Thursday, July 24, 2008

போலி-க்கு கிடைத்த தண்டனை ....

நண்பர்களே டோண்டு ஐயா அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது !! அதனை பற்றிய எனது கருத்துக்களை இங்கு வைக்கிறேன்.

அதற்குமுன், நான் பதிவுலகிற்கு புதியவன் என்பதையும், இந்த போலி பிரச்சனை பற்றிய அறிவு எனக்கு வெகு சமீபத்தில் தான் -அதுவும் வெகு சிறிய அளவிலே தான் கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

டோண்டு அவ்ர்களை பற்றியும் மற்ற சிலரை பற்றியும் போலி தவறாகவும் அவதூறாகவும் பல வழிகளில் எழுதி இருந்திருக்கிறார். அது கொஞ்சமும் சந்தேகமின்றி அருவருக்கத்தக்க செயலே. அவர் நேர்மையாக, கருத்து மோதல்களை எதிர் கருத்துகளால் மட்டுமே எதிர்த்திருக்க வேண்டும். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

//மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. //

இதை படித்த பொழுது, மிகவும் வருத்தபட்டேன். ஒரு மேல்நாட்டு பழமொழி நினைவிற்கு வருகிறது. தமிழில் சொன்னால் "எதை எந்த அளவிற்கு விமர்சிப்பது என்பது முக்கியம். உன் நண்பனின் தோள் மீது இருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதே"

கொலை கேசில் சிக்கியவர் அவரது 'மடாதிபதி' வேலையே தொடர முடிகிறது; ஊறுகாய் வியாபாரியை ஏமாற்றியவர் சாவுக்கு அப்புறமே தீர்ப்பு வரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது; ஆனால் பாவம் ஒரு சில தனி மனிதர்களை தாக்கி எழுதிய மூர்த்தி போன்றவர்களுக்கு, அவை தகாதமுறையில் எழுதப்பட்டவை என்ற காரணத்திற்காக வேலை பறிக்க படுகிறது, கடவு சீட்டு பறிக்க படுகிறது !!!

பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் மினஞ்சல் அனுப்பினால், அந்த மிரட்டலுக்கான உளவியல் காரணங்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல், அந்த மாணவனை தண்டித்தால் அது சரியான செயலா ?

பெரியாரை பற்றி, கொளத்தூர் மணி பற்றி விக்கி பீடியாவில் தேடி பாருங்கள். விஷமமான செய்திகள் மட்டுமே இருக்கும். ஏனெனில் அதை எழுதியவர்களின் சமூக பின்னணி அப்படி!! தாங்கள் பெற்றிருக்கும் முன்னேற்ற நிலையையும் அதன் மூலம் அடைந்த கணினி வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு சமுதாயத்தை கீழ்த்தரமாகவும், அதன் இழிவை நீக்க பாடுபட்ட தலைவர்களையும், அவர்களை பின்பற்றி பல ஆக்க செயல்களில் ஈடுபட்டு வரும் இந்நாள் தலைவர்களையும் தொடர்ச்சியாக நய்யாண்டி செய்து எழுதிவருபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா ? அவர்கள் எல்லோரும் போலி அவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒருவகையில் கூட காரணம் இல்லையா ?

இரு அணியினரும் போலி அவர்களின் பக்கங்களுக்கு சென்று அவற்றை படித்து - அவரின் ஹிட் கவுண்ட்-ஐ ஏற்றியதன் மூலம் மறைமுகமாக செய்தவை 'இந்த செய்கையை ஊக்கபடுத்தியதாகாதா ? ஏதோ ஒரு வகையில் நாம் எல்லாருக்குமே அவரது குற்றத்தில் பங்கு இருக்கிறது . ஆனால் பாவம் தண்டனை மட்டும் அவருக்கு.

Tuesday, June 10, 2008

உலக மயமாகும் உளறல்கள் ...

