Saturday, May 24, 2008

சுவிஸ் வங்கி கணக்கு சூட்சுமங்கள் ..!

நம்ம வெள்ளைகார தொரைங்க ரெம்ப புத்திசாலி. அவனுங்களுக்கு தெரியும் நம்மட்ட என்ன வீக் பாயிண்ட்-னு. அத வச்சு அவுங்க சரக்க நம்ம ஆளுங்க கிட்ட - முக்கியமா அரசியல் வாதிக கிட்ட -  விப்பானுங்க.வித்தலும் வாங்கினாலும் ரெண்டு பக்கமும் நல்ல லாபம் பாப்ர்ப்பது தான்  தான் என்று அவனுக்கு தெரியாதா..

'சார் இந்த திட்டத்துக்கு ஒத்துக்கங்க. எங்க கிட்ட ஒரு தொழில் நுட்பம் இருக்கு. அத வச்சு  உங்க ஊர்  காத்துல இருந்து கருவாடு தயாரிச்சு அத டப்பா நாநூருவானு விப்போம். உங்க ஊரு  காத்து தான் ரெம்ப நாரி போய் இருக்குறதால, உங்க ஊர்ல மட்டும் தான் இந்த தொழிற்சாலை லாபமா ஓடும்.  அத நீங்க உங்க ஊர்ல இருக்குற சூப்பர் மார்க்கெட்லே உங்களுக்கு புடிச்ச ரேட்டுக்கு வித்துக்கங்க'

'கருவாட அம்புட்டு காசு குடுத்து வாங்குவாங்களா'

' ஏன் மாட்டாங்க. எங்க ஆளு அதுக்கும் உதவி பண்ணுவாங்க' உங்க ஊரு சூப்பர் நடிகர் இல்ல கிரிக்கெட் காரனுங்க வந்து " இந்த கருவாட பாத்தபின்னாடி வெஜிடேரியனா இருந்த நானே கருவாடு சாம்பார் தான் சப்ட்றேன்னு ' னு ஒரு விளம்பரம் போட்டா எல்லாம் நடக்கும். அப்புறம் சரக்கெல்லாம் நீங்களே தான விக்குறீங்க. உங்க பிராண்டு தான? இனிமே சைட் டிஷும் உங்க பிராண்டு தான்'.

'கலக்கல். ஆனா நான் இந்த அதிகரிகள, புட் ரெகுலேசன் ல இருக்குற  பொரம்போக்குகள ...

'கவலைபடாதீங்க சார். உங்க கிட்ட ஒரு 10 கோடி ரூவாய்க்கு அமெரிக்கா டாலரா தந்திடுறோம். இந்த டீல முடிசிடுங்க'

"சரி, சமாளிச்சு பாக்குறேன். ஆமா டாலர வச்சு நான் என்ன பண்ணுவேன். ரூபாய கொடுத்துடுங்க "

"ஹிஹி.. அம்புட்டு காச நீங்க எப்படி சமாளிப்பீங்க... உங்க கிட்ட தான் ஊருக்கு ஒரு பங்களா, பங்களாவுக்கு ஒரு நடிகை, எஸ்டேட், காரு , தெருன்னு அம்புட்டும் இருக்கே... எதாவது வாங்குனா மாட்டிக்க மாட்டீங்க ... எப்பாவது எதிர்கட்சி காரன் ஆட்சிக்கு வந்தா என்ன ஆகும் "

"அதுவும் கரைகட்டு தான். நீங்களே அத நான் வச்சு என்ன பண்ணலாம்னு சொல்லிடுங்க"

" சுவிஸ் பேங்க் அக்கௌண்ட்ல போட்டுடுங்க"

"சார், நான் புது அரசியல் வாதி. இதெல்லாம் எனக்கு தெளிவா தெரியாது. உதவி செஞ்சீங்கன்னா நல்ல இருக்கும்"

"செஞ்சுட்டா போச்சு . இங்க பாஸ்போர்ட் காப்பி ஒன்னு போதும். அக்கவுண்ட் ஒப்பன் பண்ண. எல்லாம் போஸ்ட்லேயே முடிஞ்சிடும். எங்க ஊர் சட்டப்படி உங்க கணக்குல எம்புட்டு காசு இருக்குன்றத யாரிட்டையும் சொல்ல மாட்டோம். அதனால அந்த ஆண்டவனே வந்தாலும் கண்டுபுடிக்க முடியாது. உங்களுக்கு எப்ப காசு தேவைனாலும் உங்க  லோக்கல் பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொன்னா அதுக்கு அனுப்பிடுவோம். இல்லாட்டி நீங்களே எங்க பெங்க்குக்கு வந்து உங்க பாஸ்போர்ட்  காமிச்சு வாங்கிக்கலாம்"

"நீங்க அனுப்புற மன்த்லி ஸ்டேட்மென்ட் உளவு துறை கண்டுபுடிசிடுமே"

