Monday, May 19, 2008

யானைக்கும் அடி சறுக்கும் ????



சமீபத்தில் இஸ்ரோ பத்து செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. மகிழ்ச்சியான விசயமே. அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கலாம் என்பதும், இதை 'sea launch' போன்றவர்களிடம் கொடுத்திருந்தால் எவ்வளவு செலவாகி இருக்கும் என்பதும் சரிவர ஊகிக்க இயலவில்லை ( சரி சரி... விக்கி பீடியா எனக்கு சரியா சொல்லல !). இந்த பதிவு அதைப்பற்றி இல்லை.

இந்த பதிவு நம்ம இஸ்ரோ சேர்மன் பத்திரிக்கை யாளர்களிடம் சொன்னவற்றைப் பற்றி. அவர் சொன்னது (அல்லது சொன்னதாக நான் படித்தது !!): " ஒரே ஏவலில் நாம் பத்து செயற்கை கோள்களை ஏவி சாதனை படைத்துவிட்டோம். இதற்க்கு முன்னால் ரஷ்யா மட்டுமே பதின்மூன்று செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவ முயற்ச்சி செய்தது. அது வெற்றி கரமாக ஏவபட்டதா இல்லையா என்பதி பற்றி எனக்கு உறுதியாக தெரியாது."

நான் படித்த செய்தியே ' இதற்க்கு முன்னால் ரஸ்யா பதினாறு செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவி உள்ளது' என அடுத்த வரியிலேயே கூறிவிட்டது.


அதனால் கூகிள் மற்றும் விகி பீடியா வை திறந்து பார்த்ததில் 'ரசியாவின் Dnepr என்னும் ராக்கட் 2006 ம் ஆண்டு ஏவலில் தோல்வி அடைந்த பின், 2007 ல் மீண்டும் ஏவப்பட்ட பொழுது அது வெற்றிகரமாக 16 செயற்கை கோள்களை ஏவியதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் அந்த ராக்கட் 10 முறை ஏவ பட்டு ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளது.அந்த ராக்கட் செயற்கை கோள் ஏவும் பணிக்கு முன்னர் 160 முறை ஏவுகணை ராக்கட் ஆகா வேறு பயன்பட்டு உள்ளது.  

இதை படித்ததில் மிகவும் ஆச்சர்யம். தனது துறை சார்ந்த செய்திகளை - அதுவும் சொற்ப நாடுகளே செய்திகளை ஏற்ப்படுத்தும் துறையில் - முழுவதும் அறிந்து கொள்ள இஸ்ரோ சேர்மன் முயற்சிக்க வில்லையா ? பத்திரிக்கை யாளர் சந்திப்பில் - அதுவும் ஒரு வெற்றிகரமான செய்திக்கு பின் சந்திக்கும் போது - இப்படி பட்ட செய்திகளை மேற்கோள் கட்டமலே இருந்திருக்கலாம் அல்லவா ? இல்லை நாம் செய்யும் சாதனைகள் மிக பெரியவை என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்த இவ்வாறு சொல்ல பட்டதா.?

குறிப்பு : யானைக்கும் அடி சறுக்கும் என்று கூறியது 'Dnepr' ரை முன் வைத்து

7 comments:

said...

ஓ. இதை முன்னாடியே சாதிச்சிட்டாங்களா?...

அப்படின்னா, நம்ம நாயர் அப்படி பேசும்போது, வேறே யாரும் ( நம் நாட்டிலோ, வெளி நாட்டிலோ) அவர் பேச்சை மறுக்கவில்லையா?

இல்லை லூசுலே விட்டுட்டாங்களா?....

said...

//ஓ. இதை முன்னாடியே சாதிச்சிட்டாங்களா?...//

அப்பா நான் தான் உங்களுக்கு செய்தி சொல்லுரனா ??


//அப்படின்னா, நம்ம நாயர் அப்படி பேசும்போது, வேறே யாரும் ( நம் நாட்டிலோ, வெளி நாட்டிலோ) அவர் பேச்சை மறுக்கவில்லையா?

இல்லை லூசுலே விட்டுட்டாங்களா?....//

அவுங்களுக்கு இந்த மாதிரி காமெடி எல்லாம் புதுசு இல்ல !! இந்திய ஒளிகிறது - இந்திய வல்லரசாகும் - உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு - இந்த மாதிரி பேச்சு வீரகள பார்த்து பழகி இருக்கும் ...

said...

