Tuesday, May 20, 2008

ராசிபலன் - ஜோதிடர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகளும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.

 

சின்ன வயசுல 'எப்ப பார்த்தாலும் விளையாடதடா' னு அம்மா வெரட்டி வெரட்டி அடிச்சு படிடானு சொன்ன கொஞ்சமும் கேட்க்க மாட்டான்;
கை எழுத்து மோசமா இருந்தா தலை எழுத்து மோச மா போயிடும்னு வாத்தியார் சொன்னா மதிக்க மாட்டான்;
வெட்டி பசாங்களோட சேராதடானு அப்பா சொன்னா 'பெரிசு பேச்ச பாரு' னு  கண்டுக்க மாட்டான்;
'டேய் இந்த பொண்ணு வேணாம்டா. அவுங்க அப்பன் அருவள எடுப்பாண்டா' னு நண்பன் சொன்னா கேக்காம போயி லெட்டர் கொடுத்து  அடி வாங்கி வந்து நிர்ப்பான்;
'இந்த கேள்வி கேட்க படாத வருசமே இல்ல. மறக்காம மார்க் பண்ணிக்கங்க'னு லேச்சரர்  சொன்னத கூட கேக்க மாட்டான்;


இப்படி எப்பவுமே யாரு பேச்சையும் கேக்காதவன் - திடீர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணுற வயசுல  - கன்ன மூடிகிட்டு ஒருத்தன் பேச்ச கேப்பான் !! யாரு பேச்சனு கேக்குறீங்களா ?? அவரு தானுங்க f=ma, cos,sin,tan, இண்டகிரேசன், டிபாரன்சியேசன் எதுவுமே இல்லாம - சூரியனுக்கும், நிலவுக்கும், புதனுக்கும் உள்ள தூரத்தையும் அது உங்க மேல செய்ற ஆதிக்கத்த ஒன்பது கட்டத்துல விளையாடி கட்டும் நம்ம ஜோஸ்யகாரு.

கணக்கு வாத்தியாரு போடும் மேட்ரிக்ஸ் கூட்டல் கணக்குக்கே (அதுவும் 2X2 மேட்ரிக்ஸ்) பத்து தடவ சந்தேகம் கேக்குரவனுங்க, நம்ம ஜோச்யகாரு சொல்லும் 'மூணாம் இடத்தில் இருக்கும் சந்திரன் ' னு சொல்லுறதா ஆடாம அசயமா கேட்டுகிட்டே இருக்குரானுங்க. 

எல்லாரும் ஜாவா படிச்சுட்டு அஞ்சு டிஜிட்-ல சம்பளம் வாங்குரப்ப - நீ ஹர்ட் வேர் சாப்புனு சொல்லி டைல்ஸ் வித்து கிட்டு இருக்குற  . 'டேய் உனக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குறதே ரெம்ப கடினம்டா. அதுல எல்லாம் புடிச்சிருந்தும் ஜாதகம் ஒத்து வரலைனு சொல்லுறது எல்லாம் ரெம்ப திமிரு' சொன்னா கேக்க மாட்டேங்க்ரானுங்க. "சும்மா இருடா..ஜாதகம் பாக்குறதுல தான் இம்புட்டு கல்யாணம் சக்சசா இருக்குன்னு" பதில் வேற. என்னத்த சக்சஸ் ?

ஏன்டா பெரந்ததுல இருந்து "கட்டிகுடுக்க போறவ ', 'பொண்ணு ' வேற வெட்டுக்கு என்னிக்காவது போறவா, கட்டிக்க போறவன் எப்படி வச்சிக்க போரானோனு'  நாள் தோறும் ஒப்பாரி வச்சு பாட்டு படி பொண்ண வளர்க்குறீங்க'. 'அங்க போகாத, இங்க போகாத , அண்ணன் கடைக்கு போவான், அப்பா ட்ரச்ஸ் வாங்கி வருவாருன்னு -பொண்ண எங்கயும் போக விடமா - யாரிட்டையும் பேசவிடாம அடக்கி வச்சிருறீங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே 'அடக்கம் ஒடுக்கம் ' னு ஒரு வாய்ப்பாடு கொடுதிருரீங்க. விவாகரத்து, மறு திருமணம் எல்லாத்தையும் சமுதாய இழிவா படம் போட்டுறீங்க. தனக்கு புடிச்ச பய்யனோட பொண்ணு வாழ ஆசைபட்டா அதுக்கு பேரு "காதலனுடன் ஓட்டமாம்', கல்யாணத்துக்கு அப்புறமா காதல் வந்தா அதுக்கு பேரு 'கள்ள காதலாம்' . நீங்களா ரெண்டு பேரை சேர்த்து வச்சா அதுக்கு பேரு திருமணம். அவுங்களா முடிவெடுத்து செஞ்சா கள்ள காதல் .  பாதிக்கு மேற்பட்ட பொண்ணுங்களுக்கு பினான்சியல் சுதந்திரமும் கிடையாது . வேல பார்த்தலும் கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே   ரிசைன்  பண்ணிடுராளுக - அல்லது பண்ண வச்சிருறீங்க. 280 நாளுல குழந்தை வேற பிறந்திடும்    ... இப்படி எல்லாம் 'கலாச்சாரம்' னு போர்ட் போட்டு  செட் போட்டு வச்சிட்டு கல்யாணம் பண்ணினா - சுத்தமா புடிக்காட்டி கூட குடி இருந்து தான் ஆவா...  ??