ச்சே.. தொலை காட்சி பெட்டி எப்பொழுதோ குப்பைகளை நடுவீட்டில் கொட்டும் தொல்லை காட்சியாக மாறிவிட்டது .. அது பத்தாதுன்னு இப்ப இணையமும் !! இந்த இன்டர்நெட் இணைப்பும், கணினி கீபோர்ட் விலையும் தாருமார இறங்குனாலும் இறங்குச்சு.. ஆளாளுக்கு பதிவு போடுறானுங்க... அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல - படிக்கிரவனுக்கு சொந்த அறிவு இருந்து பகுத்து அறிவும் இருந்து படித்து புரிந்து கொண்டால். ஆனா பாவம் நம்ம பசங்களுக்கு இந்த பொது அறிவு பகுத்து அறிவு எல்லாம் இருந்தா நம்ம நாடு இந்த நிலமைல இருக்குமா ??

எங்கெங்கு காணினும் அபத்தமாகவே இருக்கிறது...எங்கோ வெளி இடப்படும் அபத்தங்கள் எல்லா இடங்களுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பறக்கிறது ...
சாம்ப்ளுக்கு ஒன்னு ரெண்டு பாருங்க....

நண்பர் ஒருவர் அவரது பதிவில் குறிப்பிடுகிறார் ...

// XXXXXXX அவர்கள் அற்புதமான மேடைப்பேச்சாளர். அவர் ஒரு முறை
சொன்னார் நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. அது ஆங்கிலேயர்
களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது. பண்டைய தமிழ் மரபில் அவ்வழக்கம்
இல்லை!

அவர்கள் (ஆங்கிலேயர்கள்) ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் அடுத்த
வருடம் அவன் யாரோடு வாழப்போகிறானோ அல்லது அவள் யாரோடு வாழப்
போகிறாளே - ஒரு நிச்சயமற்ற தன்மை. ஆகவே ஒன்றாக இருக்கும்வரை
அதைக் கொண்டாடுவார்கள்//

ஆகா என்ன அற்புதம் !!! நம்ம ஆளுங்க அத கொண்டாடுகிறது இல்லைன்ற ஒரே காரணத்துக்காக, அதுக்கு ஒரு 'reverse இன்ஜினியரிங்' காரணம் வேற !!! நம்ம ஆளுங்கல நம்மாலே உயர்த்தி பேசிக்கிரதுக்கு இருக்குற ஒரே வழி - அடுத்தவன மட்டம் தட்டி பேசு. ஏதோ வெளிநாட்டில் இருக்குறவன் எல்லாம் வருஷம் வருஷம் வேற வேற துணை தேடிக்கிறது மாதிரி பேசு... இந்த லாஜிக்க அப்படியே வெள்ளை கார துரை நம்மல பார்த்து சொன்னா எப்படி இருக்கும் "தமிழர்கள் பொங்கல் என்று அறுவடை திருநாள் ஒன்றை கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பொங்கல் வைத்து உண்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அடுத்த அறுவடைக்கு நெல் விளைகிறதோ இல்லையோ என்ற கவலையும், பொங்கல் சாப்பிட அவர்களே உயிரோடு இருப்பார்களோ இல்லை எலி கரி தான் கிடைக்குமோ என்ற அச்சமுமே உள்ளது "

நான் லொள்ளு சபா ஒன்றை தளவிறக்கம் செய்து பார்த்து கொண்டிருந்தேன். அதன் விளம்பர இடைவெளியில் மற்றொரு நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒருவர் சொன்னது "பெண்கள் ஏன் நடு உச்சி எடுத்து தலை சீவுகிறார்கள் என்பது தெரியுமா ?? ஏன்னா உச்சிக்கு ஒரு பக்கம் இருக்குறது புகுந்த வீட்டையும், மற்றொரு புறம் வளர்ந்த வீட்டையும் நினைத்து பார்க்க "
இந்த மாதிரி அபத்த பேச்ச கேக்கவே சலிக்குது. இத ஒருத்தன் கேட்டு, அத ஒருத்தன் டயரக்டு வேற பண்ணி, அரை மணிக்கு ஒரு தடவை காது கூசும் அளவிற்கு ஒளிபரப்புகிறார்கள் ..