கோவியார் சொல்லும் போது சொல்லுவார், சிங்கையில் சந்தைப்படுத்துதல் உத்தியாக " உலகிலேயே 28° யில் அடிக்கப்பட்ட ஆணி" என்றுக் கூறி ஒன்றுமில்லாததை பணம் செய்ய பயன்படுத்துவார்களாம்.

அதேப் போல் இந்த ஆட்சியின் சாதனையாக இதைக் காட்ட, இப்படி ஏதாச்சும் பில்டப் செய்ய வேண்டாமா. :)))))))

said...

தனது நாடுதான் எல்லாவற்றையும் கண்டுபிடித்தது என்பதைக் கூற எல்லா நாட்டினருமே ஆசைப்படுவது இயற்கை.

அக்கால சோவியத் யூனியனை பற்றி ஒரு வேடிக்கைக் கதை உண்டு. ஒரு ம்யூசியத்தில் இரு உருவப்படங்கள் மிக்க மரியாதையுடன் மாலைகள் எல்லாம் போட்டு வைத்திருந்தார்களாம். முதல் படத்திலுள்ளவர் பெயர் நிகோலவிச் என்று குறிப்பிட்டிருந்ததாம், அடுத்தவர் பெயர் இவ்னோவிச் என்று குறிப்பிட்டிருந்ததாம். இரு படங்களையும் பார்த்த விசிட்டர் ஒருவர் அவர்களைப் பற்றி மேலும் அறிய விரும்பினாராம். அவர் கேள்விகளுக்கு விடையளிக்க ஒரு கைட் வந்தாராம்.

நிகோலவிச் என்பவர் ஆகாய விமானம், மோட்டார் கார், ரேடியோ, டெலிவிஷன், நீராவி இஞ்சின் ஆகிய எல்லாவற்றையும் கண்டு பிடித்தார் என்று கைட் கூறினார்.

அப்ப இவ்னோவிச்?

ஓ, அவரா, அவர் நிகோலவிச்சை கண்டுபிடித்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

அந்த பத்து கோள்களில் 8 கோள்கள் பல யூனிவர்சிட்டி ரிசர்ச் மாட்யூல்ஸ் (< 2கிகி எடை கொண்டது) என்று கேள்விப்பட்டேன்...

எனக்கென்னமோ அந்த மாட்யூல்களை உண்டிவில்லில் வைத்து செழுத்தியிருக்கலாம் என்றே தோண்றுகிறது!! :-p

said...

நண்பர்களின் வருகைக்கும் பின்நூட்டதிர்க்கும் நன்றி .

// அதேப் போல் இந்த ஆட்சியின் சாதனையாக இதைக் காட்ட, இப்படி ஏதாச்சும் பில்டப் செய்ய வேண்டாமா. :)))))) //

நான் இந்த கோணத்தில யோசிக்கவே இல்லையே !! கட்டாயம் இருக்கும் !!!

டோண்டு சார் , இவ்னோவிச கத சூப்பர் .
இருந்தாலும் அந்த காலத்துல அது ரெம்ப உண்மையும் கூட - முதல் கண்டம் விட்டு கண்டம் தாண்டு ஏவுகணை, முதல் செயற்கை கோள், முதல் நிலவு பயணம், அணு குண்டு, முதல் வான்வெளி நிலையம் (மிர்), முதல் அல்ட்ரா சாணிக் பயணிகள் விமானம்...

அதனால அவனுங்க இந்த மாதிரி கதை எழுதுன சகித்து கொள்ளலாம் ..!! நம்ம ஆளுங்க ப்ருடா தாங்க முடியல !!!

//அந்த பத்து கோள்களில் 8 கோள்கள் பல யூனிவர்சிட்டி ரிசர்ச் மாட்யூல்ஸ் (< 2கிகி எடை கொண்டது) என்று கேள்விப்பட்டேன்...

எனக்கென்னமோ அந்த மாட்யூல்களை உண்டிவில்லில் வைத்து செழுத்தியிருக்கலாம் என்றே தோண்றுகிறது!! :-ப//

எதாவது பெருமையா சொன்ன பாராட்டனும் .. ஆராய கூடாது ( பம்மல் கே சம்பந்தம் மாதிரி படிக்கவும் )
அத சொன்ன அடிக்க வருவாங்கப்பா. அதுக்கு பேரே நானோ சட்டிளைட்டாம்.

said...

அனைத்து கட்டுரைகளும் அருமை