் யாரின் சார்பாக இதுவரை நடந்து வந்ததோ - அவர்களின் மீதே படை ஏவியது - தமிழர்களை கொன்று குவித்தது.. இப்படி இருக்கும் அவ்வளவு வரலாறையும் மறைக்கும் விதமாக எழுதப்படும் ஒரு விச பருக்கை தான் "ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது. "

இப்படி எழுதுபவன வற்றை படிக்க நேரும் பொழுது சமயம் கிடைத்தால் அதை விமர்சிக்க - நக்கலக்க முயலுவது தான் இயல்பு .

களப்பிரர் கெளப்புகிறார் said...

களப்பிரரே,

கெளப்புறீரே. நச்னு பதில் சொல்லி இருக்கீரு. ஆனா அவாரு சொன்னத கவனிக்கலையா?

//ஒரு வாரப்பத்திரிகை சந்திக்கும் லே அவுட் பிரச்சினைகள் எதுவும் இல்லாத தமிழ் வலைப்பதிவர்கள் எவ்வளவு பேர் இந்த விஷயத்தை பற்றி எழுதினார்கள் //

துக்ளக் தர்மபுரி எரிப்பு சம்பவத்த சொல்லாததற்குக் காரணம் லே அவுட் பிரச்சினை அய்யா.

said...

//துக்ளக் தர்மபுரி எரிப்பு சம்பவத்த சொல்லாததற்குக் காரணம் லே அவுட் பிரச்சினை அய்யா.//

எனக்கு அது தெரியாமல் போய் விட்டது. அதை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி. தங்களது கருத்துக்களை பதிந்தமைக்கு மிக்க நன்றி

PARAMA PITHA said...

It is very unfortunate that you remember thuglaq for some commercial initiatives. it is definitley more genuine and neutral than all other tamil magazines.

for example, it was only magazine that printed complete black color on its cover page to condemn the demolition of the disputed structure at Ramajenmaboomi

Params

Anonymous said...

//துக்ளக் தர்மபுரி எரிப்பு சம்பவத்த சொல்லாததற்குக் காரணம் லே அவுட் பிரச்சினை அய்யா//

பல முறை அதைக் கண்டித்து தலையங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பு வந்த போதும் அதைப் பாராட்டி எழுதப்பட்டது. படிக்காமலேயே புளுகு மூட்டையை அவிழ்த்துவிடாதீங்க.

கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க.

களப்பிரர்கள் கன்னடக்காரர்கள் என்று சொல்வார்கள். எதற்க்கு இந்த தமிழ் பாச வேசம்? பாவம் இன்னமும் பலபேர் உங்களின் உண்மை முகம் தெரியாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போல.

said...

// பல முறை அதைக் கண்டித்து தலையங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பு வந்த போதும் அதைப் பாராட்டி எழுதப்பட்டது. படிக்காமலேயே புளுகு மூட்டையை அவிழ்த்துவிடாதீங்க.

கண்ணாடியை கழட்டிட்டு பாருங்க.

களப்பிரர்கள் கன்னடக்காரர்கள் என்று சொல்வார்கள். எதற்க்கு இந்த தமிழ் பாச வேசம்? பாவம் இன்னமும் பலபேர் உங்களின் உண்மை முகம் தெரியாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போல. //


அது உண்மை இல்லை எனில், மன்னிக்கவும் .
ஆனால் பின்னூட்டமிட்டவர் கூற வந்த செய்தி - எங்களது எண்ணம் போன்று துக்ளக்கிற்கு எழுத இயலாமல் போனதற்கு லே அவுட் பிரச்சனை என்று டோண்டு அய்யாவின் கருத்தாக தெரிகிறது. அந்த பொதுவான கருத்தை பின்னூட்ட மிட்டவர் 'தர்ம புரி சம்பவத்திற்கு மட்டும்' பொருத்தி விட்டார். அவ்வளவே.

// களப்பிரர்கள் கன்னடக்காரர்கள் என்று சொல்வார்கள். எதற்க்கு இந்த தமிழ் பாச வேசம்? பாவம் இன்னமும் பலபேர் உங்களின் உண்மை முகம் தெரியாமல் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போல. //

இருக்கட்டும். நான் கன்னட காரனாக கூட இருக்கிறேன். பார்ப்பனனாய் பார்ப்பனியத்துடன் வாழ்வதை விட - அதை வெறுக்கும் மனிதனாக எந்த இன மனிதகவும் இருந்துவிட்டு போகிறேன்.