ஏன்டா டேய், ஏங்க சார், அப்ப உச்சி எடுத்து சீவாத எந்த பொண்ணும் பிறந்த வீட்டையோ புகுந்த வீட்டையோ மதிக்குறது இல்லையா ??? தமிழ் பெண்கள் ஒரு முப்பத்தஞ்சு கோடி தவற குறைந்தது இரநூற்றி அம்பது கோடி பேரு இந்த உலகத்துல இருப்பாங்களே சார்... அவுங்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு கிடையாதா ?? இதெல்லாம் எங்க சார் படிக்கிறீங்க ?? சரி, எங்கயோ பழைய 'எட்டு தொகை , பத்து பாட்டுல கூட சொன்னதாக வே இருக்கட்டும் ... அப்படி சொல்லிட்டன்றதுக்காக அத மறு பரிசீலனையே செய்ய மாட்டீங்களா ??

மற்றொரு இடத்தில் ஒருவர் இந்தியாவில் அமெரிக்காவை போன்று நேர் கோடுகள் கிழித்து மாநில எல்லைகளை உருவாக்கி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லுபவரோ அமெரிக்காவில் வெட்ட வெளிகள் அதிகம். ஆதலால் நேர்கோடுகள் போட்டுக்கொள்ள முடியும் ... இங்கு முடியாது என்று கூறுகிறார்.

ஆமாம், அமெரிக்கா இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடு. அதனால் இந்தியாவை விட வெட்ட வெளிகள் அதிகமே. ஆனா அங்கேயும் பல மாநிலங்களிலில் பறந்து ஆக்கிரமிக்கும் சில ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள பல மலை தொடர்களும், சில நூறு சதுர கிலோ மீட்டர் உள்ள ஏரிகளும், பாலை வனங்களும் உள்ளன...நிற்க..அமெரிக்கா முதலில் காலனி ஆதிக்க வாசிகளால் - அவர் அவர்கள் குடியேற்ற பகுதிகளை (பிரஞ்ச், ஆங்கிலேய, ஸ்பானிஷ் மற்றும் டச் காரர்கள் ) அவர் அவர் வசதிக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எல்லை பிரித்து கொண்டார்கள். பின்னர் ஆங்கில குடி வாசிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சுதந்திரம் வாங்கி, அதன் பின் மாற்ற மாநிலத்தவர்களை இணைத்து கொண்டார்கள். இவர்கள் யாரும் அமெரிக்கா பூர்வ குடி மக்கள் இல்லை. ஆனால் இந்திய அப்படி இல்லாமல், பல இன பூர்வ குடி மக்களை கொண்டிருந்ததால் மொழி வாரியான மாநிலம் தேவை பட்டது. ஒரு மொழி பேசுபவர் மற்றொரு மாநிலத்தில் சிறு பான்மையாக இருந்தால் அவர்களுது மொழி உரிமை நசுக்கப்படும் சூழல் ஏற்ப்படலாம் என்பதால். எனவே மாநில எல்லைகள் அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்டது ...

மற்றொரு இடத்தில் 'பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?' என்று ஒருவர் கேட்க, அதற்கான பதிலில் 'ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது' என்று கூறப்பட்டுள்ளது !!

தமிழ் ஈழ அரசியல் அவ்வளவாக தெரியாத அல்லது நகைச்சுவைக்கவே பதிவுகளை படிக்கும் நபர் ஒருவர் இதை படித்தால் என்ன நினைப்பார். ஏதோ இந்திய ஈழ போராட்டத்திற்கு ஆதராவாக ராணுவத்தை அனுப்பியது போலவும், அதை பிரபாகரன் மறுத்து விட்டதை போலவுமே எண்ண சந்தர்ப்பங்கள் அதிகம் ..