"அதெல்லாம் திரை கதைக்கு தான். உங்க ஊரு சுப்ரீம் கோர்ட்டு - ஏன் பார்லிமென்ட் தீர்மானம் போட்ட கூட நாங்க ஸ்டேட்மென்ட் அனுப்ப மாட்டோம். உங்களுக்கு வேணும்னா அனுப்புவோம். "

"எனக்கு அனுபிச்சுடதீங்கப்பா.. நான் வரி கட்டாத பணத்தையும் போட்டுக்கலமா, இந்த அக்கவுண்ட் லேயே"

"சார், அதுக்கு தான் இந்த மாதிரி அக்கவுண்டே நாங்க வச்சிருக்கோம் . எங்க சட்டப்படி நீங்க வரி கட்டமா எம்புட்டு காச வச்சிருந்தாலும்  - அது சட்டப்படி குற்றமே இல்லை. ஆனா வரி கட்டுறப்ப பொய் சொல்லி மாட்டிகிட்டா தப்பு "

"புரியலப்பா "

"இப்ப நீ வாங்க போற கோடி ரூவாய யாரு கண்ணுலையும் படமா வரி கட்டாம வச்சிருந்தா தப்பு இல்ல. ஆனா என்னிக்காவது நீ வரி கட்டுறப்ப சிவாஜி படம் பாக்க வச்சிருந்த பணம் ஒரு கோடி , அதுக்கு வரினு நாப்பதாயிரம் கட்டுறீங்கனு வச்சுகோங்க, அது தப்பு."

"நல்லா இருக்கேப்பா உங்க ஊரு சட்டம். எனக்கு சீகிரமா ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல அந்த காச போட்டுருப்பா. " நீங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னடி ஒரு கேள்வி ??

என்னது ?

யாருக்கும் சொல்ல மட்டீங்கள ?

சார், இந்த ஒரே மேட்டர வச்சு தான் எங்க நாடே கோடீஸ்வர நாடா இருக்கு... உங்க எல்லபேறு காசும் எங்க கிட்ட பத்தரமா இருக்கு. அத வச்சு நாங்க இன்சூரன்சே, லோன் னு சம்பரிப்போம் ...அதனால பேங்க் எல்லாம் பெரிய பணக்கார நிறுவன இருக்கு..

ஆனா எனக்கு ஒரு டவுட்... இதே மாதிரி அக்கவுண்ட் தான் நீங்களும் வச்சிருக்கேங்களா ?

நாங்க உங்க அளவுக்கு அதிர்ஷ்ட சாலி இல்லை சார். எங்க கோர்ட் ஆடர் போட்டா,  எங்க பேங்க் விவரத்த போலீச்ட்ட சொல்லி ஆகணும். எங்க ஊரு ஆளுங்களுக்கு எல்லாம் இது பாதுகாப்பு கிடையாது ...

ஆனா நீ சுவிட்சர்லாந்துகாரன் கிடையாதே...அமெரிக்ககாரன் தானே ???

மொதல்ல எங்களுக்கும் அதே பாதுகாப்பு தான் இருந்துச்சு. இப்ப தான் எங்க நாடு சுவிட்ச்ர்லந்துட்ட பேசி 'எங்களுக்கு வங்கி  விவரம் சொல்லல' நடக்குறதே வேரனு சொல்லிடுச்சு... அதனால அம்புட்டு பாதுகாப்பு இல்ல .

அட பாவமே.. அமெரிக்கா காரன் எல்லாம் அரசியல் வாதியாக இருந்தா பாவம் போலியே ...
ஆமாம் சார், அமெரிக்கா மட்டும் இல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாதிரி சண்ட போட்டு ரகசியம் தெரிஞ்சுகிற உரிமைய வாங்கிடுச்சு...

அப்ப   நாங்க மட்டும் தான் லக்கியா ?

அப்படியும் சொல்லலாம். எங்க ஊர்ல வரி ஏய்ப்பு எல்லாம் கஷ்டம் சார். எல்லாம் கண்டு புடிசிடுவாங்க. அப்புறம் சட்டம் எல்லாம் தன் கடமைய வேகமா செய்யும். அதனால மாட்டுனா தப்பிகிறது கஷ்டம்ன்றதால நாங்க இதெல்ல்லாம் ரெம்ப பெரிசா எடுதுகிறது கிடையாது. எங்க ஊர்ல தொழில் அதிர்பர்களுக்கு மட்டும் தான் இந்த வசதி. அதுவும் சட்டபூர்வமாக . நீங்க ரெம்ப லக்கி சார். உங்க ஊர்ல லஞ்சம்  வாங்குறது ஈசி, கொடுக்குறது யாருக்கும் தப்புனே தெரியாது, மறைக்குறது ஈசி, அப்படியே மாட்டுனாலும்  உங்க பேரன் கூட உயிரோட இருக்கா மாட்டான் - தீர்ப்பை பாக்குறதுக்கு. எங்க பெங்க்குக்கு இந்த மாதிரி நாடுகள் தான் உலகத்துல வேணும்...