ஆம், அவர்கள் கன்னட நாட்டில் இருந்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என்று ஒரு கருத்தும் உண்டு. ஆனால் பார்ப்பான மதத்தை - பார்ப்பன சடங்குகளை - வருண பேதத்தை ஒழிக்க முயற்சி செய்தவர்கள் .

அம்பி, யாருடா தமிழ் வேஷம் போடுறா ??? சமஸ்கிருதம் தேவ பாசை, சமஸ்கிருதத்துல கடவுள் வழிபாடா - ஆகுதடா இப்படி எல்லாம் நினைக்கும், நேரடியாகவும் மறைமுகவும் பேசும், எழுதும் உம் நண்பர்கள் ஏனப்பா தமிழ்-ல வார இதழ், மாத இதழ், தொலை காட்சின்னு தமிழ்-ல மய்யமா வச்சு தொழில் பண்ணுறீங்க ....

அப்புறம் அம்பி - களப்பிரர் ன்றது மோசமான இனம், கொடூரமானவனுங்க னு எல்லாரும் சொன்னனுங்கனு வச்சுக்க, வேற ஒரு நல்ல பேரா வசிகிருவேன் . ஆனா, அதே மாதிரி பர்ப்பநீயம்ன்றது மோசமானதுன்னு ஏக பட்ட பேரு சொன்னா, நீ உன் ஜாதிய விட்டு வேற ஜாதிக்கோ இல்ல வேற மதத்துக்கோ மாறிக்குவியாட, கண்ணா ?

அப்புறம், இங்க யாராவது டேவிட், பீட்டர்னு பேரு வச்சுகிட்டு எழுதினா, அவனுங்க எல்லாம் இங்கிலாந்து காரனுங்க, முகமது, அஹ்மது னு சொன்னா அவனுங்க எல்லாம் சவூதி கரனுங்கனு சொல்லுடா, கண்ணா.

said...

// It is very unfortunate that you remember thuglaq for some commercial initiatives. it is definitley more genuine and neutral than all other tamil magazines.

for example, it was only magazine that printed complete black color on its cover page to condemn the demolition of the disputed structure at Ramajenmaboomi


Params //

இந்த இடுகையின் நோக்கம் - துக்ளக் என்னும் வார இதழ் 'தமிழகத்தின் அரசியல் உரைகல்லாக சிலரால் தமிழ்மண பதிவு சேர்க்கைகளில் காண்பிக்க படுவதால், துக்ளக்கும் ஓர் மிக சராசரியான செய்தி இதழே என சொல்லுவதற்கும் ( வணிக நோக்கத்திற்காகவும், தேவை யானவர்களை ஆதரிக்கவும், தேவை படும்போது எதிர்க்கவும் ....) செய்திகளையும் அதன் வேர்களையும் அலசுவதற்கு பதிலாக அதுவும் அல்ப தனங்களை பற்றி தான் பேசுகிறது என்பதர்க்குமே . மற்ற வற்றை ஒப்பிடுகையில் இருபது மில்லி கிராம் குறைவாக இருந்தால் மகிழ்ச்சியே.

ராமர் பால - சேது சமுத்திர திட்டம் பற்றி, ஈழ போராட்டங்கள் குறித்து, 'யாரும் கோவில் அர்ச்சகர் ஆகலாம் - தமிழ் பாடலாம்' குறித்து, முக்கியமாக சொர்ணமால்யா செய்திகள் ...இப்படி எல்லாவற்றையும் பார்த்தல் தான் அது உண்மையில் மற்ற இதழ்களில் இருந்து எவ்வளவு தூரம் அதிக நடுநிலையில் இருக்கு என்று தெரியும். ஓர் ஒரு உதாரணத்தை வைத்து முடிவு செய்வதுபட்ட அவ்வளவு சரியானதாக இருக்கும் என்று எனக்கு தெரிய வில்லை.

தங்களது கருத்துக்கு மிக்க நன்றி

இராவணன் said...

எனக்கு தெரிந்து எந்த சாதியில் பிறந்தவனாய் இருந்தாலும் படித்தவன் பெரும்பாலும் சாதிதாண்டிய சிந்தனையை அடைந்துவிடுகிறான். சாதியற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை அமைக்க பாடுபடுகிறான்.