பிரபாகரனின் அந்த நிலைக்கு பின் இருக்கும் எண்ணற்ற எவரும் மறுக்க முடியாத காரணகளை ( ஈழ பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை அதிபருடன் ராஜீவ் அவர்கள் - 'தமிழ் ஈழ போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமலே அவர்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, அதன் முடிவை ஏற்க சொல்லி மிரட்டியது, அஹிம்ச்சை வழியில் போராடி சுதந்திரம் வாங்கியதாக மார்தட்டி கொள்ளும் ஒரு நாட்டின் அரசு அஹிம்ச்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை சாக விட்டது , மிரட்டலில் பயப்படாத காரணத்தலால் யாரின் சார்பாக இதுவரை நடந்து வந்ததோ - அவர்களின் மீதே படை ஏவியது - தமிழர்களை கொன்று குவித்தது.. இப்படி இருக்கும் அவ்வளவு வரலாறையும் )மறைக்கும் விதமாக எழுதப்படும் ஒரு விச பருக்கை தான் "ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது.

இவைகளை எல்லாம் இங்கு எழுதுவதன் நோக்கம், சிலர் பழைய - மூத்த பதிவர்களாய் இருப்பதால், அவர்களின் பதிவு பல தரப்பு மக்களால், மிகவும் அதிகமான மக்களால் படிக்க படுகிறது. அந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வரலாற்றை மறைக்கவும், திசை திருப்பவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கவும் பல சமங்களில் உபயோக படுகிறது. எனவே அவ்வாறான பதிவுகள் வரும் பொழுது அவற்றிக்கான எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வதும் தவிர்க்க இயலாதவையே.

Sunday, May 25, 2008

சபரி மலையும் ஜட்டியும்

 

சபரி மலையும் ஜட்டியும் ....

நேத்து நண்பன் ஒருவன் ஒரு செய்தி சொன்னான்.. அதை கேட்டபின்னாடி நம்ம நாட்ல நடக்குற காமடிக்கு அளவே இல்லாம போச்சூனு தோனுது. செய்தி இது தான் : இனிமேல் சபரி மலைல வேலபாக்குற பசங்க இனிமே ஜட்டி போட்டுட்டு வேலைக்கு போலாம்னு கோர்ட்டே தீர்ப்பு சொல்லிடுசாம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் - தாங்களாக மனம் உருகி காணிக்கை ஆக்கி உண்டியலில் போடும் பணம் மற்றும் நகைகளை அங்கே வேலை பார்க்கும் நபர்கள் திருடி விடக்கூடாது என்பதற்க்காக, அவர்களுக்கு  அங்கு இருக்கும் 'சட்டம்' - ஜட்டி போட்டுட்டு வேலைக்கு வரக்கூடாது. வெறும் மெல்லிய வெட்டி தான்! நம்ம ஊரு காரனுங்க ரெம்ப புத்தி சாலி. இதற்க்காக கோர்ட் வரை போய் - இப்ப கோர்ட்டே ஜட்டி போடலாம், இனிமே புதிய  தொழிநுட்ப கருவிகளை உபயோக படுத்தி திருட்டை தவிர்க்கவும் னு தீர்ப்பு சொல்லி இருக்கு.

எளிமையாக, உலோக கண்டுபுடிப்பன் (metal detector) பயன்படுத்தி இதை தடுக்கலாம் என்ற அறிவு அந்த 'ஜட்டி கூடாது' என்று சட்டம் போட்டவனிடம் இல்லையா, இல்லை  நாம் போடும் சட்டங்களை மதித்து வேலைக்கு வந்தா வா - இல்லாட்டி நாங்க வேற ஆள பார்துக்குறோம் என்ற திமிரா, இல்லை வருடா வருடம் எட்டு கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வரும் கடவுளை 'சில லட்சங்கள் செலவு செய்து  உலோக கண்டுபுடிப்பான் போன்ற வற்றை வாங்கி' ஏழை ஆக்கிவிட கூடாது என்ற நல்லெண்ணமா ??