அதெல்லாம் உனக்கு தெரியாது .... astrology ன்றது சயின்ஸ் ..நீ விதண்டாவாதம் பேசுற !!

யாரு நானா.. டேய் இயற்பியலும் அறிவியல், வேதியலும் அறவியல். பூமிய விட்டு வெளியே ராக்கட் போகனும்னா நொடிக்கு சுமார் 12 கிலோமீட்டர் வேக  முடுக்கதுல போகணும்னு ஒருத்தன் கண்டுபுச்சு சொல்லுறான் .. அதே மாதிரி இந்தியா காரன் ராக்கட் விட்டாலும் போகும், அமெரிக்கா காரன் விட்டாலும் போகும், ரசியா காரன் விட்டாலும் போகும்...  நீ  என்னன்னா  'ஒருத்தன் அம்மாவே  மீண்டும் ஆட்சிக்கு வருவாங்கன்னு சொல்லுறதையும்  இன்னொருத்தன் இல்ல கலைஞர் தான் வருவார்னு சொல்லுறதையும் ' அறிவியல் முலாம் பூசுர!  . ஆனா ஒன்னு நீங்க எல்லாபேருமே ஒரு விஷயத்துல தெளிவா  இருந்தீங்க . காங்கிரசோ, பா மா கா வோ, பா ஜா கா வோ வராதுன்றதுல   . பாவம்  அவனுங்க யாருக்குமே நல்ல ஜாதகம் இல்ல . என்ன பண்ணுறது !!!

சூரியன், நிலா எல்லாம் பூமி, சுக்கிரன், வெள்ளி மாதிரி கோள் கிடையாது. எல்லா கோளும் சூரியன மய்யமா வச்சு சுத்துது, அப்புறம் கோடானு கோடி நட்சத்ரம் இருக்கு - அது 27 அல்லது 27 வகையோ கிடையாது.. முந்தா நேத்து மியன்மார்ல லட்சம் பேரு செத்து போய்ட்டான், நேத்து சீனால ... அப்படியுமாட இந்த கருமத்த நம்புற ???

'உனக்கு வேற வேலையே இல்ல. நான் கிளம்புறேன் '

ஆமாம்  எனக்கு தான் வேற வேலை இல்லையே. அதனால் சுவராச்யமா இதுல எதாவது இருக்கா என்று தெரிய ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தேன். எனக்கு தெரிந்த  எல்லா வலைத்தளங்களிலும்  12 - மே - 2008, திங்கள் கிழமைக்கு அல்லது அந்த வாரத்திற்கு ( இந்த பதிவோட முதல் பிரதி நாள் ) மேஷ ராசிக்கு என்னனு போட்டிருக்கங்கனு பார்ப்போம்.

தினமணி என்ன சொல்லுதுனா:
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சில சிக்கல்களைச் சந்திப்பார்கள். எனவே கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள்.

வேப்டுனியா என்ன சொல்லுதுனா:
கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்

ஆக இனி வியாபாரிகள் ராசி பலன் பார்க்க வேண்டுமானால், முதலில் எந்த ராசிபலன் நல்ல பலனை சொல்லும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதை மட்டும் படிக்க வேண்டும்.

ராசி பலன் பக்கங்கள் எல்லாம்  நடக்கலாம், ஏற்ப்படலாம் போன்ற பம்மாத்து வார்த்தைகளாக இறைந்து கிடக்கிறது.
இருந்தாலும் மீண்டும்  படிக்கலானேன்.

தினமணி :
விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு லாபம் கிட்டும். உங்களின் பழைய கடன்கள் வசூலாகும். உங்களின் பொருளாதார நிலைமை சீரடையும்.

குமுதம் ஜோதிடம்:
விவசாயத்துறையினர் : செவ்வாய் அர்த்தாஷ்டமத்தில் கேதுவுடன் சஞ்சரிக்கிறார். எனவே பூமி, நிலம், வீடு இவற்றால் ஆதாயங்களை எதிர்பார்க்க முடியாது. தொழிலிலும் சற்று பின்னடைவு காணப்படும். வருமானம் சிறிது குறையக்கூடும்.