ஆனால் இந்த படித்த பார்ப்பன கூட்டம் கிட்டத்தட்ட மொத்தமும் சாதி பெருமை பீற்றிக்கொண்டு திரிகிறார்கள். பதிவுலகிலயே இது கண்கூடு. பார்ப்பனர்களைத் தவிர எவரும் சாதி தம்பட்டம் அடிப்பதாய் தெரியவில்லை. இன்றே இப்படி என்றால் கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கவே பதறுகிறது.

இந்த சுயநலவாத அயோக்கியர்களின் மதிப்பெல்லாம் நமக்கு (சமூகத்துக்கு) தேவையில்லாதது; இடக்கையால் புறந்தள்ளி நம் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

உங்கள் பதிவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

Anonymous said...

//ஒரு உதாரணத்தை வைத்து முடிவு செய்வதுபட்ட அவ்வளவு சரியானதாக இருக்கும் என்று எனக்கு தெரிய வில்லை.
//

இப்படி சொல்கிறவர்தான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் 'சுட்டி' இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள்.

//எங்களது எண்ணம் போன்று துக்ளக்கிற்கு எழுத இயலாமல் போனதற்கு //

நல்ல வேளை. அவர்கள் அப்படி எழுதுவதில்லை என்று ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன். சாதி துவேசம் மட்டும்தான் முக்கியம் என்று நினைத்தால் எங்கிருந்து சமச்சீரான சமுதாயம் வளர்ப்பது?

//பார்ப்பனனாய் பார்ப்பனியத்துடன் வாழ்வதை விட - அதை வெறுக்கும் மனிதனாக எந்த இன மனிதகவும் இருந்துவிட்டு போகிறேன்.//

பார்ப்பனீயம் என்றால் என்னவென்று கூட உங்களால் சொல்ல முடியாது. சாதீயம் என்று நீங்கள் அடையாளப்படுத்த நினைத்தால், அதை தேவரீயம், பிள்ளைமாரீயம், முதலியாரீயம் என்றும் சொல்லலாம். உங்களால் சொல்ல முடியாது. சொல்லவும் யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. சுயமாக சிந்திக்க முயற்சிக்கலாமே?

//ஆனால் பார்ப்பான மதத்தை - பார்ப்பன சடங்குகளை - வருண பேதத்தை ஒழிக்க முயற்சி செய்தவர்கள் .//

ஒரு நிறுவனத்திற்க்கு பதிலாக இன்னொரு நிறுவனத்தை அடையாளப்படுத்தினார்கள். அவர்கள் ஆதரித்தது பௌத்த மதத்தை. அந்த மதம்தான் சிங்கள்த்தீவில் தமிழர்களை துரத்தி அடிக்கும் மதமாக முதலில் நிற்கிறது. ஓ! இதுவும் உங்கள் 'மூளைசலவை' பாடதிட்டத்தில் இல்லையா?

//சமஸ்கிருதம் தேவ பாசை, சமஸ்கிருதத்துல கடவுள் வழிபாடா - ஆகுதடா இப்படி எல்லாம் நினைக்கும், நேரடியாகவும் மறைமுகவும் பேசும், எழுதும் உம் நண்பர்கள் ஏனப்பா தமிழ்-ல வார இதழ், மாத இதழ், தொலை காட்சின்னு தமிழ்-ல மய்யமா வச்சு தொழில் பண்ணுறீங்க ...//

வடமொழி வழிபாட்டு மொழியாக பாரதம் முழுவதும் இருக்கதான் செய்கிறது. இலத்தீன் போல். அரபி போல். இது வேண்டாமென்றால் எங்களது தமிழிலும் (கன்னடத்தில அல்ல) ஏராள தோத்திரங்களும், வழிபாடு ஆகம முறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டார் தெய்வங்களும் அதன் வழிபாடுகளும் பல்வேறு வழியில் பின்பற்றப் படுகின்றன.

உங்கள் தேவைக்கு நீங்கள் எடுத்து கொள்ளலாம்.

களப்பிரர் ஆதரித்த சமண மதம் இன்று இருப்பது மார்வாரிகளின் இனத்தில் மட்டுமே. பௌத்த மதமோ 'புத்தம் சரணம் கச்சாமி' என்று வடமொழியில் வழிபாடு செய்கின்றது. எங்கே அய்யா தமிழ்?