தனது  கோவிலில் நடக்க கூடும் திருட்டுகளை கூட தடுக்க இயலாத கடவுள்,  உங்க பீரோவில்  இருக்கும் நகைகளையா  காப்பத்தபோறாறு ??  அப்படியே திருடு போனாலும் காவல் துறை "ஜட்டி போட்டு வந்து திருடர்கள் திருடினால் நாங்கள் பொறுப்பல்ல" னு சொன்னாலும் சொல்லும். கொடுமைடா சாமி!

----------------------------------

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி...

நீங்கள், "இந்துக்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லைன்னு" கோவில்களில் அறிவிப்பு பார்த்து இருக்கீர்களா? நான் போன ஒரு சில கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. அங்க சமீபத்தில் (1873 அல்ல ) கூட  பார்த்திருக்கிறேன். இந்த அறிவுப்பு எதன் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது என்பது உனக்கு தெரிந்தால் சொல்லப்பா என்று என் நண்பன் கேட்டான். எனக்கு தெரியதால், இங்கு இருக்கும் இந்துகளுக்கு - மற்றும் இன்னும் தாங்கள் இந்துக்கள் என்று நம்பி கொண்டிருக்கும் நபர்களுக்கு - இந்த கேள்வியை சமர்பிக்கிறேன்!

இந்து மதம் என்பது உலகில் தோன்றிய பழமையான மதம் என்பதும், அந்த  மதமும் அதன் வேதங்களும் எழுதப்பட்ட பொழுது மற்ற மதங்கள் தோன்றி இருந்திருக்காது என்பதும்  குறிப்பிடத்தக்கது.  கோவிலுக்கு இந்துக்களுக்கே அனுமதி இல்லையாம், இதுல வெள்ளகாரனுக்கு என்னவாம்னு கேக்காதீங்க...!!

----------------------------------------------

Saturday, May 24, 2008

சுவிஸ் வங்கி கணக்கு சூட்சுமங்கள் ..!

நம்ம வெள்ளைகார தொரைங்க ரெம்ப புத்திசாலி. அவனுங்களுக்கு தெரியும் நம்மட்ட என்ன வீக் பாயிண்ட்-னு. அத வச்சு அவுங்க சரக்க நம்ம ஆளுங்க கிட்ட - முக்கியமா அரசியல் வாதிக கிட்ட -  விப்பானுங்க.வித்தலும் வாங்கினாலும் ரெண்டு பக்கமும் நல்ல லாபம் பாப்ர்ப்பது தான்  தான் என்று அவனுக்கு தெரியாதா..

'சார் இந்த திட்டத்துக்கு ஒத்துக்கங்க. எங்க கிட்ட ஒரு தொழில் நுட்பம் இருக்கு. அத வச்சு  உங்க ஊர்  காத்துல இருந்து கருவாடு தயாரிச்சு அத டப்பா நாநூருவானு விப்போம். உங்க ஊரு  காத்து தான் ரெம்ப நாரி போய் இருக்குறதால, உங்க ஊர்ல மட்டும் தான் இந்த தொழிற்சாலை லாபமா ஓடும்.  அத நீங்க உங்க ஊர்ல இருக்குற சூப்பர் மார்க்கெட்லே உங்களுக்கு புடிச்ச ரேட்டுக்கு வித்துக்கங்க'

'கருவாட அம்புட்டு காசு குடுத்து வாங்குவாங்களா'

' ஏன் மாட்டாங்க. எங்க ஆளு அதுக்கும் உதவி பண்ணுவாங்க' உங்க ஊரு சூப்பர் நடிகர் இல்ல கிரிக்கெட் காரனுங்க வந்து " இந்த கருவாட பாத்தபின்னாடி வெஜிடேரியனா இருந்த நானே கருவாடு சாம்பார் தான் சப்ட்றேன்னு ' னு ஒரு விளம்பரம் போட்டா எல்லாம் நடக்கும். அப்புறம் சரக்கெல்லாம் நீங்களே தான விக்குறீங்க. உங்க பிராண்டு தான? இனிமே சைட் டிஷும் உங்க பிராண்டு தான்'.