டினபூமியில் ஐயோ நான் மேஷ ராசி இல்லாமல் போய்ட்டேனே என எல்லோரையும் ஏங்க  வைக்கும் விதமாக  "தேவைப்படும் பொழுது எல்லாம் இந்த வாரம் பணம் கிடைக்கும்."  என உள்ளது.

படிச்ச நாலு வலிலேயே இம்புட்டு காமெடி யா ??

மொத்தம் நீங்கள் செய்ய வேண்டிய ( செய்திருக்க வேண்டிய ) பரிகாரங்கள்:
புதனன்று பெருமாளை தரிசிக்கவும். நவக்கிரகப் பிரதட்சிணம் செய்யவும்.

கீழ்க்கண்ட பாடலைத் தினமும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்ராதித்ய விமர்தனம்
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்
தம்ராஹ§ம் பரணமாம்யஹம்.

முருகர் வழிபாடு சனிப்ரீதி.
விநாயகருக்குஅருகம் புல் மாலை சாற்றி வழிபடவும்.
செவ்வாய் பலம் இழக்கும் இந்த மாதத்தில் தேக நிலை சீராகவும், செல்வ நிலை பெருகவும் அங்காரகனை வழிபட்டு வருவது நல்லது.

வாரத்துக்கு எழு நாட்கள் தான் மறந்து விடாதீர்கள்.

மிச்ச தகவல்களை வைத்து  நம்மளும் கொஞ்சம் கட்டம் போட்டு பாப்போம் என்று பார்த்தேன்.   நல்ல நாள் கணித்த மூண்டு ஜோதிடர்கலுமே தாங்கள் சொன்னது தான் நல்ல நாள் என்று அடம் பிடிக்கிறார்கள். யாரும் மற்றவர் கணித்ததை ஒத்துக்கொள்ள மறுக்கிராகள்.  மேஷ ராசிகரகளின் அதிர்ஷ்ட வண்ணத்தை பார்த்தல் சிரிப்பு வரவில்லை ?? எல்லோரும் ராமராஜன் கலரில் தான் சட்டை போடணும் ...

அதிர்ஷ்ட

தினமணி

வெப்துனியா       யாஹூ தினபூமி

தந்தி

குமுதம்  

நாள்

10, 13       12 14,15,17  

எண்

  8   1,9 1,5 3,5  

வண்ணம்

  வைலெட்,ஊதா

சிவப்பு,வெள்ளை

  ரோஸ்,பச்சை    
               

 

கடைசியாக, தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழக அரசு எங்கள் வரிப்பணத்தில் 'ஜோதிட வாரியம்' ஒன்று அமைக்க வேண்டும். அதில் எல்லா ஜோதிடர்களையும் உறுப்பினராக்க வேண்டும். எல்லா ஜோதிடர்களையும் எங்கள் நலனிர்க்காக கூடி ஒருமித்த கருத்தில் ஜோதிடம் - ராசி பலன் எழுத சட்டம் போட வேண்டும்.

குறிப்பு:
குமுதம் ஜோதிடம் :
கலைத்துறையினர் : நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். வசதிகளும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.

ஜோதிடமும் கலை என்பதால், அதுவே இந்த பதிவின் தலைப்பும்

11 comments:

said...

:-)))))

இன்னும் எல்லா டிவி சேனல்களிலிருந்து எடுத்தால், எல்லா நாட்களும், வண்ணங்களும், திசைகளும் வந்துவிடும் போலிருக்கே.....:-)))

said...

// :-)))))

இன்னும் எல்லா டிவி சேனல்களிலிருந்து எடுத்தால், எல்லா நாட்களும், வண்ணங்களும், திசைகளும் வந்துவிடும் போலிருக்கே.....:-)))//

சரியாக சொன்னீர்கள் ...தங்களது வருகைக்கும் பினூட்டதிர்க்கும் நன்றி .

மேலுள்ள HTML கட்டங்கள் சரிவர தெரியாததால் - அதன் டெக்ஸ்ட் வடிவம்

அதிர்ஷ்ட தினமணி வெப்துனியா யாஹூ தினபூமி தந்தி குமுதம்

நாள் 10, 13 12 14,15,17

எண் 8 1,9 1,5 3,5

வண்ணம் வைலெட்,ஊதா சிவப்பு,வெள்ளை ரோஸ்,ப

said...

கை எழுத்து நல்லா இல்லையின்னா, தலையெழுத்து நல்லாயிருக்கும்மின்னு சொன்னதாக நினைவு...மாத்திட்டாய்ங்களா...