தமிழின் இருண்ட காலமான களப்பிரர் அழித்தது போக இருக்கும் எஞ்சியிருப்பதுதானே தற்போதைய தமிழ்?

//வேற ஒரு நல்ல பேரா வசிகிருவேன் . //

உங்கள் கொள்கை விளக்கத்திற்கு நன்றி.

//பர்ப்பநீயம்ன்றது மோசமானதுன்னு ஏக பட்ட பேரு சொன்னா, நீ உன் ஜாதிய விட்டு வேற ஜாதிக்கோ இல்ல வேற மதத்துக்கோ மாறிக்குவியாட, கண்ணா ?//

'ஏக'பட்ட பேரு சொன்னா? கோயபல்ஸ் மாதிரியா திரும்ப திரும்ப சொன்னாலா? உத்தபுரம் நிகழ்வு பத்தி உங்களால ஒரு கண்டனம் பதிவு செய்ய முடியுதா?

என் சாதியோ மதமோ எனக்கு பிடிக்காத எதையுமே விட்டொழிக்க எனக்கு எந்தவித தடையுமுமில்லை.

//டேவிட், பீட்டர்னு பேரு வச்சுகிட்டு எழுதினா, அவனுங்க எல்லாம் இங்கிலாந்து காரனுங்க, முகமது, அஹ்மது னு சொன்னா அவனுங்க எல்லாம் சவூதி கரனுங்கனு சொல்லுடா//

இங்கே யாராவது 'துக்ளக்'னு சொன்னா அவங்களை 'அம்பி'னு ஏங்னண்ணா சொல்றீங்க?

Anonymous said...

//இராவணன்//

ஏண்டா "அம்பி", ஏன் இப்படி ஊரெல்லாம் போய் உன் சாதி வெறியை தம்பட்டம் அடிச்சிக்கிற? இராமாயணத்திலேயே சொல்லியிருக்கே நீ ஒரு "பார்ப்பான்"னு. நீ பெரிய வீணை வித்துவானாம். ஏண்டா, பறை மோளம்தானேடா தமிழ் வாத்தியம். நீ ஏண்டா வீணை, கோணைன்டு சொல்லிண்டு இருக்க? சிவபெருமான்தான் உன் தெய்வமாம்? அப்ப முனீச்வரன், கருப்பண்ணசாமியெல்லாம் உன் தெய்வமில்லையா?

'இராவணன்' ஒரு பேர்ல இவ்வளவு சாதி வெறி ஒளிந்திருக்கிறதா?

எப்பதாண்டா "அம்பி" நீ திருந்த போறே?

said...

// //இராவணன்//ஏண்டா "அம்பி", ஏன் இப்படி ஊரெல்லாம் போய... //இராவணன்//

ஏண்டா "அம்பி", ஏன் இப்படி ஊரெல்லாம் போய் உன் சாதி வெறியை தம்பட்டம் அடிச்சிக்கிற? இராமாயணத்திலேயே சொல்லியிருக்கே நீ ஒரு "பார்ப்பான்"னு. நீ பெரிய வீணை வித்துவானாம். ஏண்டா, பறை மோளம்தானேடா தமிழ் வாத்தியம். நீ ஏண்டா வீணை, கோணைன்டு சொல்லிண்டு இருக்க? சிவபெருமான்தான் உன் தெய்வமாம்? அப்ப முனீச்வரன், கருப்பண்ணசாமியெல்லாம் உன் தெய்வமில்லையா?

'இராவணன்' ஒரு பேர்ல இவ்வளவு சாதி வெறி ஒளிந்திருக்கிறதா?

எப்பதாண்டா "அம்பி" நீ திருந்த போறே?////


டேய் வெண்ணெய், ராமாயணம்-ட்றதே ஒரே கற்ப்பனை கதை. திரவிடர்கள இந்துக்களா இணைக்கிரதுக்காக ஏற்படுத்தப்பட்ட புனைய கதை. ராமயனத்த நாங்க அதறிக்கிற மாதிரி "ராமாயனத்துலையே சொல்லி இருக்கேன்னு' இளிக்கிற. ஒரு திராவிடனே வீணை வாசிச்சான், சிவனை கும்பிட்டனு சொல்லி இருக்குற திரவிடர்கள இந்துக்களாக மற்ற புனையப்பட்ட கதை தான் ராமாயணம். அந்த கதையில வர்ற ராவணன் திராவிட பேரு ராவணன். அந்த பேர எங்களுக்கு புடிச்சதாலும் - அவன் ராமனை விட எம்புட்டோ மேலானவன்றத (கதை படியே) நம்புரவனுங்க அந்த பேர உபயோகபடுதுரானுங்க ...