'கலக்கல். ஆனா நான் இந்த அதிகரிகள, புட் ரெகுலேசன் ல இருக்குற  பொரம்போக்குகள ...

'கவலைபடாதீங்க சார். உங்க கிட்ட ஒரு 10 கோடி ரூவாய்க்கு அமெரிக்கா டாலரா தந்திடுறோம். இந்த டீல முடிசிடுங்க'

"சரி, சமாளிச்சு பாக்குறேன். ஆமா டாலர வச்சு நான் என்ன பண்ணுவேன். ரூபாய கொடுத்துடுங்க "

"ஹிஹி.. அம்புட்டு காச நீங்க எப்படி சமாளிப்பீங்க... உங்க கிட்ட தான் ஊருக்கு ஒரு பங்களா, பங்களாவுக்கு ஒரு நடிகை, எஸ்டேட், காரு , தெருன்னு அம்புட்டும் இருக்கே... எதாவது வாங்குனா மாட்டிக்க மாட்டீங்க ... எப்பாவது எதிர்கட்சி காரன் ஆட்சிக்கு வந்தா என்ன ஆகும் "

"அதுவும் கரைகட்டு தான். நீங்களே அத நான் வச்சு என்ன பண்ணலாம்னு சொல்லிடுங்க"

" சுவிஸ் பேங்க் அக்கௌண்ட்ல போட்டுடுங்க"

"சார், நான் புது அரசியல் வாதி. இதெல்லாம் எனக்கு தெளிவா தெரியாது. உதவி செஞ்சீங்கன்னா நல்ல இருக்கும்"

"செஞ்சுட்டா போச்சு . இங்க பாஸ்போர்ட் காப்பி ஒன்னு போதும். அக்கவுண்ட் ஒப்பன் பண்ண. எல்லாம் போஸ்ட்லேயே முடிஞ்சிடும். எங்க ஊர் சட்டப்படி உங்க கணக்குல எம்புட்டு காசு இருக்குன்றத யாரிட்டையும் சொல்ல மாட்டோம். அதனால அந்த ஆண்டவனே வந்தாலும் கண்டுபுடிக்க முடியாது. உங்களுக்கு எப்ப காசு தேவைனாலும் உங்க  லோக்கல் பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொன்னா அதுக்கு அனுப்பிடுவோம். இல்லாட்டி நீங்களே எங்க பெங்க்குக்கு வந்து உங்க பாஸ்போர்ட்  காமிச்சு வாங்கிக்கலாம்"

"நீங்க அனுப்புற மன்த்லி ஸ்டேட்மென்ட் உளவு துறை கண்டுபுடிசிடுமே"

"அதெல்லாம் திரை கதைக்கு தான். உங்க ஊரு சுப்ரீம் கோர்ட்டு - ஏன் பார்லிமென்ட் தீர்மானம் போட்ட கூட நாங்க ஸ்டேட்மென்ட் அனுப்ப மாட்டோம். உங்களுக்கு வேணும்னா அனுப்புவோம். "

"எனக்கு அனுபிச்சுடதீங்கப்பா.. நான் வரி கட்டாத பணத்தையும் போட்டுக்கலமா, இந்த அக்கவுண்ட் லேயே"

"சார், அதுக்கு தான் இந்த மாதிரி அக்கவுண்டே நாங்க வச்சிருக்கோம் . எங்க சட்டப்படி நீங்க வரி கட்டமா எம்புட்டு காச வச்சிருந்தாலும்  - அது சட்டப்படி குற்றமே இல்லை. ஆனா வரி கட்டுறப்ப பொய் சொல்லி மாட்டிகிட்டா தப்பு "

"புரியலப்பா "

"இப்ப நீ வாங்க போற கோடி ரூவாய யாரு கண்ணுலையும் படமா வரி கட்டாம வச்சிருந்தா தப்பு இல்ல. ஆனா என்னிக்காவது நீ வரி கட்டுறப்ப சிவாஜி படம் பாக்க வச்சிருந்த பணம் ஒரு கோடி , அதுக்கு வரினு நாப்பதாயிரம் கட்டுறீங்கனு வச்சுகோங்க, அது தப்பு."