//கை எழுத்து மோசமா இருந்தா தலை எழுத்து மோச மா போயிடும்னு //

எதை எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லுறாங்களோ, அங்கே எல்லாம் விவகாரமிருக்குன்னு அர்த்தம்.

நடந்தால் இறைவன் அருள்/ஜாதகம் சொல்லுது. நடக்காட்டி விதி. இது தான் அதன் அடிப்படை விதிகள்.

said...

களப்பிரர் 8 ம் இடத்தில் உங்களுக்கு சனி இருக்கிறார், 9 ம் இடத்தில் குரு இருக்கிறார் 10 ம் இடத்தில் கிரி :))) இருக்கிறார் எனவே தான் நீங்கள் இப்படி கூறிக்கொண்டு இருக்கிறீர்கள், எனவே இந்த தோஷம் கழிய நீங்கள் தினமும் குறைந்தது 4 பதிவாவது போட்டால் தான் தோஷம் நீங்க வாய்ப்புள்ளது :-)))

said...

மேட்டர் தெரியுமா நண்பா, நாளைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஜோசியரைப்போய் பார்க்க போகிறன். அவரைப்பத்தி மக்கள் குடுக்குற பில்டப் ரெம்ப ஓவரா இருக்கு.

என்னனு ஒரு கை பாத்துட வேண்டியது தான்.

said...

hmubaa: அன்பிற்குரிய களப்பிரர், நட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளை இப்போதுதான் வாசிக்க நேர்ந்தது. உங்கள் சமூகத்தின் மீதான தார்மீகக் கோபமும் அதைச் சொல்லும் விதமும் பிடித்திருக்கிறது. மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள். தனித்துவமான அங்கத நடை... சினேகபூர்வம், முபாரக்

http://arasanagari.blogspot.com

(அவரால் பின்னுட்டமிட முடியவில்லை என்பதால் பிராக்சி கொடுத்திருக்கிறேன்.. :) )

said...

TBCD, கிரி மற்றும் முபாரக் அவர்களின் வருகைக்கும், ஊக்குவித்தளுக்கும் மிக நன்றி !

//கை எழுத்து நல்லா இல்லையின்னா, தலையெழுத்து நல்லாயிருக்கும்மின்னு சொன்னதாக நினைவு...மாத்திட்டாய்ங்களா..//

"கை எழுத்து நல்ல இருந்தா, பரிச்ச பேப்பரை படிச்சு முட்டை மார்க் போடுறது ஈசி னு " எங்க பள்ளிகூட வாத்தியார் மாத்தி சொல்லிட்டாரு போல !!!

//நடந்தால் இறைவன் அருள்/ஜாதகம் சொல்லுது. நடக்காட்டி விதி. இது தான் அதன் அடிப்படை விதிகள்.//

நான் இம்புட்டு பெரிசா எழுதினத ரெண்டே வரில சொல்லி கலக்கிட்டீங்க !!

//10 ம் இடத்தில் கிரி :)))//
நாங்க சனிக்கே பெப்பே காட்டுரவனுங்க .. இதுல கிரி எம்மாத்திரம் ...

//தினமும் குறைந்தது 4 பதிவாவது போட்டால் தான் தோஷம் நீங்க வாய்ப்புள்ளது :-)))//
நான் பொட்டிய கட்ட வேண்டியது தான். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

said...

//மேட்டர் தெரியுமா நண்பா, நாளைக்கு ஒரு கம்ப்யூட்டர் ஜோசியரைப்போய் பார்க்க போகிறன். அவரைப்பத்தி மக்கள் குடுக்குற பில்டப் ரெம்ப ஓவரா இருக்கு.

என்னனு ஒரு கை பாத்துட வேண்டியது தான்.//


கருப்பா,

பாக்குறது பாக்குற நல்ல மெய்ன் பிரேம் வச்சிருக்குற ஜோச்யரா பாரு ... உனக்கு இருக்குற கண்டத்துக்கு அப்ப தான் கொஞ்சமாவது கணிக்க முடியும்

said...

அப்பாடா! உங்கள மாதிரி சிலராவது இருப்பது கண்டு மகிழ்ச்சி. உங்கள் 'ஜாதி' பெருக வாழ்த்துக்கள்.

//அனானியாக இல்லாமல் இருக்க முயற்சி செய்யவும். //
- இதைக் கண்டும் மகிழ்ச்சி

said...

மதுரை - அயர்லாந்து ... ம்ம்..ம்.. கிளப்புங்க!

:)

said...

தங்களது வருகைக்கும் பின்னூட்டதிறக்கும் நன்றி, தருமி யாரே !!