கதைய மய்யமா வச்சு உன் தத்துவத்த உளருற நீ எப்படா அம்பி திருந்த போற ??

said...

////ஒரு உதாரணத்தை வைத்து முடிவு செய்வதுபட்ட அவ்வளவு ... //ஒரு உதாரணத்தை வைத்து முடிவு செய்வதுபட்ட அவ்வளவு சரியானதாக இருக்கும் என்று எனக்கு தெரிய வில்லை.
//
இப்படி சொல்கிறவர்தான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் 'சுட்டி' இந்த பதிவை போட்டிருக்கிறீர்கள்.////

*************
நல்ல படிச்சு பபாருங்க சார் .... "ராமர் பால - சேது சமுத்திர திட்டம் பற்றி, ஈழ போராட்டங்கள் குறித்து, 'யாரும் கோவில் அர்ச்சகர் ஆகலாம் - தமிழ் பாடலாம்' குறித்து, முக்கியமாக சொர்ணமால்யா செய்திகள் ...இப்படி எல்லாவற்றையும் பார்த்தல் தான் அது உண்மையில் மற்ற இதழ்களில் இருந்து எவ்வளவு தூரம் அதிக நடுநிலையில் இருக்கு என்று தெரியும்." சொன்னதுலேயே தெரியல ...??? இதுல எல்லாம் அதோட பார்வை எப்படி இருக்கும்ன்றதையும் கேட்டிருக்கோம்.
************

////எங்களது எண்ணம் போன்று துக்ளக்கிற்கு எழுத இயலாமல் போனதற்கு //
//பார்ப்பனனாய் பார்ப்பனியத்துடன் வாழ்வதை விட - அதை வெறுக்கும் மனிதனாக எந்த இன மனிதகவும் இருந்துவிட்டு போகிறேன்.//
பார்ப்பனீயம் என்றால் என்னவென்று கூட உங்களால் சொல்ல முடியாது.////

******************
சொல்லமுடியாதுனு நீயே நெனசுகிட்டதுலேயே தெரியுதுடா உன் பார்ப்பனீயம். சரியான ஆளா இருந்த 'என்னனு சொல்லுன்னு' தான் நீ கேட்டு இருக்கனும். அதுலேயே ஒழுகுது உன் பார்ப்பனீயம்.
**************************

சாதீயம் என்று நீங்கள் அடையாளப்படுத்த நினைத்தால், அதை தேவரீயம், பிள்ளைமாரீயம், முதலியாரீயம் என்றும் சொல்லலாம். உங்களால் சொல்ல முடியாது. சொல்லவும் யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. சுயமாக சிந்திக்க முயற்சிக்கலாமே?


****************************
லூசு பயலே. இருக்குறது ஒன்னே ஒன்னு தாண்டா ... பார்ப்பனீயம் . புதிய பார்ப்பனர்களாக இருக்கும் ஆதிக்க ஜாதி பார்ப்பனீயம் - கடவுளின், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் தாங்கள் உயர் நிலையில் இருப்பதாக நினைத்து கொண்டு தங்களுக்கு கீழ் உள்ளவர்களை கொடுமை படுத்துவது, சக மனிதனாக மதிக்காதது, இழிவு படுத்துவது, சலுகைகளை அனுபவிப்பது எவை லாம் தான் பார்ப்பனீயம். இதுல நீ ஒன்னு ரெண்டுல ச்பெசலிச்ட். மற்ற ஆதிக்க ஜாதிக்காரன் வேற சிலவற்றில் ச்பெசலிச்ட். இம்புட்டு தான் வேறுபாடே ஒழிய அவனும் பார்ப்பனனை போன்றவனே - இவைகளை பின்பற்றினால்.
*******************************

////ஆனால் பார்ப்பான மதத்தை - பார்ப்பன சடங்குகளை - வருண பேதத்தை ஒழிக்க முயற்சி செய்தவர்கள் .//
ஒரு நிறுவனத்திற்க்கு பதிலாக இன்னொரு நிறுவனத்தை அடையாளப்படுத்தினார்கள். அவர்கள் ஆதரித்தது பௌத்த மதத்தை. அந்த மதம்தான் சிங்கள்த்தீவில் தமிழர்களை துரத்தி அடிக்கும் மதமாக முதலில் நிற்கிறது. ஓ! இதுவும் உங்கள் 'மூளைசலவை' பாடதிட்டத்தில் இல்லையா?////