ஹிஹி... அப்புறம் சார், எதோ உங்க ஊர்ல தொழில் அதிபர்களுக்கு சலுகைன்னு சொன்னேகளே.. அது என்ன ?? ஏன்னா  என் பய்யன் தொழில் அதிபரா ஆகபோரான் ...உபயோகமா இருக்கும்ல

உங்க பய்யன் ஒரு 10 கோடி வச்சிருப்பாரங்க  சார் ?

சார் விளையாடதீங்க.. அது அவன் வச்சிருக்குற கார செகண்ட் ஹெண்ட்ள வித்தலே வரும் ...

நல்லதா போச்சு. எண்ட அம்புட்டு சொத்து இருக்குன்னு அவர் கான்பிசாருனு வச்சுகோங்க - மால்டா, மொனாகோ, போர்ச்சுகல் எப்படி நெறைய நாடு இருக்கு...  அவுங்க பணகரனுங்களுக்கு உடனடியா வரவேற்ப்பு கொடுத்து அந்த நாட்டு பாஸ்போர்ட்டையும் கொடுத்துடுவாங்க ...அப்புறம் நீங்க அங்க இருக்கணும்னு எல்லாம் கூட அவசியம் இல்ல. வருஷம் ஒரு தடவ போன போதும். இதுக்கப்புறம் னெங்க உலகத்துல எந்த மூலைல இருக்குற சொத்த வித்தாலும் அந்த நாட்டுக்கு அதோட லாபத்துல வரி கட்டனும். ஆனா, இந்த மாதிரி தொழில் அதிபர்களுக்கு  கட்ட தேவை  இல்ல னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால நீங்க வரி கட்ட தேவை இல்ல. நாடும் காசும் தான் மாறுமே ஒழிய, கான்சப்ட் மாறது ...

எனக்கு இம்புட்டு உதவி செய்யுற..உனக்கு, என்னால எதுவும் பன்னமுடியலையே யப்பா ....
என்ன பண்றது சார். எங்க சட்டம் அப்படி. நாங்க உங்ககிட்ட பண்ணுறத, எங்க கிட்ட பண்ணுறதுக்கு  ஜெர்மன் நாட்டுக்கு  பக்கத்து நாடான லீச்ட்டேன்ச்டைன் முயற்சி பண்ணுது. அத விட போறது இல்லனு எல்லாரும் ஒத்தகாலுல இருக்கோம்... அது என்ன ஆகுதுன்னு பாப்போம். லக் இருந்தா நாங்களும் அங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி வைப்போம் ...

சரிங்க சார், உங்க உதவிக்கு நன்றி ... ரெண்டு நாள்ல தகவல் சொல்லுறேன் .

10 comments:

said...

கொடுமை

Anonymous said...

சரிப்ப்பா களப்பிரா

நீ யெந்த பாங்கில் கணக்கு வச்சிருக்கீக? வெளிநாடு போனதும் ஆலே மாறிப்புட்டே

நெரைய பணம் ஈக்குதாப்பா?

கொஞ்சம் கடன் வேனும்ப்பா பிலீஸுப்பா

said...

இம்புட்டுதானா மேட்டரு??

:))))))))))

said...

ஸ்டார் வார வாழ்த்துக்கள்

said...

சரியாகச் சொன்னீர்கள். ..:)

Anonymous said...

super naration.... Keep it up....

said...

சீக்கிரம் கணினிக்கு மூட்டைய கட்டிட்டி... குதிச்சிருடா கருப்பானு... அரசியல்ல குதிச்சிட வேண்டியதுதான்!! அந்த யாவாரந்தேன் நம்மூர்க்குள்ள நல்லா நடக்குது!!

said...

நல்லாத்தே சொல்லியிருக்கீக.

said...

நண்பர்களின் வருகைக்கும், பின்நூட்டதிர்க்கும், நான் எழுதிய எல்லாவற்றையும் மெனக்கெட்டு படித்ததற்கும் நன்றிகள் கோடி ...

//கொஞ்சம் கடன் வேனும்ப்பா பிலீஸுப்பா//

அனானிய இருந்து கடன் கேட்டா நான் யாருக்கு தரதாம் ...

கருப்பா, என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கப்பா

said...

இவ்ளோ விவரம் தெரிஞ்சு வைச்சுருக்கீங்க, நான் ஆரம்பிக்கிற கட்சி ஆட்சிய பிடிச்சதும் நீங்கத்தான் நம்ம வெளிநாட்டு முதலீட்டுத்துறை அமைச்சர். ஆனா ஒரு கன்டிசன், எல்லாத்தையும் உங்க பேர்ல முதலீடு செஞ்சுர கூடாது. 50:50. சரியா ?