"நல்லா இருக்கேப்பா உங்க ஊரு சட்டம். எனக்கு சீகிரமா ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல அந்த காச போட்டுருப்பா. " நீங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னடி ஒரு கேள்வி ??

என்னது ?

யாருக்கும் சொல்ல மட்டீங்கள ?

சார், இந்த ஒரே மேட்டர வச்சு தான் எங்க நாடே கோடீஸ்வர நாடா இருக்கு... உங்க எல்லபேறு காசும் எங்க கிட்ட பத்தரமா இருக்கு. அத வச்சு நாங்க இன்சூரன்சே, லோன் னு சம்பரிப்போம் ...அதனால பேங்க் எல்லாம் பெரிய பணக்கார நிறுவன இருக்கு..

ஆனா எனக்கு ஒரு டவுட்... இதே மாதிரி அக்கவுண்ட் தான் நீங்களும் வச்சிருக்கேங்களா ?

நாங்க உங்க அளவுக்கு அதிர்ஷ்ட சாலி இல்லை சார். எங்க கோர்ட் ஆடர் போட்டா,  எங்க பேங்க் விவரத்த போலீச்ட்ட சொல்லி ஆகணும். எங்க ஊரு ஆளுங்களுக்கு எல்லாம் இது பாதுகாப்பு கிடையாது ...

ஆனா நீ சுவிட்சர்லாந்துகாரன் கிடையாதே...அமெரிக்ககாரன் தானே ???

மொதல்ல எங்களுக்கும் அதே பாதுகாப்பு தான் இருந்துச்சு. இப்ப தான் எங்க நாடு சுவிட்ச்ர்லந்துட்ட பேசி 'எங்களுக்கு வங்கி  விவரம் சொல்லல' நடக்குறதே வேரனு சொல்லிடுச்சு... அதனால அம்புட்டு பாதுகாப்பு இல்ல .

அட பாவமே.. அமெரிக்கா காரன் எல்லாம் அரசியல் வாதியாக இருந்தா பாவம் போலியே ...
ஆமாம் சார், அமெரிக்கா மட்டும் இல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாதிரி சண்ட போட்டு ரகசியம் தெரிஞ்சுகிற உரிமைய வாங்கிடுச்சு...

அப்ப   நாங்க மட்டும் தான் லக்கியா ?

அப்படியும் சொல்லலாம். எங்க ஊர்ல வரி ஏய்ப்பு எல்லாம் கஷ்டம் சார். எல்லாம் கண்டு புடிசிடுவாங்க. அப்புறம் சட்டம் எல்லாம் தன் கடமைய வேகமா செய்யும். அதனால மாட்டுனா தப்பிகிறது கஷ்டம்ன்றதால நாங்க இதெல்ல்லாம் ரெம்ப பெரிசா எடுதுகிறது கிடையாது. எங்க ஊர்ல தொழில் அதிர்பர்களுக்கு மட்டும் தான் இந்த வசதி. அதுவும் சட்டபூர்வமாக . நீங்க ரெம்ப லக்கி சார். உங்க ஊர்ல லஞ்சம்  வாங்குறது ஈசி, கொடுக்குறது யாருக்கும் தப்புனே தெரியாது, மறைக்குறது ஈசி, அப்படியே மாட்டுனாலும்  உங்க பேரன் கூட உயிரோட இருக்கா மாட்டான் - தீர்ப்பை பாக்குறதுக்கு. எங்க பெங்க்குக்கு இந்த மாதிரி நாடுகள் தான் உலகத்துல வேணும்...

ஹிஹி... அப்புறம் சார், எதோ உங்க ஊர்ல தொழில் அதிபர்களுக்கு சலுகைன்னு சொன்னேகளே.. அது என்ன ?? ஏன்னா  என் பய்யன் தொழில் அதிபரா ஆகபோரான் ...உபயோகமா இருக்கும்ல

உங்க பய்யன் ஒரு 10 கோடி வச்சிருப்பாரங்க  சார் ?