***************
வென்று , நான் இங்கு எந்த மதத்தையும் ஆதரிக்க வில்லை. எல்லா மதமும் கழிவறை குப்பைகளே. ஆனா உன் மதம் மட்டும் தான் தனது மததினரேயே இழிவு படுத்துகிறது. தனது மதத்தினரை தனது கடவுளிடம் இருந்தே பிரிக்கிறது. களப்பிரர் காலத்தில் பவுத்த மதமும், சமண மதமும் மக்களை இழிவு படுத்தவில்லை. ஆதலால் அவர்கள் ஆதரித்த அன்றைய மதத்தையும் இன்றைய அதன் நிலையையும் ஒப்பிடுவதே முட்டாள் தனம். எனினும் நான் எல்லா மதத்தையும் வெறுப்பவனே.
*************************

//////சமஸ்கிருதம் தேவ பாசை, சமஸ்கிருதத்துல கடவுள் வழிபாடா - ஆகுதடா இப்படி எல்லாம் நினைக்கும், நேரடியாகவும் மறைமுகவும் பேசும், எழுதும் உம் நண்பர்கள் ஏனப்பா தமிழ்-ல வார இதழ், மாத இதழ், தொலை காட்சின்னு தமிழ்-ல மய்யமா வச்சு தொழில் பண்ணுறீங்க ...//
வடமொழி வழிபாட்டு மொழியாக பாரதம் முழுவதும் இருக்கதான் செய்கிறது. இலத்தீன் போல். அரபி போல். இது வேண்டாமென்றால் எங்களது தமிழிலும் (கன்னடத்தில அல்ல) ஏராள தோத்திரங்களும், வழிபாடு ஆகம முறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டார் தெய்வங்களும் அதன் வழிபாடுகளும் பல்வேறு வழியில் பின்பற்றப் படுகின்றன.
உங்கள் தேவைக்கு நீங்கள் எடுத்து கொள்ளலாம்.////

**************************
பாரதம் எந்த எழவையும் வச்சு வலி(ழி)படட்டும்..எங்களுக்கு எங்க நாட்டுல எங்க மொழி வேணும்னு தான் இம்புட்டு கச்டபடுறோம்.
கன்னடத்தில் அல்ல என்று குறிப்பிட்டு உள்ள - ஈன புத்தி உள்ளவனே !! நான் உன்னை போல அனானியாக முதுகெலும்பு இல்ல - வக்கில்லா கோழையாக எழுதவில்லை. பேரு, ஊரு, படம் , எல்லாம் போட்டு எழுதுறேன். போயி நானும் என் பரம்பரையும் யாருன்னு விசரிசுக்கோ. உண்ண பத்தி விசாரிச்சா - ஆப்கானிஸ்தான், டர்க்கி னு வந்தாலும் வரும்... நிற்க. நான் அந்த கருத்தை, அதாவது தமிழ் கடவுள் வழிபாடு, தேவாரம் பாடுவது போன்ற செய்திகளில் துக்ளக் ஓட நிலை என்னனு தான் கேட்டேன். நீ
ஏன் 'தேவைனா நீங்க எடுத்துக்கலாம்னு சொல்லுற'. அது எங்களுக்கு தெரியும் ராசா. ஆறுமுக சாமி தனக்கு தமிழே தேவைன்னு எடுத்டுகிட்டப்ப எப்படி கொலை வெறி தாக்குதல் நடந்துச்சுன்னு.
**************************************

////களப்பிரர் ஆதரித்த சமண மதம் இன்று இருப்பது மார்வாரிகளின் இனத்தில் மட்டுமே. பௌத்த மதமோ 'புத்தம் சரணம் கச்சாமி' என்று வடமொழியில் வழிபாடு செய்கின்றது. எங்கே அய்யா தமிழ்?///