சார் விளையாடதீங்க.. அது அவன் வச்சிருக்குற கார செகண்ட் ஹெண்ட்ள வித்தலே வரும் ...

நல்லதா போச்சு. எண்ட அம்புட்டு சொத்து இருக்குன்னு அவர் கான்பிசாருனு வச்சுகோங்க - மால்டா, மொனாகோ, போர்ச்சுகல் எப்படி நெறைய நாடு இருக்கு...  அவுங்க பணகரனுங்களுக்கு உடனடியா வரவேற்ப்பு கொடுத்து அந்த நாட்டு பாஸ்போர்ட்டையும் கொடுத்துடுவாங்க ...அப்புறம் நீங்க அங்க இருக்கணும்னு எல்லாம் கூட அவசியம் இல்ல. வருஷம் ஒரு தடவ போன போதும். இதுக்கப்புறம் னெங்க உலகத்துல எந்த மூலைல இருக்குற சொத்த வித்தாலும் அந்த நாட்டுக்கு அதோட லாபத்துல வரி கட்டனும். ஆனா, இந்த மாதிரி தொழில் அதிபர்களுக்கு  கட்ட தேவை  இல்ல னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால நீங்க வரி கட்ட தேவை இல்ல. நாடும் காசும் தான் மாறுமே ஒழிய, கான்சப்ட் மாறது ...

எனக்கு இம்புட்டு உதவி செய்யுற..உனக்கு, என்னால எதுவும் பன்னமுடியலையே யப்பா ....
என்ன பண்றது சார். எங்க சட்டம் அப்படி. நாங்க உங்ககிட்ட பண்ணுறத, எங்க கிட்ட பண்ணுறதுக்கு  ஜெர்மன் நாட்டுக்கு  பக்கத்து நாடான லீச்ட்டேன்ச்டைன் முயற்சி பண்ணுது. அத விட போறது இல்லனு எல்லாரும் ஒத்தகாலுல இருக்கோம்... அது என்ன ஆகுதுன்னு பாப்போம். லக் இருந்தா நாங்களும் அங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி வைப்போம் ...

சரிங்க சார், உங்க உதவிக்கு நன்றி ... ரெண்டு நாள்ல தகவல் சொல்லுறேன் .

Friday, May 23, 2008

படங்களால் ஒரு செய்தி - அனானிக்கு அர்பணிப்பு !!

எனது "இந்தியன் என்பதில் பெருமைப்படு ??" என்னும் பதிவை பார்த்துவிட்டு, பதிவை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல், கொதித்து எழுந்து என்னை திட்டிய, அன்றில் இருந்து இன்று வரை அதே பின்னூட்டை எல்லா பதிவிலும் இடும், அனானிக்கு இந்த பதிவு அர்பணிப்பு.



அவர் ஆங்கிலத்திலே பின்னோட்டம் இடுவதால் - அவருக்கு தமிழ் படிப்பதில் சிரமம் இருக்கும் என்று கருதுவதாலும், இந்த படங்களில் தமிழ் இல்லை என்பதாலும், அவர் இதை எளிமையாக புரிந்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையில் ...

காலம் காலமாய் நிற்க வைக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் ...



ஒன்றிரண்டு வேலை வாய்ப்பிற்காக ஆயிரகணக்கான நபர்கள் அலுவலக வெளியே நிற்கும் நிலைமை ..
அடுத்த கும்பகோண நிகழ்வாய் எங்கெங்கும் இருக்கும் பாதுகாப்பு இன்மை ..

ஒவ்வொரு நிமிடமும் வெடிக்கும் வன்முறை...

மழைக்கு கூட தயாராக இல்லாத நிலைமை ....


இவைகள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வாகளிக்கும் ....

ஆனால் கிடைப்பதோ ....

30 bil

Defence budget news

defencebudget


lockheed

isro budget

நன்றி, அனானி அவர்களே !!!