*****************
எந்த மொழில, எந்த ஊர்ல, யாருக்கு வழிபாடு னு தான் சொல்லுறோம். அதுவும் மற்றொரு மொழில பாடுறது கடவுளுக்கு ஆகாது, தீட்டு மொழின்னு சொல்லி இழிவு படுத்துரத தான் இங்க சொல்லுரமே ஒழிய, மார்வாரி இனத்துள - மார்வார் இ பேசுற மொழிய விட்டுட்டு எங்க தமிழ்ல பட்டு பாடுங்கனு சொல்லுற ஆளுங்க நாங்க இல்ல ராசா.
***********************
//
தமிழின் இருண்ட காலமான களப்பிரர் அழித்தது போக இருக்கும் எஞ்சியிருப்பதுதானே தற்போதைய தமிழ்?//

****************

மிட்சம் இருக்க தமிழ் காப்பாத்த தான் இம்புட்டு கச்டபடுறோம். சுப்ரீம் கோர்ட்டுல இருந்து, உள்ளூர் தீட்சிதர் வர அதுக்கு எதிரிய இருக்குறப்ப, இது கஷ்டம் தான். இருந்தாலும் காப்பாத்த முயச்சி செய்றோம் . அப்புறோம், நீ என்னமோ அகழ்வாராய்ச்சி காரன் மாதிரி பேசுற - கலப்பிரகள் தமிழை அழித்தவர்கல்ன்ற மாதிரி. அவர்களில் காலத்தில் நடந்தவைகளை பற்றி நிறைய வரலாற்று குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதாலே அது இருண்ட காலம் என்று சொல்ல படுகிறதே ஒழியே, வேறெந்த காரணமும் இல்லை.
*************************************

//வேற ஒரு நல்ல பேரா வசிகிருவேன் . //
உங்கள் கொள்கை விளக்கத்திற்கு நன்றி.

**********************
உங்கள் புரிந்து கொள்ளளுக்கு நன்றி . ராசா நீ என்னோட 'டிஸ்ப்ளே நேம்' ம வச்சே இம்புட்டு கதையும், திரிப்பயும் சொல்லுறியே, உங்க அரசியல் அறிவும், தர்க்கப்பு உத்தியும் புல் அறிக்க வைக்குதப்பா ...
*************************

//பர்ப்பநீயம்ன்றது மோசமானதுன்னு ஏக பட்ட பேரு சொன்னா, நீ உன் ஜாதிய விட்டு வேற ஜாதிக்கோ இல்ல வேற மதத்துக்கோ மாறிக்குவியாட, கண்ணா ?//

'ஏக'பட்ட பேரு சொன்னா? கோயபல்ஸ் மாதிரியா திரும்ப திரும்ப சொன்னாலா? உத்தபுரம் நிகழ்வு பத்தி உங்களால ஒரு கண்டனம் பதிவு செய்ய முடியுதா?////

***************************
ராசா, எம்புட்டோ பேரு எழுதிட்டாங்க. நீங்க படிக்கல. அதவே நானும் எழுத வேண்டாம்னு தான் நான் வேற வேற விஷயமா எழுத முயற்சி பண்ணினேன். இல்லாட்டி நானும் எழுதி இருப்பேன். நீ மனுசனா மாருனு சொன்ன, நீங்க ஏன் அடுத்தவன கைய கான்பிக்குறீங்க ??
.*************************

//என் சாதியோ மதமோ எனக்கு பிடிக்காத எதையுமே விட்டொழிக்க எனக்கு எந்தவித தடையுமுமில்லை.//

****************
உங்க ஜாதியும் உங்க மதமும் உங்களுக்கு புடிச்ச விஷயமா இருக்குறது ன்றது எங்க அபிப்ராயம் . அப்படி இல்லைன்னா மிக்க மகிழ்ச்சி.
***************

////டேவிட், பீட்டர்னு பேரு வச்சுகிட்டு எழுதினா, அவனுங்க எல்லாம் இங்கிலாந்து காரனுங்க, முகமது, அஹ்மது னு சொன்னா அவனுங்க எல்லாம் சவூதி கரனுங்கனு சொல்லுடா//
இங்கே யாராவது 'துக்ளக்'னு சொன்னா அவங்களை 'அம்பி'னு ஏங்னண்ணா சொல்றீங்க?////

*****************
ஏன்டா அம்பி, நான் அம்பின்றது தமிழ் வார்த்தை. எந்த தமிழ் பய்யனையும் செல்லமா அம்பினு சொல்லலாம்னு இல்ல நெனெச்சேன். அப்படி இல்லையா ??
*************************